சஜித் வன்னி பள்ளிவாசல்களுக்கு விஜயம் – ரிஷாட், புத்திக்க பத்திரன ஆகியோரும் உடனிருந்தனர்!

கடந்த வாரம் 7, 8ஆம் திகதிகளில் வன்னிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, வவுனியா ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் மன்னார், தாராபுரம் ஹுசைனியா ஜும்ஆ பள்ளிவாசல் ஆகியவற்றுக்கு சென்று, அங்கு நடைபெற்ற விஷேட துஆ பிரார்த்தனை நிகழ்வுகளில் கலந்துகொண்டார். இந் நிகழ்வுகளில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் மற்றும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்…

Read More

உள்ளூராட்சி சபை தேர்தல் ஒத்திவைப்பு?

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை மேலும் ஒரு வருடத்திற்கு பிற்போடுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் வாரத்தில் வெளியிடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான விடயங்களை நீக்கி, குறித்த வர்த்தமானி வெளியிடப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிற்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளமையினால், அவரால் தேர்தலை பிற்போடுவது தொடர்பான வர்த்தமானியை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவதானால் அது தொடர்பான வர்த்தமானி…

Read More

நிந்தவூரில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

அம்பாறை, நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பகுதியில் ஐஸ் போதைப்பொருளை கடத்திச் சென்ற 34 வயது நபர் ஒருவர், அட்டப்பள்ளம்  சந்தியில் வைத்து நேற்றிரவு (08) விசேட   அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார். பெரியநீலாவணை விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து, அப்பகுதிக்கு சிவில் உடையில் விரைந்த அதிரடிப் படையினர், குறித்த நபரைக் கைது செய்தனர். விற்பனைக்காக கொண்டு செல்ல முற்பட்ட  30 கிராம் ஐஸ் போதைப்பொருள் அவரிடமிருந்து கைது செய்யப்பட்டதுடன்,  மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளது….

Read More

மட்டக்களப்பு முஸ்லிம் ஊடகவியலார்கள் சம்மேளனத்தின் புதிய நிர்வாகத் தெரிவு!

மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலார்கள் சம்மேளனத்தின் புதிய நிர்வாகத் தெரிவு, மாவட்டத்திலுள்ள முஸ்லிம் ஊடகவியலாளர்கள் பலரின் பங்குபற்றலுடன், ஏறாவூரில்  (08) நடைபெற்றது. 2022ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றதுடன், செயற் திட்டங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டன. சம்மேளனத்தின் புதிய தலைவராக ஏ.எம். அஸ்மி தெரிவுசெய்யப்பட்டதுடன், செயலாளராக எம்.ரீ.எம்.பாரிஸ், பொருளாளராக ஏ.எச்.ஏ.ஹூசைன் தெரிவுசெய்யப்பட்டனர். பிரதித் தலைவர்களாக ஐ.எம்.ஐ.பாறூக், எம்.எஸ்.எம்.சஜீ, உப செயலாளராக எம்.ஐ.அப்துல் நஸார், ஊடக இணைப்பாளர்களாக எஸ்.எம்.எம்.முர்ஷித், எம்.ஏ.சீ.எம்.ஜலீஸ், எம்.ஜீ.ஏ.நாஸர், கணக்குப் பரிசோதகராக எச்.எம்.எம்.பர்ஸான் ஆகியோர்…

Read More

ஜனாஸா நல்லடக்க சேவைகளை முன்னெடுக்க அமைப்பு உதயம்!

சாய்ந்தமருது பிரதேசத்தில் ஜனாஸா நல்லடக்க சேவைகளை தன்னார்வத்துடன் முன்னெடுப்பதற்காக அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது. “சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவை” எனும் பெயரிலான இந்த அமைப்பின் அங்குராப்பணக் கூட்டம், சாய்ந்தமருது இளைஞர் சேவைகள் நிலைய மண்டபத்தில் நேற்று (09) மாலை நடைபெற்றது. சாய்ந்தமருது ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவர் எம்.எம்.சலீம் மௌலவி முன்னிலையில் சிவில் சமூக செயற்பாட்டாளர் எம்.எம்.உதுமாலெப்பை தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. இதன்போது சாய்ந்தமருது பிரதேசத்தில் ஜனாஸா நல்லடக்க விடயத்தில் மக்கள் எதிர்கொள்கின்ற அசௌகரியங்கள் மற்றும் கால…

Read More