
தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா! மீண்டும் முடக்கமா?
நாளுக்கு நாள் தற்போது கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மீண்டும் முடக்கம் செய்வதைத் தவிர்த்துக் கொள்வதற்கான முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனினும், கொவிட் தொற்றாளர்களினால் தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருவதாக தனியார் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர் தெரிவிக்கின்றனர். பாடசாலைகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில், இந்த சுய விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இதேவேளை, கொழும்பு உள்ளிட்ட சனநெரிசல் மிக்கப் பகுதிகளில் உள்ள பெரிய தொழிற்சாலைகள், உற்பத்தி…