
இலங்கையின் முதலாவது அரபு மொழிப் பேராசிரியராக கலாநிதி எம்.எஸ்.எம்.சலீம்!
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரபு மொழி மற்றும் இஸ்லாமிய நாகரீகத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.எஸ்.எம். சலீம் அரபு மொழி பேராசிரியராகப் பதவியுயர்த்தப்பட்டுள்ளார். இப்பதவியுயர்வு அரபு மொழியில் இவர்களுக்குள்ள புலமைத்துவத்துக்குக் கிடைத்த கௌரவமாக கொள்ளப்படுகின்றது. இலங்கையின் கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தின் மாவடிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பேராசிரியர் எம்.எஸ்.எம். சலீம் மாவடிப்பள்ளி முஸ்லிம் கலவன் பாடசாலையில் (தற்போதய கமு/ அல் – அஸ்ரப் மஹா வித்தியாலயம்) தனது கல்விப் பயணத்தை ஆரம்பித்து அங்கேயே ஆரம்பக் கல்வியை நிறைவு…