கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் 200வது கொடியேற்ற விழா கொட்டும் மழையுடன் இணைந்து ஆரம்பமானது..!

நூருள் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ் நானிலம் போற்றும் நாகூர் நாயகம், கருணைக் கடல், குத்புல் மஜீத் ஹழ்றத் செய்யிதுனா மஹான் சாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் அன்னவர்களின் நினைவாக அம்பாறை மாவட்டம்கல்முனை மாநகர மக்களால் நடாத்திவரும்கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹாவில் 200 வது கொடியேற்று விழா, இன்று (04) ஆரம்பமானது. கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா ஷரீபின் தலைவர் டாக்டர் அல்ஹாஜ் எஸ்….

Read More

சுசிலின் பதவி நீக்கம் குறித்து நான் கவலை அடைகின்றேன் – அமைச்சர் டலஸ்..!

“ஜனாதிபதி நினைத்தால் என்னையும் பதவி நீக்கம் செய்யலாம். அதற்கான அதிகாரம் அவருக்கு உள்ளது. இது கட்சியால் எடுக்கப்பட்ட முடிவு அல்ல. சுசில் பிரேமஜயந்த எனது நண்பர். அவரின் பதவி நீக்கம் தொடர்பில் நானும் கவலை அடைகின்றேன்.” இவ்வாறு அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இறைய ஊடகவியலாளர் மாநாட்டின்போது, ‘அரசை விமர்சித்ததால் இராஜாங்க அமைச்சுப் பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்த நீக்கப்பட்டுள்ளார். அரசை விமர்சிப்பதற்கு ஆளுங்கட்சியில் உள்ளவர்களுக்குத் தடையா?’ என எழுப்பப்பட்ட கேள்விக்குப்…

Read More

“கூட்டு ஆவணம் விரைவில் கைச்சாத்திடப்படும்; வடக்கு, கிழக்கில் முஸ்லிம்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும்” – இரா. சம்பந்தன்!

இந்தியாவுக்கு அனுப்பவுள்ள கூட்டு ஆவணத்தில் கைச்சாத்திடுவதில் எவ்வித சிக்கலுமில்லை என்றும் கூட்டு ஆவணம் விரைவில் இந்தியாவுக்கு அனுப்பப்படும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். அந்த ஆவணம் தொடர்பான செயற்பாடுகள் இன்னும் ஓரிரு தினங்களில் நிறைவடையும் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார் அவர், தமிழ் – முஸ்லிம் மக்களின் ஒற்றுமை மிகவும் அவசியம் என்பதனால், அரசியல் கோரிக்கைகளை முன்வைக்கும் போது, இந்த விடயத்தில் அதிக கரிசனை செலுத்துவதாகவும் குறிப்பிட்டார். வடக்கு, கிழக்கில் முஸ்லிம்…

Read More

“நாட்டிலே தேசிய பாதுகாப்பு இல்லை” – கிண்ணியாவில் சஜித் தெரிவிப்பு!

நாட்டின் தேசிய பாதுகாப்பை நிலை நாட்டுவோம் என்று பதவிக்கு வந்தவர்கள்  இன்று நாட்டின் சகல  பாதுகாப்பையும் அடித்து உடைத்து முடக்கி விட்டார்கள் என எதிர்க்கட்சி தலைவர் சஜித்  பிரேமதாச தெரிவித்தார். கிண்ணியா அலிகார் மகாவித்தியாலயத்தில் இன்று (4) நடைபெற்ற தொழில்நுட்ப ஆய்வுக் கூடங்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் உரையாற்றுகையில், இந்த நாட்டிலே தேசிய பாதுகாப்பு இல்லை, நாட்டுக்கு  மக்களுக்கு பாதுகாப்பில்லை, சமையல்  எரிவாயுக்கு  பாதுகாப்பில்லை, உணவுக்காக…

Read More

புத்தாண்டில் ஆசி வேண்டி பாராளுமன்ற வளாகத்தில் பூஜை!

2022 புத்தாண்டில் ஆசி வேண்டி பாராளுமன்ற வளாகத்திலுள்ள ஜய மஹாபோதிக்கு அருகில் விசேட போதி பூஜை நிகழ்வு இன்று (04) முற்பகல் இடம்பெற்றது. கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெற்ற இந்த பூஜையை கோட்டே சுனேத்ராராமாதிபதியும் கொழும்பு, களுத்துறை பகுதிகளின் தலைமை தேரரும், பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழக ஆளுநர் சபை அங்கத்தவரும், கல்வி அமைச்சின் பௌத்த ஆலோசகர் குழுவின் உறுப்பினருமான நாலந்தா பல்கலைக்கழக தர்மாச்சாரியார் வணக்கத்துக்குரிய அலிக்கேவெல சீலானந்த தேரர் நடாத்தினார். சபை…

Read More

மருதமுனை – பாலமுனை பிரதேச வைத்தியசாலைகளில் பொது வைத்திய சேவை மீள ஆரம்பம்!

மருதமுனை – பாலமுனை பிரதேச வைத்தியசாலைகளின் நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்துள்ளார். மருதமுனை மற்றும் பாலமுனை பிரதேச வைத்தியசாலைகள், புத்தாண்டு முதல் கொவிட் நோயாளர்களின் பராமரிப்பு சேவையில் இருந்து, பொது வைத்திய சேவைக்கு மீள மாற்றப்பட்டுள்ளது. எனவே, மருதமுனை மற்றும் பாலமுனை பிரதேச வைத்தியசாலைகளில், பொதுமக்கள் பொது வைத்திய சேவையை வழமைபோல பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More

விரைவில் மாகாண சபை தேர்தல்!

புதிய சட்டம் தயாரிக்கப்பட்டதன் பின்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும் என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். புது வருடத்தை முன்னிட்டு, அமைச்சு பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வின் பின்னர், மாகாண சபைத் ​தேர்தல் தாமதமாவது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தேர்தல் நடத்த அரசாங்கம் தயாராக உள்ளது. தேர்தல் மாற்றம் தொடர்பாக குழுவின் தலைவர் என்ற வகையில் அங்கும் கட்சிகளின் கருத்து கோரப்பட்டது. தவறான சட்டத்திற்கு அன்று கட்சிகள்…

Read More

அதிரடி பதவி நீக்கம் குறித்து சுசில் பிரேமஜயந்த கருத்து!

கல்வி சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, உடன் அமுலுக்கு வரும் வகையில், ஜனாதிபதியால் இன்று காலை (04) பதவி நீக்கம் செய்யப்பட்டார்.அண்மைய நாட்களாக அரசாங்கத்தின் செயற்பாடுகளை சுசில் பிரேமஜயந்த கடுமையாக விமர்சித்து வந்தார். இதனையடுத்து அவர் இன்று பதவி நீக்கப்பட்டிருந்தார். பதவி நீக்கம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறியதாவது, “நான் பதவி நீக்கப்பட்டதை ஊடகங்கள் வாயிலாகவே அறிந்துகொண்டேன். எதற்காகப் பதவி…

Read More

TIK TOK காணொளியால் விபரீதம்; சிறுவன் படுகொலை!

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில், TIK TOK காணொளியால் ஏற்பட்ட மோதலால், வெல்லம்பிட்டியைச்  சேர்ந்த 17 வயதான அப்துல் லத்தீப் படுகொலைச் செய்யப்பட்டுள்ளார். கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவில், மாதம்பிட்டிய பட்டுமக பிரதேசத்தில் நேற்று (03) திங்கட்கிழமை இந்தக் கொலைச் சம்பசம்  இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கொலை செய்யப்பட்ட சிறுவன், மாதம்பிட்டி வீதியில் ஹேனமுல்ல – ரந்திய உயன தொடர்மாடி குடியிருப்புக்கு  தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அவர்களை பின்தொடர்ந்து வந்த மற்றுமொரு தரப்பினர், TIC…

Read More

வடக்கு கிழக்கு இணைப்பை ஏற்க முடியாது : தமிழ் கட்சிகள் கிழக்கு மாகாணம் வேறு, வடக்கு மாகாணம் வேறு என்பதை உறுதிப்படுத்த வேண்டும் – ஹரீஸ் எம்.பி..!

நூருள் ஹுதா உமர். தமிழ் கட்சிகளின் பேச்சுவார்த்தைகள் கொள்கையடிப்படையில் இருக்கவேண்டுமே தவிர 13ஐ முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்பதை எங்களினால் ஏற்றுக்கொள்ள முடியாது. வடக்குக்கு வேறாகவும் கிழக்குக்கு வேறாகவும் மாகாணசபைகள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார். கல்முனை காரியாலயத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், கிழக்கு…

Read More

சீன ஜனாதிபதிக்கு 45 விடயங்களை உள்ளடக்கி விஜயதாஸ கடிதம் – அரசாங்கம் கவிழ்க்கப்படும் என்கிறார்..!

ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாஸ ராஜபக்ஷ, சீனத் தூதுவர் ஊடாக சீன ஜனாதிபதி – ஷி ஜின்பிங்கிற்கு கடிதமொன்​றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில் 45 விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.  “தங்களுக்குக் கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே தற்போதைய அரசாங்கம் ஜனநாயக முறையில் கவிழ்க்கப்படும்” என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். “கடந்த 15 வருடங்களில் வெளிநாடுகளுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் அனைத்தும் மீண்டுமொருமுறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு ஊழல் மோசடிகளை ஒழிக்கும் ஒப்பந்தங்கள் அனைத்தும் ஒழிக்கப்படும்” என கலாநிதி…

Read More

உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி..!

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு பெரிய வெங்காயத்தின் விலை சந்தையில் குறைவடைந்துள்ளது. இவற்றின் வர்த்தக பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டதே இதற்கான காரணமாகும். நிதியமைச்சு கடந்த 31 ஆம் திகதி இறக்குமதி செய்யப்பட்ட உருளை கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் சம்பந்தமாக சுங்கவரியை 30 ரூபாவினால் குறைத்திருந்தது. சந்தையில் இவற்றுக்கு இருந்த விலையை குறைப்பதே இதன் நோக்கமாகும். இதற்கமைவாக ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய நிதியமைச்சரின் அங்கீகாரத்துடன் சம்பந்தப்பட்ட வரி குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (அரசாங்க தகவல் திணைக்களம்)

Read More

இலங்கைக்கான விமான சேவையை நிறுத்தும் குவைத்..!

குவைத் எயார்வேசின் இலங்கைக்கான நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ ரீதியாக காரணம் எதுவுமி வெளியிடப்படவில்லையாயினும், இலங்கைக்கான விமான சேவையின் ‘செலவு’ அதிகம் என உள்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா சூழ்நிலையில் இலங்கைக்கான விமான சேவையை குவைத் எயார்வேஸே முதலில் நிறுத்தியிருந்தமை நினைவூட்டத்தக்கது.

Read More

இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பதவி நீக்கம்..!

இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உடனடியாக அமுலுக்குவரும் வகையில் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம், இவர் இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சுசில் பிரேமஜயந்த, கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சராக பதவி வகித்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் கலந்துரையாட எதிர்பார்ப்பு – பசில்..!

இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாட எதிர்பார்ப்பதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும், இலங்கைக்கு உதவிகளை வழங்கும் இந்தியா, சீனா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளுடனும் உலக வங்கி, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நிறுவனங்களு டனும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அந்த நாடுகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் கலந்துரையாடும் பொறுப்பு அமைச்சரவையில் சில அமைச்சர்கள் குழுவொன்றுக்கு வழங்கப்பட்டுள்ள தாகவும் அவர் தெரிவித்துள்ளார். நிவாரணம் பெற்றுக்கொடுக்கும் பொறுப்பை ஓர்…

Read More