Litro Gas பாவனையாளர்களுக்கு விசேட அறிவிப்பு..!

Litro Gas Lanka நிறுவனம் 2021 டிசம்பர் 4 ஆம் திகதிக்கு முன்னர் சந்தையில் வெளியிடப்பட்ட 12.5 கிலோ, 5 கிலோ மற்றும் 2.3 கிலோகிராம் எடையுள்ள முடிக்கப்படாத LPG சிலிண்டர்களை வாடிக்கையாளரின் விருப்பத்திற்கேற்ப நிறுவனத்திடம் திரும்பப் பெற்றுக் கொள்ளக்கூடிய புதிய பொறிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. காஸ் சப்ளையர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு, கூறப்பட்ட கேஸ் சிலிண்டர்களில் கருப்பு அல்லது நீல முத்திரை இருக்க வேண்டும் என்றார். அத்தகைய முடிக்கப்படாத எல்பிஜி சிலிண்டர்களை லிட்ரோ கேஸ் லங்கா விற்பனை…

Read More

5,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கான சுற்றறிக்கை வெளியானது..!

அரச சேவையாளர்களுக்கும், ஓய்வூதியம் பெறுநர்களுக்கும் மாதாந்தம் 5,000 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்குவதற்கான சுற்றறிக்கை வெளியானது.      

Read More

பொத்துவிலுக்கு ஒசுசல கேட்டால் சம்மாந்துறைக்கும் கிடைக்குமா..?

இன்று பா.உறுப்பினர் முஷர்ரபின் முகநூலில், தனது முயற்சியின் பலனாக சம்மாந்துறை மற்றும் பொத்துவிலில் அரச ஒசுசல அமையப்பெற உள்ளதான செய்தியை அவதானிக்க முடிந்தது. அவரது ஆதரவாளர்களும் பெருமையாக பகிர்ந்துமிருந்தனர். நடந்தால் மகிழ்ச்சி தான். பெரும் விலை கொடுத்து, இவ்வரசை ஆதரிக்கும் எமது ஏழு பா.உறுப்பினர்களும் இவைகளையாவது செய்து கொள்ளட்டும். பா.உ முஷர்ரப் பொத்துவிலில் ஒசுசல ஒன்றை அமைக்கும் கோரிக்கையை பிரதமருக்கு அனுப்பியுள்ளார். அதனை பிரதமர் அலுவலகம் குறித்த அமைச்சருக்கு அனுப்பியுள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் பா.உ…

Read More

லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியை நீக்கிய கடிதத்தை உடனடியாக மீள பெறுமாறு ஜனாதிபதி பணிப்புரை..!

லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்கவை நீக்கிய கடிதத்தை உடனடியாக மீள  பெறுமாறு ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ஷ  தனது அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

சுசிலின் பதவியை பறித்த கோட்டாவின் அதிரடியால் அடங்கிய அமைச்சர்கள்..!

சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச சுசில் பிரேமஜயந்தவின் பதவியைப் பறித்த பின்னர் அரசாங்கத்தை விமர்சித்துவந்த அமைச்சர்கள் மௌனிகளாக மாறிவிட்டனர் என்று தென்னிலங்கை அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் தலைமையில் உருவாக்கப்பட்ட 11 கட்சிகளை கொண்ட மாற்று அணியினர், எதனையும் கூறவும் செய்யவும் முடியாத நிலைமைக்குள் தள்ளப்பட்டுள்ளதாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், சிறிலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில்…

Read More

சம்மாந்துறையில் சமூர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்கும்நிகழ்வு..!

சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம் சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள   சமூர்த்தி சமூகப்பாதுகாப்பு நிதியத்தின் மூலம்மாணவர்களுக்கான சமூர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு சம்மாந்துறைபிரதேச  செயலக சமூர்த்தி தலைமை பீட  முகாமையாளர் யூ.எல். எம். சலீம்   தலைமையில்  கடந்த திங்கட்கிழமை (11)  சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் சம்மாந்துறை  பிரதேச செயலாளர் எஸ்.எல் ஹனிபா பிரதம அதிதியாக கலந்து கொண்டுகொடுப்பனவு சான்றுபத்திரங்களையும்,காசோலையினையும் வழங்கிவைத்தார். சமூர்த்தி அபிவிருத்தி வங்கி ஊடாக சமூர்த்தி உதவி பெரும் பயனாளிகளின் குடும்பங்களில் உள்ளகல்விப்பொதுத்தராதர சாதரண தரம் சித்தியடைந்து (2020/2022கல்வியாண்டில் )உயர்தரக் கல்வியைதொடர்கின்றமாணவர்களின் கல்வி ஊகக்குவிப்புக்காக குறித்த சமூர்த்தி சிப்தொர  புலமைப்பரிசில்வழங்கப்படுகின்றது. சம்மாந்துறை  பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள   51 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் இருந்து 266 மாணவர்கள் இந்த புலமைப்பரிசில் கொடுப்பனவை பெறுவதற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் உளவளத்துறை ஆலோசகர் மனூஸ் அபூபக்கர் மாணவர்களுக்கு சிறப்பு ஆலோசனைகளை  வழங்கியமை குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் யூ. எம். அஸ்லம், தேசிய சேமிப்பு வங்கியின்முகாமையாளர் கே.சுரேஸ்,சமுர்த்தி வங்கி சங்க முகாமையாளர் எஸ்.எம் அன்சார்,வலய முகாமையாளர்கள் மற்றும் மாணவர்கள் ,பெற்றோர்கள்  ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

Read More

காரணமின்றி உள்ளூராட்சிமன்ற பதவிக்காலத்தை நீடித்தமை தவறு – பெப்ரல் கடும் எதிர்ப்பு..!

உள்ளூராட்சிமன்ற தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது என சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு (பெப்ரல்) அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹண ஹெட்டியாரச்சி (Rohana Hettiarachchi) தெரிவித்துள்ளார். அமைச்சருக்கு அந்த அதிகாரம் இருந்தாலும் அதற்கான நியாயமான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும் மக்களின் ஜனநாயக உரிமை பாதுகாக்கும் வகையில் சட்ட ரீதியில் நடவடிக்கை எடுப்பது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த…

Read More

எனது 32 வருட அரசியல் வாழ்வு நாசமாகியுள்ளது – அமைச்சரின் புலம்பல்..!

சேதன விவசாய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த சென்றதன் மூலம் தனது 32 வருட அரசியல் வாழ்வு நாசமாகியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். தேசிய விவசாயிகள் அமைப்புக்களுடன் விவசாய அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்ட விடயத்தை அவர் தெரிவித்தார். பெரும்போக இயற்கை விவசாய வேலைத்திட்டம் தொடர்பில் விவசாயிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் நியாயமற்றவையெனவும் விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார். சேதன பயிர்ச்செய்கை திட்டத்தை நாட்டுக்கும் மக்களுக்கும் மிக முக்கியமான வேலைத்திட்டமாக மாற்றுவதற்கு ஜனாதிபதியுடனும் அரசாங்கத்துடனும் அர்ப்பணிப்புடன் இருப்பதாக அமைச்சர்…

Read More

பொலிவேரியனின் குறை தீர்க்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் : மழைக்காலங்களில் வீதிகள் குளமாகிறது என கவலை தெரிவிக்கும் மக்கள் !

நூருல் ஹுதா உமர் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்ததன் பின்னர் கடந்த மஹிந்த அரசினால் நிர்மாணித்து கொடுக்கப்பட்ட சாய்ந்தமருது பொலிவேரியன் கிராம மக்கள் மூன்று ஜனாதிபதிகளை மூன்று பாராளுமன்ற தேர்தல்களை சந்தித்தும் இதுவரை தம்முடைய குறைபாடுகள் நிபர்த்திசெய்யப்பட வில்லை என ஏக்கம் தெரிவிக்கின்றனர். அங்குள்ள வீதிகள் பாவனைக்கு உதவாத நிலையில் உள்ளதையும், தரமற்ற அபிவிருத்திகள் மூலம் பாதைகள் உடைந்து காணப்படுவதையும் பலதடவைகள் அதிகாரிகள், அரசியல் வாதிகளுக்கு எடுத்துரைத்தும் எவ்வித பயனும் கிட்டவில்லை என்று தெரிவிக்கின்றனர்….

Read More