“ஈஸ்டர் தாக்குதலுக்கு மைத்திரியே பொறுப்புக்கூற வேண்டும்” – ரவி கருணாநாயக்க!

ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பொறுப்புக்கூற வேண்டும் என்று முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:- “நல்லாட்சியின்போது ஜனாதிபதியாகச் செயற்பட்ட மைத்திரிபால சிறிசேனவே பாதுகாப்பு அமைச்சராகவும் செயற்பட்டார். எனவே, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்கு அவர் பொறுப்புக்கூற வேண்டும். ஐந்தாண்டுகள் மைத்திரி ஜனாதிபதியாகச் செயற்பட்டார். அந்தக் காலப்பகுதியில் அவர் தேங்காய் துருவினாரா? நல்லாட்சியின்போது 90 வீதமான நல்ல விடயங்களை ஐக்கிய தேசியக் கட்சியே மேற்கொண்டது….

Read More

வைத்தியர் றிஸான் ஜெமீலின் முன்னோடியான செயற்பாடுகள் அனைத்துமே பாராட்டத்தக்கது!

டாக்டர் றிஸான் ஜெமீலின் முன்னோடியான செயற்பாடுகள் அனைத்துமே பாராட்டத்தக்கது என, சம்மாந்துறை மற்றும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைகளின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியக் கலாநிதி டாக்டர் அஸாத் எம். ஹனிபா தெரிவித்தார். டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் பிரிவொன்றை, நேற்று (23) ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறையில் ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மாபெரும் இரத்ததான முகாமும் இலவச மருத்துவ சேவை மற்றும் கண் பரிசோதனையும் இவ்வைத்தியசாலையில் இடம்பெற்றது. டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் பணிப்பாளர்…

Read More

“கோட்டாவின் உரை; ‘யானை விழுங்கிய விளாம்பழம்’ போன்றது. அதில் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு இல்லை”

கொவிட்-19 பெருந்தொ ற்றாகப் பரவியதற்கும், ஒவ்வொரு நாடும் இப்போதும் இன்னல்படுவதற்கும் ஒற்றுமையின்மையும் ஒத்துழையாமையுமே காரணமாகும். இதனை யாருக்கும் மறுத்துவிட முடியாது.  உலகின் அனைத்து நாடுகளிலும் படித்தவர்கள் முதல், பாமரர்கள் வரை வாழ்வாதாரத்தையே முன்னுரிமைக்குரிய விடயமாகக் கொள்ள வேண்டிய கட்டாயம் இதற்கு முக்கியமானதொரு காரணமாகும். 2022ஆம் வருடத்துக்கான நாடாளுமன்றக் கூட்டத்தொடரைத் தொடங்கி வைத்து, தனது அக்கிராசன உரையை நிகழ்த்திய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, ‘நான் கொண்டது மாத்திரமே கொள்கை; அதுவே இலக்கு; வேறு யாருக்கும் கொள்கையில்லை; நோக்கமில்லை, இலக்கில்லை’ …

Read More

தையிப் எர்துவானை அவமதித்த குற்றச்சாட்டில் துருக்கி பெண் செய்தியாளர் கைது!

துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவானை அவமதித்த குற்றச்சாட்டில், பிரபல செய்தியாளர் செதெப் கபாஸை தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை ஸ்தான்பூலில் கைது செய்யப்பட்ட கபாஸை அவரது வழக்கு விசாரணைக்காக தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. எதிர்க்கட்சி உடன் தொடர்புபட்ட தொலைக்காட்சி ஒன்றின் நேரடி நிகழ்ச்சியில் ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவானை இலக்கு வைத்து பழமொழிகளை கூறியதாக அவர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். இந்தக் குற்றசாட்டுக்கு ஒன்று முதல் நான்கு ஆண்டுகள் வரை சிறை தண்டனை…

Read More

ஆப்கானில் இலங்கை தூதரகம் மூடல்!

ஆப்கானிஸ்தானில் காணப்படும் நிச்சயமற்ற அரசியல் நிலைமை மற்றும் பதுகாப்பு நிலைமையின் அடிப்படையில், ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் இயங்கிய இலங்கை தூதரகத்தை மூட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தூதரகத்தின் பணிகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தாலிபான் அமைப்பு காபூல் நகரை கைப்பற்றிய பின்னர், ஆப்கானிஸ்தானுக்கான இலங்கையின் தூதுவர் தனிப்பட்ட விடுமுறையில் இலங்கை திரும்பியிருந்தார். அதேவேளை, பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் இலங்கை அரசாங்கம் ஏற்கனவே சில நாடுகளில் இயங்கி தூதரகங்கள் மற்றும்…

Read More

மின் துண்டிப்பு இல்லை!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில், மின் துண்டிப்பை மேற்கொள்ளாதிருக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். மின்சார பிரச்சினை தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று இன்று (24) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றிருந்தது. ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் மின்சக்தி அமைச்சர், எரிசக்தி அமைச்சர், கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் மற்றும் மின்சார சபை சேவையாளர்கள் பங்கேற்றிருந்தனர். இதேவேளை,  சப்புகஸ்கந்த மின்னுற்பத்தி நிலையம் இயங்காமை காரணமாக, இன்று நான்கு கட்டங்களின் கீழ் நாடளாவிய ரீதியில்…

Read More

தேசிய ஐக்கிய முன்னணியின் தேசிய அமைப்பாளராக ஷிராஸ் ஜுனூஸ் நியமனம்..!

நூருல் ஹுதா உமர் முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தலைமையிலான தேசிய ஐக்கிய முன்னணியின் தேசிய அமைப்பாளராக கொழும்பை சேர்ந்த பிரபல சமூக செயற்பாட்டாளர் ஷிராஸ் ஜுனூஸ் இன்று (24) நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி இந்த நியமனத்திற்கான உத்தியோகபூர்வ கடிதத்தை கட்சியின் அலுவலகத்தில் வைத்து தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் பிரபல சமூக செயற்பாட்டாளர் ஷிராஸ் ஜுனூசிடம் இன்று கையளித்தார். கடந்த காலங்களில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வளர்ச்சிக்காக பல்வேறு…

Read More

ரியாஸ் சாலி கூறியதாக ஊடகங்களில் வெளியான அபாண்ட குற்றச்சாட்டும் ஜம்இய்யாவின் அறிவுறுத்தலும்!

பலாங்கொட பிரதேசத்திலுள்ள ஜெய்லானி பள்ளி விவகாரம் தொடர்பில் நெல்லிகல வத்துகும்புரே தம்மரதன தேரர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையுடன் பேசிய போது ஜெய்லானி பள்ளிவாசல் எமக்குரியதல்ல என்று ஜம்இய்யா தெரிவித்ததாக சகோதரர் ரியாஸ் சாலி அவர்களை மேற்கோள் காட்டி அண்மையில் ஊடகங்களில் ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதனை ஜம்இய்யா மிக வன்மையாகக் கண்டிப்பதோடு அதனை முற்று முழுதாக மறுக்கின்றது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா என்பது இந்நாட்டு ஆலிம்களினதும் முஸ்லிம்களினதும் சொத்தாகும். இதன் பிரதான நோக்கம்…

Read More

இலங்கைக்கு அரிசி வழங்க மறுக்கும் சீனா..!

சீனாவிடமிருந்து ஒரு மில்லியன் மெட்ரிக் தொன் அரிசியை இலங்கைக்கு நன்கொடையாகப் பெறவுள்ளதாக இணை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன கடந்த வாரம் தெரிவித்திருந்த போதிலும், அத்தகைய நன்கொடைக்கான கோரிக்கையை சீன அரசாங்கம் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

4 கட்டங்களின் கீழ் இன்று மின் துண்டிப்பு..!

நான்கு கட்டங்களின் கீழ் நாடளாவிய ரீதியில் இன்று ஒரு மணித்தியால மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக மின்சார பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, மின் துண்டிப்பு பின்வரும் நான்கு கட்டங்களின் கீழ் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. குழு (ஏ) – பி.ப 5.30 முதல் 6.30 வரை குழு (பி) – பி.ப 6.30 முதல் 7.30 வரை குழு (சி) – பி.ப 7.30 முதல் 8.30 வரை குழு (டி) – பி.ப 8.30 முதல் 9.30 வரை            …

Read More

நின்றவாறு பயணிப்போருக்கு புதிய பஸ் கட்டணத் திட்டம்!

பஸ்களில் நின்றவாறு பயணிக்கும் பயணிகளுக்கு புதிய கட்டணத் திட்டமொன்றை முன்வைக்கவுள்ளதாக, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இப்புதிய திட்டத்தை எதிர்வரும் வாரத்தில் நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக, நேற்றையதினம் (23) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனைத் தெரிவித்தார். கொவிட் தொற்று பரவலுக்கு மத்தியில் ஆசனங்களின் எண்ணிக்கையின் அளவுக்கு மாத்திரம் பயணிகளை ஏற்றிச்செல்ல வேண்டுமெனும் சுகாதார வழிகாட்டல்கள், பெரும்பாலான பஸ்களில் மீறப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். குறித்த விதிமீறல்கள் தொடர்பில் கடந்த வாரம் பொலிஸ் மாஅதிபருக்கு…

Read More

மின்வெட்டு தொடர்பான நேர அட்டவணை..!

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக இன்று (24) இரவு மற்றும் நாளை (25) இரவு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. நான்கு பிரிவுகளின் கீழ் இன்று மாலை 05.45 மணி முதல் இரவு 09.30 மணி வரை ஒரு மணி நேரமும், நாளை பிற்பகல் 01.30 மணி முதல் இரவு 09.30 மணி வரை இரண்டு மணி நேரமும் மின்சாரம் தடைப்படும் என அதன் குழு உறுப்பினர் எரங்க குடஹேவா தெரிவித்துள்ளார்….

Read More

பூஸ்டர் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அபராதம்?

பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு அபராதம் விதிப்பது குறித்து சுகாதார அமைச்சு ஆராய்கிறது. இதற்கான சட்டத்தன்மை குறித்து சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரப்பட்டிருப்பதாக, சுகாதார அமைச்சின் மருத்துவ தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடுகளில் இந்த நடைமுறைப் பின்பற்றப்படுகிறது. அதுபோன்று, இலங்கையிலும்  மூன்றாவது கொவிட் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு அபராதம் விதிப்பது குறித்த நடைமுறையை அமுல்படுத்துவது தொடர்பாகவும், இதற்கான சட்ட வரையறை தொடர்பாகவும் தற்போது ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Read More

நாளை ஐ.தே.க முன்னெடுக்கும் மக்கள் ஆர்ப்பாட்டம்..!

காலி பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு எதிரில் நாளைய தினம் மாலை 3.00 மணியளவில் அரசாங்கத்துக்கு எதிராக, நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலுள்ள மக்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுத்தல், அரசாங்க அதிகாரிகளுக்கான எரிபொருள் மற்றும் தொலைபேசி உள்ளிட்ட மேலதிக கொடுப்பனவுகளை பெற்றுக் கொடுக்குமாறும், கடன் வரையறையை நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்து இந்த மக்கள் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

Read More

அம்பாறையில் ஒரு வகையான வைரஸ் காய்ச்சல் பரவும் அபாயம்!

அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட தொடர் மழையை அடுத்து, கல்முனைப் பிராந்தியத்தில் ஒரு வகையான வைரஸ் காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஐ.எல்.எம். றிபாஸ், இன்று (24) தெரிவித்தார். இது தொடர்பில் பொதுமக்கள் அலட்சியம் செய்யாமல், அவதானமாக இருக்குமாறும், கொதித்தாறிய நீரைப் பருகுமாறும், கேட்டுள்ளார். இருமல், வயிற்றுவலி, தலைவலி, உடல் சோர்வு போன்றனவையே அந்த காய்ச்சலின் அறிகுறிகள் எனவும், இவ்வாறான அறிகுறிகள் காணப்படுமாயின் உடனடியாக வைத்திய ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளுமாறும்…

Read More

மின்சாரத்துறையில் மாஃபியா, பில்லியன் கணக்கான பணம் செலவிடப்படுகிறது – மைத்ரிபால..!

மின்சாரத்துறையில் எழுந்துள்ள பிரச்சினை தற்போது ஏற்பட்டதல்ல என்பதுடன் அது பலவருடங்களாக நிலவும் மாஃபியா என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மின்சார சபையின் தொழிநுட்ப பிரிவுகளில் நீண்ட காலமாக பிரச்சினைகள் நிலவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தனியார் பிரிவுகள் தனியாக அதிகளவான மின்சாரத்தை பெறுகின்றனர். இதற்காக பில்லியன் கணக்கான பணம் செலவிடப்படுகிறது. நீண்ட காலமாக இருந்த பிரச்சினைகள் இன்று பாரியளவான முரண்பாடுகளுக்கு வித்திட்டுள்ளன. எனவே தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் உரிய பிரிவுகளுடன் இணைந்து கலந்துரையாடி தீர்ப்பதற்கான…

Read More

சந்தர்ப்பம் இழக்கப்போகும் சாமர்த்திய அரசியல்? சுஐப் எம்.காசிம்-

அபிவிருத்தி இலக்குகளில் தஞ்சமடைவது மக்கள் ஆணையை மீறுவதாகக் கருதும் தமிழ்தேசிய கூட்டமைப்பு, இனப்பிரச்சினையை மூடிமறைக்கும் எந்த யுக்திகளிலும் சிக்காமல் பயணிப்பதாகவே கூறுகிறது. ஒன்பதாவது பாராளுமன்றத்தின், இரண்டாவது கூட்டத்தொடரில் விடுக்கப்பட்ட அழைப்பையும் இதற்காகவே பொருட்படுத்தாமலும் உள்ளது இக்கட்சி. எனினும், ஜனாதிபதியின் அழைப்பிலிருந்து ஒரு புதிய பயணத்துக்கு தயாராகியிருக்கலாமென்ற கருத்துக்களும் தமிழர் தரப்பில் இருக்கின்றனதான். எதிர்ப்போக்குகளால், அடைந்தவை எதுவுமின்றி இருக்கையில், இணக்கப்பயணம் பற்றி யோசிக்கலாம்தானே! இந்த நிலைப்பாடுகளிலுள்ளோர்தா ன், ஜனாதிபதியின் உரையிலும் நியாயம் காண்கின்றனர். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட…

Read More