
ஈஸ்டர் தாக்குதல்; காத்தான்குடி சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட 60 பேருக்கும், எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான் காணொளி மூலமாக, இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே மேற்கண்டவாறு இன்று (05) உத்தரவிட்டார். ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் சஹ்ரானுடன் தொடர்பிலிருந்த, சஹ்ரானின் பயிற்சி முகாமில் பங்குப் பற்றியவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 60இக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.