மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் – ஷானி அபேசேகர..!

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு தமக்கு எதிராக முன்வைத்த பரிந்துரைகளை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.   அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு 2020 ஜூன் 16 ஆம் திகதி தனக்கு அழைப்பு கிடைத்ததாக மனுதாரர் ஷானி அபேசேகர தெரிவித்துள்ளார். அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய தான்…

Read More

நாளாந்தம் சுமார் 04 மணித்தியாலங்கள் மின்சாரம் துண்டிக்கப்படும்..!

நாளாந்தம் சுமார் 04 மணித்தியாலங்கள் மின்சாரம் துண்டிக்கப்படலாம் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். குறைந்தபட்சம் 2022 மார்ச் மாதத்திற்குள் பெரிய அளவிலான கடனைப் பெற்றுக்கொள்ள இலங்கை தவறினால் இந்நிலை ஏற்படும் என கூறினார். ஏப்ரல் மாதம் பருவமழை தொடங்கும் வரையில் தற்போதுள்ள வரையறுக்கப்பட்ட வெளிநாட்டு கையிருப்பில் எரிபொருளை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும் என அவர் கூறினார். இருப்பினும் மழைக்காலம் வரை நாட்டில் எரிபொருளை பயன்படுத்தியே மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டார். மேலும்…

Read More

ஜனாதிபதியின் அக்கிராசன உரையை கிழித்து தொங்கவிட்ட விஜித்த ஹேரத்!

ஜனாதிபதியின் அக்கிராசன உரையின் போது நடைமுறை பிரச்சினைகள் எதற்கும் தீர்வுகள் வழங்கப்படவில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (21) உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, “ஜனாதிபதியின் அக்கிராசன உரையின் போது நடைமுறை பிரச்சினைகள் எதற்கும் தீர்வுகள் வழங்கப்படவில்லை. திருடி சாப்பிடுவது, கடனுக்கு சாப்பிடுவது மற்றும் விற்று சாப்பிடுவதே அரசாங்கத்தின் கொள்கை. தனது இரண்டாண்டு ஆட்சிக்காலத்தில் வெளிநாடுகளிடம் இருந்து கடனை பெறவில்லை என ஜனாதிபதி தனது சிம்மாசன உரையில்…

Read More

கிளிநொச்சி வைத்தியசாலை தீ விபத்து; டக்ளஸ் நேரில் விஜயம்!

கிளிநொச்சி வைத்தியசாலையில் தீ விபத்து ஏற்பட்ட பகுதியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டார். இன்று காலை (21) வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர், சம்பவ இடத்தை பார்வையிட்டதுடன், சம்பவம் தொடர்பில் கேட்டறிந்தார். தொடர்ந்து, கிளிநொச்சி சுகாதார வைத்திய அதிகாரி சரவணபவன், வைத்தியசாலை பணிப்பாளர் சுகந்தன் மற்றும் வைத்தியர்களுடன் விசேட கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். கிளிநொச்சி மாவட்ட, பொது வைத்தியசாலையின், காச நோய் ஆய்வுகூடத்தில் நேற்று (20) இரவு திடீரென தீ பரவியுள்ளதாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய, தீயணைப்பு பிரிவினர்…

Read More

கலை, கலாசர படைப்புகளை பாதுகாக்க காத்தான்குடியில் கிராமிய கலை வட்டங்கள்!

கலாசாரம் மற்றும் கலைஞர்களின் கலைப் படைப்புகளின் பாதுகாப்புக்காக காத்தான்குடியில் கிராமிய கலை வட்டங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ. உதயஸ்ரீதரின் வழிகாட்டலின்கீழ் பிரதேச கலாசார உத்தியோக்கதர் எம்.ஐ.எம். ஜவாஹிர் தலைமையில் கலை வட்டங்களை ஸ்தாபிக்கும் நிகழ்வு இன்று (21) பிரதேசெயலகத்தில் இடம்பெற்றது. அனைத்து கலாசாரம் மற்றும் கலைஞர்களின் கலைப் படைப்புகளின் பாதுகாப்பினை மேம்படுத்துவதற்கும் கிராம மட்டத்தில் கலைஞர்கள் மற்றும் சமுகத்தை அணிதிரட்டுதல் எனும் குறிக்கோளுடன் தேசிய மரபுரிமை, அரங்கக்கலை மற்றும் கிராமிய கலை மேம்பாட்டு இராஜாங்க…

Read More

பொரளையில் பாரிய தீ பரவல்!

பொரளை – கிதுள்வத்த பிரதேசத்தில் உள்ள குடியிருப்பு தொகுதியொன்றில் இன்று (21) காலை தீ விபத்து ஏற்பட்டது. பொரளை, கித்துல்வத்த வீதியில் உள்ள ஐந்து வீடுகளில் தீ பரவியுள்ளததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தீயை அணைக்க ஆறு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்படுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ ஏற்பட்டமைக்கான காரணம் மற்றும் சேத விபரங்கள் தெரியவராத நிலையில் பொரளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Read More

இலங்கை சந்தைகளை ஆக்கிரமித்துள்ள இந்திய அரிசி வகைகள்!

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்தியாவின் தமிழக மாநில அரிசி வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தமிழகத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசி வகைகள் இவ்வாறு நாட்டின் பல்வேறு இடங்களிலும் விற்பனை செய்யப்படுகின்றது. தமிழகத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி வகைகள் உள்நாட்டு அரிசி விலைகளை விடவும் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மக்கள் தமிழக அரிசி வகைகளை கொள்வனவு செய்ய மக்கள் ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இரசாயன உரப் பயன்பாட்டுக்கு அரசாங்கம் விதித்த தடை காரணமாக இம்முறை…

Read More

சாரா ஜெஸ்மினின் கீழ் ஆயுதப் பயிற்சி பெற்ற 10 பெண்களை, சட்டமா அதிபரின் ஆலோசனை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு..!

சாரா ஜெஸ்மினின் கீழ் ஆயுதப் பயிற்சி பெற்ற 10 பெண்களை சட்டமா அதிபரின் ஆலோசனை வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் சந்திம லியனகே நேற்று (19) உத்தரவிட்டார்.   பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். கட்டுவாபிட்டி தேவாலயத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட குண்டுதாரி மொஹமட் ஹஸ்துனின் மனைவியான புலஸ்தினி மகேந்திரன் எனப்படும் சாரா ஜெஸ்மின் என்பவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டிருந்தார். தீவிரவாத சித்தாந்தங்களை பரப்புவதற்கும், முஸ்லிம்…

Read More

முதலீட்டு வாய்ப்புக்களை மேம்படுத்துவதற்கு தென் கொரியா ஒத்துழைப்பு வழங்கும் – தென் கொரிய சபாநாயகர்..!

வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சி மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கு தென் கொரிய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கும் என்று, அந்நாட்டு தேசிய சபையின் சபாநாயகர் பார்க் பியோங் – சியோக் தெரிவித்துள்ளார். பார்க் பியோங்-சியோக் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. ஆசியாவின் கேந்திர நிலையமான இலங்கைக்கு, ஏராளமான முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள கொரிய முன்னணி நிறுவனங்களை ஊக்குவிக்குமாறு பார்க்…

Read More

பிரியந்த குமாரவின் மனைவி பாகிஸ்தானுக்கு நன்றி தெரிவிப்பு – இஸ்லாம் சகிப்புத்தன்மையின் மார்க்கம் என்கிறார் உயர்ஸ்தானிகர்..!

மறைந்த பிரியந்த குமாரவை நினைவுபடுத்தி அனுதாப நிகழ்வொன்று இன்று ( 20 ஜனவரி, 2022 ) கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றது.   சமய மதகுருமார்கள், இலங்கை அமைச்சரவை அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சிரேஷ்ட அரச துறைஅதிகாரிகள், ஊடகப் பிரதிநிதிகள் என அனைத்து தரப்பு மக்களும் இதில் கலந்துகொண்டனர். அத்தோடு, மறைந்த பிரியங்க குமாரின் மனைவி திருமதி நிலுஷி திஸாநாயக்க மற்றும் பிள்ளைகள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.  பௌத்த மற்றும் இஸ்லாமிய மரபுகளின்படி இறந்த ஆத்மா சாந்தியடைய…

Read More

முஸ்லிம்களின் புனிதஸ்தலமான தப்தர் ஜெய்லானி பள்ளிவாசலை அகற்ற முஸ்தீபு!

முஸ்லிம்களின் புனிதஸ்தலமான தப்தர் ஜெய்லானி பள்ளிவாசலை அகற்றுவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென தென்கிழக்கு முஸ்லிம் பேரவை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் அலி சப்ரி மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் வக்பு சபை என்பவற்றுக்கும் அவசர மகஜர்கள் அனுப்பப்பட்டுள்ளன. இவ்விடயம் தொடர்பாக அப்பேரவையின் செயலாளர் செயிட் ஆஷிப், நேற்று (20) தெரிவிக்கையில்; “கூரகல தப்தர் ஜெய்லானி பள்ளிவாசலை அண்மித்து…

Read More

நமது நாடு இவ்வாறு தடுமாற காரணம் நாட்டின் பொருளாதர கொள்கைகளே : சோம்பறிகள் போன்று வாழும் பொருளாதார கொள்கைகளே நம்மீது திணிக்கப்பட்டுள்ளது – ஏ.எல்.எம். அதாஉல்லா எம்.பி..!

நூருல் ஹுதா உமர் தடுமலை விட சிறிய வைரஸினால் உருவான கொரோனா இந்த நாட்டினது மட்டுமின்றி உலகினது போக்கிலும் மாற்றத்தை உண்டாக்கி மனித மனங்களிலும் பாரிய மாற்றத்தை உண்டாக்கியுள்ளது. அதனால் வறுமைக்கோட்டுக்கு கீழ் இலங்கையர்கள் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டு கொண்டிருக்கிறோம். அதற்கான காரணம் வெறுமனே கொரோனாவின் தாக்கம் மட்டுமல்ல. கடந்த காலங்களில் சுதந்திரத்தின் முன்னரும் குறிப்பாக சுதந்திரத்தின் பின்னரும் மேற்கொண்ட பொருளாதார கொள்கையின் முறையற்ற தன்மையினால் நாம் இன்று அரசி, பால்மா, சிறுபிள்ளைகளின் உணவுகள், எண்ணெய், பழ…

Read More

அமைச்சர் பந்துல பாகிஸ்தான் பயணம்..!

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். பாகிஸ்தான் வர்த்தக அமைச்சர் அப்துல் ரசாகின் அழைப்பின் பேரில் அமைச்சர் பாகிஸ்தான் பயணமாகியுள்ளார். இதன்போது அவர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அந்நாட்டின் வர்த்தக சங்கங்களுடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் சார்பில் பிணை கோரப்பட்டால் ஆட்சேபனை தெரிவிக்காமலிருக்க சட்டமா அதிபர் திணைக்களம் தீர்மானம்..!

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக புத்தளம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், ஹிஜாஸ் ஹிஸ்புல்லா சார்பில் பிணை கோரப்பட்டால் அதற்கு ஆட்சேபனை தெரிவிக்காதிருக்க சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளார். தன்னை பிணையில் விடுவிக்குமாறு கோரி சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான பிரதி மன்றாடியார் நாயகம் சுதர்ஷன சில்வா இதனைத்…

Read More

பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவுக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்..!

பாராளுமன்ற நிலையியற் கட்டளை  115 இன் ஏற்பாடுகள் மற்றும் பாராளுமன்றத்தில் இன்று (20) நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று  பாராளுமன்றத்தில் அறிவித்தார். இதற்கமைய சபாநாயகர் இதன் தவிசாளராக நியமிக்கப்படுவதுடன், பிரதிச் சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர், பாராளுமன்றச் சபை முதல்வர், பாராளுமன்ற எதிர்க்கட்சியின் தலைவர், அரசாங்கக் கட்சியின் பிரதம கொறடா, எதிர்க்கட்சியின் பிரதம கொறடா உட்பட மேலும் 21 பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தக்…

Read More

கோட்டாபயவின் அரசியல் அனுபவம் தொடர்பில் விமர்சனம் செய்யும் இராஜாங்க அமைச்சர்..!

எரிவாயு நிறுவனங்களில் நேரடியாக பொறுப்புக் கூற வேண்டிய தலைவர்கள் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்படாமை பிரச்சினைக்குரியது. இது அரச தலைவர் செய்யும் மிகப் பெரிய தவறு என இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். வலையெளி தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், நாட்டில் பாரிய சமையல் எரிவாயு பிரச்சினை மற்றும் எரிவாயு கொள்கலன் வெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. இவற்றுக்கு நேரடியாக பொறுப்புக் கூறவேண்டிய…

Read More

தேசப்பற்றை உடம்பில் பூசிக்கொண்ட அமெரிக்கர்களான ராஜபக்ஷர்கள் நாட்டை இல்லாமல் ஆக்கியுள்ளனர்..!

அரசாங்கம் மக்களின் பெறுமதியான வளங்களை ஒன்றொன்றாக விற்பனை செய்து வருகிறது. பொருளாதாரத்தின் கெடுதியான கொள்கைகளின் பிரதிபலனை நாடு எதிர்நோக்கி வருகின்றது என ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது. இயற்கை வளங்கள் மற்றும் எரிசக்தி துறையில் அரசாங்கம் கை வைத்துள்ளது. அவற்றை விற்பனை செய்து வருகிறது எனவும் அக்கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டின் தேசிய வளமான திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்தியாவுக்கு வழங்கும் உடன்படிக்கையை திரும்ப பெறுமாறு கோரி கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துக்கொண்டு…

Read More

சீன மக்களே சாப்பிடாத அரிசி இலங்கைக்கு..!

சீனாவில் பயிரிடப்படும் நெற்பயிர்களில் இரசாயன உரங்கள் நிறைந்து காணப்படுவதாகவும், இதனையே நாம் இலங்கைக்குள் பெறவுள்ளோம் எனவும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார். “சீனாவில் உள்ள மக்கள் குறைந்த இரசாயனங்கள் மூலம் பயிரிடப்பட்ட அரிசியை சாப்பிடுகிறார்கள். இந்த அரிசி ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. ஏனென்றால், சீனாவின் மண் மிகவும் மாசுபட்டது மற்றும் இரசாயனங்கள் நிரம்பியுள்ளது. சீனாவில் உள்ள மக்கள் கூட தங்கள் சொந்த பொருட்களை சாப்பிட…

Read More

ஆசிரியர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் கொடுப்பனவு இல்லை..!

அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படவுள்ள மாதாந்த மேலதிக கொடுப்பனவான 5,000 ரூபாவை ஆசிரியர்களுக்கு பெற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பாறை வலயக் கல்வி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அரச உத்தியோகத்தர்களுக்கான 5000 ரூபா கொடுப்பனவு 2022 ஜனவரி முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தில் நடைபெற்ற கணக்காளர்கள் சந்திப்பிலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த மேலதிக கொடுப்பனவு, ஆசிரியர் கொடுப்பனவு பட்டியலில் காட்டப்பட்டுள்ள போதிலும், அது கொடுப்பனவுடன்…

Read More

இம்ரான் கானைப் போன்று எமது அரச தலைவர்கள், மன்னிப்புக் கோரினாலே அரைவாசிப் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் – திவாரத்தின..!

மொழிப்பிரச்சினைக்கு அரச மட்டத்தில் இருந்து கண்டிப்பான உத்தரவுகள் வழங்கப்பட வேண்டும். இந்த மொழிப்பிரச்சினைகள் இன்று மட்டுமல்ல ஜி.ஜி.பொன்னம்பலம் காலம் தொட்டு சம்பந்தன் வரையிலான காலத்திலிருந்து வருகின்றது என சிவில் அதிகாரியாகவும் – யுத்தம் முடிவடைந்த காலகட்டத்தில் மீள் புனர்வாழ்வு மற்றும் அத்தியாவசிய சேவை ஆணையாளராகவும், முன்னாள் ஜனாதிபதியின் வடகிழக்கு மீள் புனர்வாழ்வு புனரமைப்பு விசேட செயல் அணியின் செயலாளராக சேவைசெய்த எஸ்.பி .திவாரத்தின தெரிவித்தார்.   ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட மனித உரிமை மற்றும் முன்னைய அறிக்கைகளை கேட்டறியும்…

Read More

தெஹிவளை தற்கொலை குண்டுதாரியின் சகோதரர் உள்ளிட்ட மூவர் விடுதலை: இப்ராஹீம் ஹாஜியார் உள்ளிட்ட மூவருக்கு எதிராக வழக்கு..!

உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட தெஹிவளை ட்ரொபிகல் இன் ஹோட்டலில் குண்டை வெடிக்கச் செய்த தற்கொலைதாரியான ஜெமீலின் சகோதரர் ஏ.எல். ஹக்கீம் உள்ளிட்ட மூவர் சுமார் இரு வருட தடுப்புக் காவலின் பின்னர் குற்றமற்றவர்கள் எனக் கூறி விடுவிக்கப்பட்டுள்ளனர். சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கமைய, கொழும்பு மேலதிக நீதிவான் சந்திம லியனகே முன்னிலையில் உள்ள பீ 10263 எனும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த மூவரே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர். 2019 ஏப்ரல்…

Read More

அரசியல்வாதி அல்லாத கோட்டாபய அரச தலைவரானது எப்படி..?

2019ஆம் ஆண்டு அரச தலைவருக்கான தேர்தலின் போது நாடு இருந்த இக்கட்டான நிலையிலேயே கோட்டாபய ராஜபக்சவை அரச தலைவர் வேட்பாளராகக் கொண்டு வர வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டதென முன்னாள் இராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார். கடந்த அரச தலைவருக்கான தேர்தலின் போது அரசியல்வாதி அல்லாத கோட்டாபய ராஜபக்சவை ஆதரித்து, தற்போது அவர் தொடர்பில் சுசில் பிரேமஜயந்த குறை கூறிவருகிறார். இந்த நிலையில், எமது ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணல்…

Read More

முஸ்லிம் பாடசாலைகளில் விநியோகிக்கப்பட்டிருந்த 6 வகையான இஸ்லாம் பாடநூல்களை உடனடியாக திரும்பப் பெறுமாறு கல்வி அமைச்சு உத்தரவு..!

முஸ்லிம் பாடசாலைகளில் விநியோகிக்கப்பட்டிருந்த 10 வகையான இஸ்லாமிய பாடநூல்களை உடனடியாக திரும்பப் பெறுமாறு கல்வி அமைச்சு உத்தரவிட்டுள்ளது. அதன் விபரம் கீழ் வருமாறு,

Read More

சரத் வீரசேகரவுக்கு கொரோனா – பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதி..!

பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வு பெற்ற றியர் அட்மிரல் சரத் வீரசேகரவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.   இதையடுத்து வீரசேகர பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நோயொன்று காரணமாக பி.சி.ஆர் சோதனை செய்யப்பட்ட நிலையிலேயே வீரசேகரவுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

Read More

ஈஸ்டர் தாக்குதல் சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி, உட்பட சியோன் தேவாலய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் 63 பேரையும் 02ம் மாதம் 02ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் காணொளி மூலமாக இன்று (19) உத்தரவிட்டார். கடந்த 21.4.2019 உயிர்த்த ஞாயிறன்று இடம் பெற்ற தாக்குதலின் பின்னர் சஹ்ரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் இவர்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா போன்ற இடங்களுக்குப் பயிற்சிக்காகச் சென்றார்கள்…

Read More