கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா ஷரீப் நினைவு முத்திரையை அமைச்சர் டலஸ் வெளியிட்டு வைத்தார்..!

(நூருல் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ், சர்ஜூன் லாபீர், ஏ.எல்.எம். ஷினாஸ், ஏ.எச்.எம். ஹாரீஸ்) நானிலம் போற்றும் நாகூர் நாயகம், கருணைக் கடல், குத்புல் மஜீத் ஹழ்றத் செய்யிதுனா மஹான் சாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் அன்னவர்களின் நினைவாக அம்பாறை மாவட்டம், கல்முனை மாநகர மக்களால் நடாத்திவரும் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹாவின் 200 வது கொடியேற்று விழா, செவ்வாய்க்கிழமை (04) ஆரம்பமானது. 200 வது கொடியேற்று விழாவை சிறப்பிக்குமுகமாக 25 ரூபாய் பெறுமதியான…

Read More

இந்தியப் பிரதமருக்கு அனுப்பும் ஆவணத்தை பகிரங்கப்படுத்த வேண்டும்!

தமிழ் அரசியல் கட்சிகள் இந்தியப்பிரதமருக்கு அனுப்ப தயாரிக்கும் ஆவணங்களில் கிழக்கு மக்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும், அந்த ஆவணத்தில் முஸ்லிங்களுக்கு ஒழுங்கான தீர்வு திட்டம் இல்லாமல் இருப்பதாகவும் கூறி அந்த ஆவணத்தை பகிரங்கப்படுத்த வேண்டும் என கோரிக்கை முன்வைத்து, அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் “கிழக்கு கேடயம்” ஊடக மாநாட்டை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை  (04) மாலை கல்முனையில் நடத்தினர். அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போது, தமிழ் கட்சிகள் சில இணைந்து இந்தியப்பிரதமருக்கு…

Read More

’20வது அரசியலமைப்பு திருத்தத்தை உடன் இரத்து செய்ய வேண்டும்’ – மைத்திரி!

20வது அரசியலமைப்பு திருத்தத்தை உடனடியாக இரத்து செய்து, 19வது அரசியலமைப்பு திருத்தத்தின் குறைபாடுகளை சரிசெய்து மீண்டும் அதனை கொண்டு வருவது அவசியம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட சம்மேளனத்தின் போது கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, தனிக் கட்சி ஒன்றுக்கு மீண்டும் அரசாங்கத்தை உருவாக்க முடியாது. ஊழல் மோசடிகளற்ற புதிய கூட்டணி அரசாங்கம் ஒன்றின் கீழ், நாட்டில் தேசிய கொள்கை ஒன்றை உருவாக்கி, புதிய பயணத்திற்கு தலைமைத்துவம்…

Read More

கொழும்பில் 16 மணி நேர நீர் வெட்டு!

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை (08) மு.ப. 8.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை  16 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. பராமரிப்பு பணி காரணமாக, குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், கொழும்பு மாநகர சபை தெஹிவளை – கல்கிசை மாநகர சபை கோட்டே மாநகர சபை கடுவலை மாநகர சபை மஹரகம பொரலஸ்கமுவ கொலன்னாவ…

Read More

நிவாரணப் பொதியை வழங்க எவ்வாறு நிதி பெறப்பட்டது என்பதை வெளிப்படுத்தவும் – அநுரகுமார திஸாநாயக்க..!

அரச ஊழியர்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு உட்பட ஏனைய சலுகைகளை வழங்குவதற்கு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ எவ்வாறு நிதியைப் பெற்றார் என்பதை வெளிப்படுத்த வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது . அரசாங்கம் தொடர்ந்தும் பணத்தை அச்சடித்தால் எதிர்காலத்தில் மேலும் பல பிரச்சினைகள் ஏற்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.அஸ்கிரிய பீடாதிபதிகளை சந்தித்து ஆசிப் பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தற்போது…

Read More

எதிர்வரும் நாட்களில் முன்னறிவித்தலின்றி மின் விநியோகம் துண்டிக்கப்படலாம்..?

எதிர்வரும் நாட்களில் முன்னறிவித்தலின்றி மின் விநியோகம் துண்டிக்கப்படலாம் என இலங்கை மின்சார சபை சேவைச் சங்கத்தின் தலைவர் ரஞ்சன் விஜயலால் தெரிவித்துள்ளார். இதனால் நாட்டு மக்கள் இருளில் இருப்பதற்குத் தயாராக வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். எரிபொருள் இறக்குமதி நெருக்கடியின் காரணமாக மின் உற்பத்திக்கும், மின் விநியோகத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதனாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ள தாகவும் அவர் தெரிவித்துள்ளார். மசகு எண்ணெயை இறக்குமதி செய்ய முடியாத காரணத்தினால் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இரண்டாவது தடவையாகவும் மூடப்…

Read More

அரசிலிருந்து சு.கவை உடனடியாக வெளியேற்றுங்கள்! – ‘மொட்டு’ எம்.பி. வலியுறுத்து..!

“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உடனடியாக வெளியேற்ற வேண்டும்.” இவ்வாறு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:- ”அரசுக்குள்ளும், அமைச்சரவையிலும் ஒழுக்கம் இருக்க வேண்டும். கூட்டுப் பொறுப்பு பாதுகாக்கப்பட வேண்டும். அவ்வாறு முடியாவிட்டால் வெளியேற்றுவதற்கு முன்னர் வெளியேறுவதே நல்லது. இந்த அரசின் வெற்றியின் பிரதான பங்காளி சுதந்திரக் கட்சி அல்ல. அப்பம் சாப்பிட்டுவிட்டு துரோகம் இழைத்தவர்களே அங்குள்ளனர். எந்நேரத்தில் வேண்டுமானாலும் அக்கட்சியினர் துரோகம்…

Read More

பால்மா தட்டுப்பாடு இம்மாத இறுதி வரை தொடரும் – பால்மா இறக்குமதியாளர் சங்கம்..!

சந்தையில் நிலவும் பால் மாவுக்கான தட்டுப்பாடு இந்த மாத இறுதி வரையில் தொடரும் என பால்மா இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த மாத இறுதியிலோ அல்லது பெப்ரவரி மாதத்தின் முற்பகுதியிலோ பால்மா ஏற்றிய கப்பல்கள் வரவுள்ள தாக அந்தச் சங்கத்தின் பேச்சாளர் அசோக பண்டார தெரிவித்தார்.

Read More

கிராமிய வீதி அபிவிருத்தி திட்டத்தில் அக்கரைப்பற்று மாநகர சபை குறுகிய காலப்பகுதிக்குள் 37 உள்ளூர் வீதிகளை அபிவிருத்தி செய்து சாதனை..!

நூருல் ஹுதா உமர் கிராமிய வீதி அபிவிருத்தி திட்டத்தில் அக்கரைப்பற்று மாநகர சபை குறுகிய காலப்பகுதிக்குள் 37 உள்ளூர் வீதிகளை அமைத்திருப்பதானது உள்ளூராட்சி வரலாற்றில் சாதனையாகும் என்று அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி தெரிவித்தார். அக்கரைப்பற்று மாநகர சபையின் 2022 ம் ஆண்டுக்கான முதலாவது மாநகர பொதுச்சபை அமர்வு இன்று (06)இடம்பெற்றது. இதன் போதே முதல்வர் மேற்படி உரையாற்றினார். தொடர்ந்தும் அங்கு அவர் உரைநிகழ்த்துகையில்; அக்கரைப்பற்றின் வரலாற்றில் இதுவொரு மைல் கல் சாதனை என்றே…

Read More

நீங்கள் எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி பொது வேட்பாளராக போட்டியிடவுள்ளீர்களா?

எதிர்காலத்தில் புதிய கட்சியில் இணைய யோசனையுள்ளதா?வாசு விமலை விட்டுவிட்டு உங்களை ஏன் முதலில் வெளியேற்றினார்கள்? சுசில் பிரேமஜயந்தவின் பதில்கள் என்ன? நாட்டில் தற்போதைய அரசில் யார் ஆட்சி செய்கிறார்கள் என்பது தனக்குத் தெரியாது என அமைச்சுப் பதவியிலிருந்து நேற்று நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். துப்புரவுத் தொழிலாளர்களுக்கு நிகராகக் கூட படிக்காத ஒருவரால் இன்று பாராளுமன்றம் ஆளப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதை ஆசீர்வாதமாகக் கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார். அமைச்சர்களான மஹிந்தானந்த…

Read More