அதாஉல்லா எம்.பி அன்று சொன்னவை இன்று மெய்ப்பிக்கப்பட்டு வருகின்றன : அக்கரைப்பற்று மேயர் ஸஹி..!

நூருள் ஹுதா உமர். உள்ளூர் உற்பத்திகளை பெருக்க வேண்டிய தேவைப்பாடு தொடர்பில் எனது தந்தையான பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாயுள்ளா 1995 களில் பெரும் தலைவரின் இணைப்புச் செயலாளராக செயற்பட்ட காலத்தில் இருந்து பிராந்திய பொதுமக்களுக்கு வலியுறுத்தி வந்திருக்கின்றார். நம் வசம் இருக்கும் இயற்கை உற்பத்திகளை வாழ்வாதாரத்திற்கு பயனுள்ளதாய் மாற்றியமைத்து பொருளாதார சவால்களை எதிர்கொள்ள முடியும் என்று தேசிய காங்கிரஸ் தலைவர் மக்களுக்கு தூரசிந்தனையுடன் சுட்டிக்காட்டிய போது அவ்விடயங்களை இங்கே ஒரு சிலர் கேலி செய்தனர். ஆனால்,…

Read More

காத்தான்குடிக்கு படையெடுக்கும் உள்ளூர் சுற்றுலாப் பயணிகள்!

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள காத்தான்குடியை நோக்கி அண்மைக் காலமாக உள்ளூர் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் காத்தான்குடிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். காத்தான்குடியிலுள்ள இஸ்லாமிய பூர்வீக நூதனசாலையை பார்வையிடுவதற்காகவும், புதிய காத்தான்குடியில் அல்அக்ஷா பள்ளிவாயலின் வடிவத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப்பள்ளிவாயலை பார்வையிடுவதற்காகவும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர். அதே போன்று காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜும்ஆள்ளிவாயலையும் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டுச் செல்கின்றனர். அதே போன்று காத்தான்குடி…

Read More

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு மனு!

2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொதுநல ஆர்வலரான நாகாநந்த கொடித்துவக்கு இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அந்தப் பரீட்சையை எதிர்வரும் 20 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறே மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவில் பிரதிவாதிகளாக கல்வி அமைச்சர், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர். நாட்டில் கொவிட் பரவல் நிலைமை அதிகரித்து வந்தமையால், உயர்தர மாணவர்களுக்கு பாடத்திட்டங்களை நிறைவு செய்ய முடியாமல் போயுள்ளதாக…

Read More

‘இலங்கை – துருக்கி நட்புறவை மேலும் பலப்படுத்துவது அவசியம்’ – துருக்கி வெளிவிவகார அமைச்சர்!

துருக்கியும் இலங்கையும் பூகோள ரீதியாக தூரத்தில் இருந்த போதிலும், பல அம்சங்களில் ஒத்த இயல்பைக் கொண்டு காணப்படுகின்றன. துருக்கியானது ஐரோப்பா, ஆசியா, மத்திய கிழக்கு அத்தோடு ஆபிரிக்க நாடுகளுக்கான வர்த்தகப் போக்குவரத்துப் பாதைக்கு அருகில் அமைந்துள்ள ஓர் வளர்ந்து வரும் பொருளாதார கேந்திரமாகும். 1948 இல் இலங்கையின் சுதந்திரத்தை முதலில் அங்கீகரித்த நாடுகளில் துருக்கியும் ஒன்றாகும். சுனாமி அர்த்தத்தின் பின்னர் 2005 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் துருக்கிய ஜனாதிபதி ரிசெப் தயிப் எர்தோகான் இலங்கைக்கு மேற்கொண்ட…

Read More

“பயங்கரவாத தடைச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்” – மனோ!

பயங்கரவாத தடை சட்டம் மீள் திருத்தப்படும் வர்த்தமானி பிரகடனம் வெளியாகியுள்ளது. ஐ.நா மனித உரிமை ஆணையகத்தை, ஐரோப்பிய ஜிஎஸ்பியை நோக்கி, அரசு சார்பாக வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், இதை வேறு வழியில்லாமல் அறிவித்துள்ளார். எனினும் இதுவும் ஒரு முன்னேற்றம்தான். ஆனால், இச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்ற எமது குரலை நாம் நிறுத்திவிடக்கூடாது. அதேவேளை, “உள்நாட்டில் எம்முடன் பேசுங்கள். இந்தியா, அமெரிக்கா, ஐ.நா என வெளி சக்திகளுடன் பேசாதீர்கள்” என எமக்கு வகுப்பு எடுத்து அறிவுரை கூறுபவர்களுக்கும்,…

Read More

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு இன்றும் பிணை மறுப்பு!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சுமார் 21 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ்  ஹிஸ்புல்லாஹ்விற்கு இன்றும் (28) பிணை வழங்க புத்தளம் மேல் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது. ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் பிணை கோரிக்கையை நிராகரித்த புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி, ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணை வழங்க இந்த நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்தார். எவ்வாறாயினும், ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் சார்பில்  பிணை கோாிக்கை முன்வைக்கப்பட்டால் அதற்கு தாம் ஆட்சேபனை தெரிவிக்கபோதில்லை என சட்டமா அதிபர்…

Read More

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற புதிய கட்டடத் தொகுதி நீதி அமைச்சர் அலி சப்ரியினால் திறந்துவைப்பு!

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தின் புதிய கட்டடத்தொகுதி நீதி அமைச்சர் அலி சப்ரியினால் இன்று (28) திறந்து வைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி ரி. சரவணராஜா அவர்களுடைய தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், நீதி அமைச்சர் அலி சப்ரி, நீதி அமைச்சின் செயலாளர், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான், சட்டத்தரணிகள் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Read More

ஜொன்ஸ்டன் உள்ளிட்ட மூவர் விடுதலை!

தேர்தல் பிரசாரங்களுக்காக , 153 சதொச ஊழியர்களை பயன்படுத்தியதாகக் குற்றம் சுமத்தி தொடரப்பட்டிருந்த 03 வழக்குகளில் இருந்து அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ விடுவிக்கப்பட்டார். இலஞ்ச ஊழல்  ஆணைக்குழுவினால் அமைச்சர் ஜொன்ஸ்டன் மற்றும் மேலும் 2 பேருக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது. அமைச்சர் பெர்னாண்டோவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு 2010 ஆம் ஆண்டு வழக்குத் தாக்கல் செய்தது. 2010 – 2014 காலப்பகுதியில் 153 சதொச ஊழியர்களை தேர்தல் பிரசாரம் மற்றும் ஏனைய சேவைகளுக்காக பயன்படுத்தியதாக…

Read More

‘கர்தினாலை சிறையில் அடைக்க சதி’ – பொரளை தேவாலய வெடிகுண்டு விவகார சந்தேகநபரின் மகன் பகிரங்க குற்றச்சாட்டு!

கர்தினால் மல்கம் ரஞ்சித்தை சிறையில் அடைப்பதற்காக அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக, பொரளையில் உள்ள தேவாலயத்தில் வெடிகுண்டு வைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள வைத்தியரின் மகன் ஓஷல ஹேரத் (Oshala Herath) தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் கத்தோலிக்கர்களை சிக்க வைத்து கர்தினாலை சிறையில் அடைக்கும் திட்டம் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொரளை தேவாலயத்தின் மீதான குண்டுவெடிப்பு வெறும் நாடகம் என்றும், தனது தந்தைக்கு மனநோய் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இணைய ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியிலே அவர் இதனை…

Read More

மாலை 6.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சக்தி அமைச்சர் நுகர்வோருக்கு அழைப்பு விடுத்துள்ளார்..!

பீக் ஹவர்ஸில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.இன்று (28) மாலை 6.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சக்தி அமைச்சர் காமினி லொகே நுகர்வோருக்கு அழைப்பு விடுத்துள்ளார். மின் விநியோக அமைப்பில் 20 மெகாவாட் பற்றாக்குறை நிலவுவதால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மற்ற ஜெனரேட்டர்களில் இருந்து மின்சாரம் பெற்று பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

Read More

“பாகிஸ்தானில் உள்ள “காந்தாரா” இலங்கையர்கள் சமய யாத்திரைகளுக்குச் செல்ல ஏற்ற இடமாகும்” – முருத்தெட்டுவே ஆனந்த தேரர்!

பாகிஸ்தானில் உள்ள “காந்தார” பௌத்த பாரம்பரியத்தின் இடங்கள், இலங்கையர்கள் சமய யாத்திரைகளுக்குச் செல்வதற்கு ஏற்ற இடமாகும் என அபயராமய ஆலயம் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் அதிபர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர், தனது ஆலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். முருத்தெட்டுவே ஆனந்த தேரர் மற்றும் ரோயல் கல்லூரி பௌத்த சகோதரத்துவ அமைப்பின் பிரதம ஆலோசகர் கவரகிரியே பிரேமரதன தேரர் ஆகியோர் கலந்துகொண்டு, இங்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,…

Read More

மட்டக்களப்பில் தனியார் பஸ்களுக்கு இடையில் தொடரும் முரண்பாடு; பெரும் சிரமங்களை எதிர்கொள்ளும் பயணிகள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தனியார் பஸ்களுக்கு இடையில் தொடரும் முரண்பாடு காரணமாக பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். அனுமதிப்பத்திரம் இல்லாது, பொலிஸாருக்கு தண்ணி காட்டிவிட்டு, மட்டக்களப்பில் இருந்து கொழும்புக்குப் பயணிக்கும் பஸ்களால் ஏற்படும் அசௌகரியங்கள் தெடர்ந்த வண்ணம் உள்ளன. அவ்வாறே, மட்டக்களப்பில் இருந்து கொழும்புக்கு அனுமதிப்பத்திரம் இல்லாது சென்ற பஸ்களை சிலர் இடைமறித்த காரணத்தால், மட்டக்களப்பு – கல்லடியில் நேற்று (26) இரவு சில மணி நேரம் பதட்டம் ஏற்பட்டது. வீதி போக்குவரத்து அதிகார சபையின் அனுமதிப்பத்திரம்…

Read More

சந்தியா எக்னெலியகொட; வீர பெண்மணியின் விடாத பயணம்! – ஏ.கே.மிஸ்பாஹுல் ஹக்!

பெண்ணுரிமையென அற்ப விடயங்களுக்காக அலட்டிக்கொள்ளும் பெண்களே அதிகம். சந்தியா எக்னெலியகொட அப்படியான ஒருவரல்ல. தனது கணவனின் மரணத்திற்காக தொடர்ச்சியாக 12 வருடங்களாக போராடி வருகிறார். அவரை முதுமை நெருங்கிய போதும், அவரின் செயற்பாடு முதுமையையும் மிஞ்சியதாகவே காணப்படுகிறது. நிச்சயம் இவர் வாழ்த்தப்பட வேண்டிய ஒரு பெண். இவருக்கு வழங்கப்பட்ட வீரதீர பெண்மணிக்கான விருது, அவ் விருதுக்கே பெருமை சேர்க்கும். அண்மையில் தனது கணவனுக்கு நீதி கேட்டு, தமிழ் மத நம்பிக்கையின் அடிப்படையில், தனது முடியை மழித்துள்ளார். அவரது…

Read More

துருக்கி வெளிவிவகார அமைச்சர் இன்று இலங்கை வந்தடைந்தார்!

துருக்கி நாட்டின் வெளிவிவகார அமைச்சர் மெவ்லட் சாவுசோலு (Mevlüt Çavuşoğlu) உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு  இன்று (28) கொழும்பை வந்தடைந்தார். இவருடன் 13 பேரைக்கொண்ட தூதுக்குழுவொன்றும் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது. துருக்கி நாட்டின் விசேட விமானத்தில் இன்று காலை 6. 00 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவர்களை, இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய மற்றும் இலங்கைக்கான துருக்கி தூதுவர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

Read More

மாங்குளம் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீதிமன்ற கட்டிடத் தொகுதி திறந்துவைப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய், மாந்தை கிழக்கு, ஒட்டுசுட்டான் ஆகிய பகுதியைச் சேர்ந்த மக்களின் நலன் கருதி, சிறப்பான சேவையொன்றினைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில், மாங்குளம் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீதிமன்ற கட்டிடத் தொகுதியானது நீதி அமைச்சர் கௌரவ அலிசப்ரி அவர்களினால் நேற்று (27) திறந்து வைக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டம் நிலபரப்பில் அதிகளவான நிலப்பரப்பாக காணப்படுகின்ற நிலையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்திற்கு மக்கள் மிகுந்த தூரங்களில் இருந்து வருகை தரும் போது அவர்களுடைய வழக்குகள் கூப்பிடப்பட்டு அவர்களுக்கு பிடியாணை…

Read More