“வித்தகர் நூருல் ஹக்”- இலக்கிய உலகின் முக்கிய விதைகளில் ஒன்றாகிப்போனவர்!

2021.01.25 காலமான பன்னூலாசிரியர், எழுத்தாளர், சிரேஷ்ட ஊடக ஆளுமை சாய்ந்தமருதை சேர்ந்த எம்.எம். நூருல் ஹக். அவர்களின் மறைவின் ஓராண்டையொட்டி தரும் சிறப்பு தொகுப்பு ! நூருல் ஹுதா உமர்- எழுத்தாளன் மரணிக்கிறான். எழுத்துக்கள் மரணிக்க தவறிவிடுகிறது. ஒரு சமூகம் அல்லது ஒரு நாடு தவறி விழுந்த பொழுதுகளிலெல்லாம் எழுத்தாளர்கள் தனது ஆளுமைகளினால் அந்த சமூகத்தை அல்லது அந்த நாட்டை மீளெழ செய்துள்ளனர் என்பது வரலாறு. ஒரு நாட்டின் வளர்ச்சியில் ஜனநாயக தூண்களில் முக்கிய தூண்களிலொன்றான ஊடகத்தின்…

Read More

கொரோனா பாதிப்புக்குள்ளான நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது. கடந்த வருடத்தில் இருந்து இந்த எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது. அத்துடன் நேற்று  திங்கட்கிழமையன்று (24) நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹினி கவிரட்ன மற்றும் திலும் அமுனுகம ஆகியோர் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இந்தநிலையில் ,ஜயந்த வீரசேகர மற்றும் அமரகீர்த்தி அத்துகோரல ஆகியோர் இன்று  கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read More

ஆப்கான் மாணவிகளுக்கு பாடசாலை செல்ல அனுமதி – தாலிபான்கள் அறிவிப்பு!

தலீபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தானில் எதிர்வரும் மார்ச் 21 முதல், மாணவிகளும் பாடசாலைகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவதாக தலீபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியது முதல், பெண்களுக்கு எதிரான பல்வேறு சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தன. அதன்படி பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது, வெளியே தனியாக நடமாடக்கூடாது போன்ற சட்டங்களை நடைமுறைப்படுத்தப்பட்டன. இதே போன்று தனியார், அரசு அலுவலகங்களில் பெண்கள் வேலை செய்ய அனுமதிக்கப்படவில்லை. பாடசாலைகள், கல்லூரிகள், மதராசாக்களில் மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். எனினும், மாணவிகள் மற்றும் ஆசிரியைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கு…

Read More

யால தேசிய பூங்காவில் யானைக்கு தொந்தரவு – விசாரணைக்கு உத்தரவிட்ட வனவளத்துறை அமைச்சர்!

யால தேசிய பூங்காவில் யானைக்கு தொந்தரவு செய்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை உடன் மேற்கொள்ளுமாறு, வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் சீ.பி.ரத்நாயக்க உத்தரவிட்டுள்ளார். யால தேசிய பூங்காவில் நேற்று (24) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.யால தேசிய பூங்காவிற்குச் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்ற சஃபாரி வாகனங்களின் சாரதிகளால் குறித்த யானை தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பான காணொளி ஒன்றும் வெளியாகியுள்ளது. வாகனங்களில் பயணித்தவர், வழியில் குறுக்கிட்ட யானையை, பட்டாசை வெடிக்கச் செய்து காட்டுக்குள் அனுப்பும் காட்சி இதில்…

Read More

மீண்டும் சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளராக அஜித் ரோஹண!

சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண நியமிக்கப்பட்டுள்ளார். இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். இவர் குற்றத் தடுப்பு மற்றும் போக்குவரத்து பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், தேசிய புகையிலை மற்றும் மதுபானங்கள் தொடர்பான தேசிய அதிகார சபையின் உறுப்பினர்,  சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை பணிப்பாளர் சபை உறுப்பினர் ஆகிய பதவிகளை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது….

Read More

குழாய் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு வேண்டுகோள்!

குழாய் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நுகர்வோரிடம் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது. பல நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் குறைந்து வருவதால் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. எனினும், தற்போது போதியளவு நீர் இருப்பு உள்ளதாகவும் நீர் வெட்டு அபாயம் இல்லை எனவும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், குழாய் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read More

“சுயாதீனமாக செயற்பட வேண்டிய பரீட்சைக் கடமை நியமனங்களிலும் அரசியல் தலையீடு” – இம்ரான்!

சுயாதீனமாக செயற்பட வேண்டிய பரீட்சைக் கடமை நியமனங்களிலும் அரசியல் தலையீடு இடம்பெறுவது இந்த அரசின் கேவலமான செயல்களில் ஒன்றாகும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது திருகோணமலை மாவட்டத்தில் 5ஆம் தர மற்றும் உயர்தரப் பரீட்சைக்கடமைக்காக நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த நியமனங்களில் வழமைக்கு மாறாக இனரீதியான புறக்கணிப்புகள் இடம்பெற்றுள்ளதாக அதிபர், ஆசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்த பரீட்சைக் கடமை நியமனங்களில் வழமையாகப் பின்பற்றப்பட்டு வந்த இனச்சமநிலை…

Read More

மத்திய வங்கியின் நிதிசார் விழிப்பூட்டல் செயலமர்வு காத்தான்குடியில்!

இலங்கை மத்திய வங்கியின் நிதிசார் நிபுணத்துவம் தொடர்பாக பிரதேச செயலக ரீதியாக மக்களுக்கு விழிப்பூட்டும் நடவடிக்கை, இலங்கை மத்திய வங்கியினால் மேற் கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் ஒரு கட்டமாக, மட்டக்களப்பு – காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இலங்கை மத்திய வங்கியின் நிதிசார் நிபுணத்துவம் தொடர்பாக விழிப்பூட்டும் செயலமர்வு, பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (24) இடம்பெற்றது. காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதய சிறீதர் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில், இலங்கை மத்திய வங்கியின் கிழக்கு மாகாண பிராந்திய…

Read More

பெரும் போக நெல்லை 95ரூபாவுக்கு கொள்வனவு செய்யா தீர்மானம்!

பெரும் போகத்தில் அறுவடை செய்யும் நெல்லை 95ரூபா உத்தரவாத விலைக்கு கொள்வனவு செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கிணங்க இம்முறை பெரும்போக அறுவடையில் நாடு, சம்பா மற்றும் கீரி சம்பா நெல்லை கிலோ 95ரூபாவாக கொள்வனவு செய்வதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. அது தொடர்பில் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே அமைச்சரவையின் அங்கீகாரத்துக்காக அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்துள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தது. அத்துடன், நெல் சந்தைப்படுத்தும் சபையின் மூலம் கொள்வனவு செய்யப்படும் நெல்லுக்கு தொண்ணூற்று ஐந்து ரூபாய்…

Read More

கொழும்பு பெரிய பள்ளிவாசல் தேசிய பிறை குழுவின் புதிய தலைவர் நியமனம்!

கொழும்பு பெரிய பள்ளிவாசல் தேசிய பிறை குழு தலைவராக உஸ்தாத் கலீபதுஷ்ஷாதுலி மௌலவி அல்ஹாஜ் ஹிசாம் (பத்தாஹி) நியமனம் செய்யப்படுள்ளார். பிறை குழு தலைவராக இருந்த மர்ஹூம் கலீபதுல் குலபா மௌலவி அப்துல் ஹமீத் (பஹ்ஜி) அவர்களின் மறைவை அடுத்து, கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற (23) பிறை குழு கூட்டத்தில் இந் நியமனம் செய்யப்பட்து. கலீபா ஹிசாம் பத்தாஹி மர்ஹூம் கலிபதுல் குலபா அப்துல் ஹமீத் பஹ்ஜியின் மாணவர் என்பது குறிப்பிடத்ததக்கது. கலீபா ஹிசாம் பத்தாஹி…

Read More

எலி காய்ச்சலால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகாிப்பு!

நாட்டில் எலிகாய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவரும் அதேவேளை உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்வடைந்துள்ளதாக சுகாதார பிரிவு எச்சரித்துள்ளது. கடந்த வருடம் காலி மாவட்டத்தில் மாத்திரம் 476 பேர் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 6 மரணங்கள் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய் நிலைமை தொடர்பில் கவனத்தில் கொள்ளாமை மற்றும் வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெறாமை என்பன எலி காய்ச்சலால் பீடிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காரணம் என காலி மாவட்ட சமூக நல வைத்திய நிபுணர் அமில ஏரங்க சந்திரசிறி தெரிவித்துள்ளார். தற்போது, வயல்…

Read More

தம்பலகாமத்தில் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பயிற்சிநெறி!

வாழ்வாதார அபிவிருத்தி வேலைத் திட்டத்தை மேம்படுத்தும் நோக்கிலான பயிற்சிநெறி, சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் தம்பலகாமம் பிரதேச சமுர்த்தி கிளையின் ஏற்பாட்டில், பிரதேச செயலக மண்டபத்தில் நேற்று (24) இடம்பெற்றது. இச்செயலமர்வில் கால்நடை வளர்ப்பாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல், பொருளாதார அபிவிருத்திக்கு முன்னெடுத்தல் உட்பட பல பயிற்சிகள் வழங்கப்பட்டன. அத்துடன், 35 பயனாளிகளுக்கு 64 இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலைகளும் பகிர்ந்தளிக்கப்பட்டன. இந்த நிகழ்வில் தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி, உதவிப் பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், சமுர்த்தி தலைமை முகாமையாளர்…

Read More

“காட்டாட்சியை வீழ்த்த வேண்டும் என்றால் சஜித் பிரேமதாசவும், சம்பிக்க ரணவக்கவும் முரண்பாடுகளை மறந்து கரங்கோர்க்க வேண்டும்” – மனோ!

நாம் முன்னோக்கி சென்று, இந்த காட்டாட்சியை வீழ்த்த வேண்டும் என்றால் சஜித் பிரேமதாசவும், சம்பிக்க ரணவக்கவும் முரண்பாடுகளை மறந்து கரங்கோர்க்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி விரும்புகிறது என  கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஊழல் எதிர்ப்பு குழு அங்கத்தவர்களை விசாரிக்கும் விசேட ஜனாதிபதி  ஆணைக்குழுவில் நேற்று (24) சாட்சியம் அளித்து விட்டு, ஊடகங்களிடம் உரையாற்றிய  மனோ கணேசன் எம்பி மேலும் கூறியதாவது, வழமையாக…

Read More