
பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு..!
(எம்.ஜே.எம்.சஜீத்) கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் தேசிய அரச வானொலி விருது மற்றும் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் இளங்கலைஞர் விருது போன்றவற்றைப் பெற்றுக் கொண்ட ஊடகவியடலாளரும், இலங்கை வானொலி அறிவிப்பாளரும், ஆசிரியருமான எம்.ஏ.றமீஸ் மட்டக்களப்பினை தளமாகக் கொண்டியங்கும் ‘பெற்றிறெப்’ நிறுவனத்தின் மூலம் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார். ஊடகவியலாளரும் ஆசிரியருமான நடனசபேஷன் தலைமையில் களுவாஞ்சிகுடி வரவேற்பு மண்டபத்தில் நேற்று(08) இடம்பெற்ற இந்நிகழ்வின்போது சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளரும் சமூக சேவையாளருமான கே.துரைநாயகம், ஓய்வு நிலை பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.விமலநாதன்,…