பிரதேச சபை உறுப்பினர் பதவியிலிருந்து முன்னாள் தவிசாளர் அப்துல் வாஸீத் இராஜினாமா!

பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எஸ்.அப்துல் வாஸீத், தனது பிரதேச சபை உறுப்பினர் பதவியிலிருந்து இன்று (28) இராஜினாமா செய்துள்ளார். அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளருக்கு முகவரியிடப்பட்ட இராஜானிமா கடிதத்தை, பொத்துவில் பிரதேச சபையின் பதில் செயலாளர் ரீ.விஜயசேகரனிடம் கையளித்தார். பொத்துவில் பிரதேச சபையின் ஹிதாயா புரம் வட்டாரத்திற்கான பிரதேச சபை உறுப்பினர் பதவியை சுய விருப்பத்தின் பேரில் இராஜினா செய்கின்றேன் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடிதத்தின் பிரதிகள் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர்,…

Read More

எரிபொருள் விலையேற்றத்தால் தோப்பூர் விவசாயிகள் பாதிப்பு!

திருகோணமலை, தோப்பூர் பிரதேச விவசாயிகள் எரிபொருள் விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர். ஏற்கெனவே ஓர் ஏக்கருக்கு அறுவடை இயந்திரக் கூலி 6,500 ரூபாய் தொடக்கம் 7,000 ரூபாய் கொடுத்ததாகவும் தற்போது எரிபொருளுக்கான விலை அதிகரித்தமையால் அறுவடை இயந்திரக் கூலி ஏக்கருக்கு 9,000 ரூபாய் கொடுக்க வேண்டியுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். இதற்கு முன்னர் ஏக்கருக்கு சுமார் 30 மூடைகள் அருவடை கிடைத்ததாகவும் இம்முறை யூரியா பசளை இல்லாமையால் விளைச்சல் குறைவடைந்து ஏக்கருக்கு 5 தொடக்கம் 10 மூடைகள்…

Read More

இரு எரிபொருள் கப்பல்கள் இன்று இலங்கை வந்தடையும்!

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறையின் மத்தியில் எரிபொருளை ஏற்றிய மேலும் இரண்டு கப்பல்கள் இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக எரிசக்தி அமைச்சு கூறியுள்ளது. சிங்கப்பூரிலிருந்து இன்று இவ் இரண்டு கப்பல்களும் புறப்பட்டுள்ளன. அந்த அடிப்படையில் ஒரு கப்பல் 28,500 மெட்ரிக் தொன் ஒட்டோ டீசல் மற்றும் 9,000 மெட்ரிக் தொன் ஜெட் எரிபொருளைக் கொண்டு வரவுள்ளது. மற்றைய கப்பல் 30,300 மெட்ரிக் தொன் ஒட்டோ டீசல் மற்றும் 7,000 மெட்ரிக் தொன் சூப்பர் டீசல் கொண்டு வரப்படவுள்ளதாக எரிசக்தி…

Read More

அநுராதபுரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் மக்கள் பேரணி!

அரசாங்கம் மீதான மக்களின் அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் நடத்தப்படும் பொதுக்கூட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் 29ஆம் திகதி அநுராதபுரம் சல்காது மைதானத்தில் நடைபெறவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று(28) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் இதனைத் தெரிவித்தார்.

Read More

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்கக்கோரி கையெழுத்து சேகரிக்கும் நிகழ்வில் மக்கள் காங்கிரஸ் கட்சி பங்கேற்பு!

தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணியின் ஏற்பாட்டில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்கக்கோரும் கையெழுத்துச் சேகரிக்கும் நிகழ்விலும், அதுதொடர்பான கவனயீர்ப்பு போராட்டமும் நேற்று (27) மட்டக்களப்பு, காந்திப்பூங்கா சதுக்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக கட்சியின் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சரும்மான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்துகொண்டு, கையொப்பம் இட்டு தனது கருத்துக்களையும் தெரிவித்தார். “சிறுபான்மை இனங்களை இலக்கு வைத்தும், அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களைக் கொண்டவர்களைப் பழி வாங்கும் நோக்கிலும் இச்சட்டம் பயன்படுத்தப்பட்டு…

Read More

உக்ரைன் – ரஷ்ய பேச்சுவார்த்தைக்கான இடம் தயார்..!

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் நடைபெற இருக்கும்  பேச்சுவார்த்தைகளுக்கான இடம் தயாராகிவிட்டதாக பெலாரஸ் தெரிவித்துள்ளது. உக்ரைன்-பெலாரஸ் எல்லையில் 1986 இல் பேரழிவின் போது கைவிடப்பட்ட செர்னோபில் அணு உலைக்கு அருகிலுள்ள விலக்கு மண்டலத்தின் மையத்தில் உள்ள Pryp’yat’ என்ற இடத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது இதேவேளை, இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் இன்னும் “இரண்டு மணி நேரத்தில்” தொடங்கும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read More

ஈஸ்டர் தாக்குதல் குறித்து முன்கூட்டியே எவரும் எனக்கு அறிவிக்கவில்லை – மைத்திரி..!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்த நிலையில் தான் சிங்கப்பூருக்கு சென்றுவிட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மறுத்துள்ளார். மருத்துவ சிகிச்சைக்காகவே சிங்கப்பூர் சென்றேன். வைத்தியசாலையில் இருக்கையில் எனக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாக குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனால் எலிசபத் வைத்தியசாலைக்குள்  தொலைபேசி பாவிக்க முடியாது.எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை. நான் நியமித்த ஆணைக்குழு விசாரணையிலும் நான் இதனை தெரிவித்தேன். என்னை யாரும் அறிவிக்கவில்லை. எந்த தகவலாவது கிடைத்திருந்தால் ஊரடங்கு அமுல்படுத்தி அதனை தடுத்திருப்பேன்….

Read More

IMFஐ நேரடியாக சந்திக்க அமெரிக்கா செல்லும் நிதியமைச்சர்..!

சர்வதேச நாணய நிதியத்தை நாடி உதவி பெறும் நோக்கில் நிதியமைச்சர் ஏப்ரல் மாதம் அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில், நாட்டின் நிதி நிலைமையை சீர் படுத்த வெளிநாடுகளின் உதவிகளைப் பெற தொடர்ச்சியாக முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனினும், மாற்று வழிகள் தோல்வியடைந்துள்ள நிலையில் சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதற்கான முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஒரு வாரத்தில் நாடு வங்குரோத்தாகி விடும்: சம்பிக்க..!

மார்ச் 5ம் திகதியளவில் நாடு வங்குரோத்தாகும் அபாயம் சூழ்ந்துள்ளதாக தெரிவிக்கிறார் சம்பிக்க ரணவக்க. தற்போதைய டொலர் தட்டுப்பாடு பெருவாரியான பொருளாதார தாக்கத்தை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கின்ற சம்பிக்க, விரைவில் மோசமான சூழ்நிலைக்குள் நாடு தள்ளப்படும் என்கிறார். இதேவேளை, சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் பி.சி.ஆர் பரிசோதனை தேவையை அரசு இன்று முதல் நீக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம்; மூவருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது!

பொரளை புனித பரிசுத்தவான் தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான வைத்தியர் உள்ளிட்ட 3  பேரினது விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் இன்று கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட வேளையில் எதிர்வரும் மார்ச் 14ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார். பொரளை புனிய பரிசுத்தவான் தேவாலயத்திலிருந்து கடந்த ஜனவரி 11ஆம் திகதி கைக்குண்டொன்று மீட்கப்பட்டிருந்த நிலையில், சந்தேகநபரான ஓய்வுபெற்ற வைத்தியர் ஜனவரி 18ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

Read More

பொத்துவில், திருக்கோவில் ஆதார வைத்தியசாலைகளுக்கு புதிய அம்பியூலன்ஸ்கள் கையளிப்பு!

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பொத்துவில் மற்றும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைகளுக்கு புதிய அம்பியூலன்ஸ்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இவற்றைக் கையளிக்கும் நிகழ்வு, பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை வளாகத்தில், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் தலைமையில் இன்று (28) இடம்பெற்றது. இதன்போது பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ரி.எஸ்.ஆர்.ரி..ஆர்.ரஜாப் மற்றும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஏ.பி.மசூத் ஆகியோரிடம் அம்பியூலன்ஸ்களின் திறப்பு மற்றும் ஆவணங்கள் கையளிக்கப்பட்டன. கல்முனைப்…

Read More

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்கள் ஹசனலியுடன் பேச்சு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகமும் முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சருமான எம்.ரி.ஹசனலிக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு, ஹசனலியின் நிந்தவூர் இல்லத்தில் நேற்று (27) மாலை நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் எம்.பி, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் மற்றும் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் ஆகியோர் கூட்டமைப்பு சார்பாக இதில் பங்கெடுத்தனர். மாலை 5 மணி தொடக்கம் மாலை 6.30 மணி…

Read More

UNHRC; இலங்கை மீதான அறிக்கைக்கு அன்றைய தினமே பதிலளிக்க பீரிஸ், அலி சப்ரி தலைமையிலான குழுவினர் தயார் நிலையில்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 49வது கூட்டத்தொடர் இன்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகிறது. இலங்கை தொடர்பான விவாதம் எதிர்வரும் 3ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன் அன்றைய தினம் மனித உரிமை ஆணையாளரினால் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கைக்கு அன்றே  பதிலளிப்பதற்கு அரசாங்கம் தயார் நிலையில் உள்ளது. ஐ.நா மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக இலங்கையின் சார்பில் ஜெனீவா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், நீதியமைச்சர் அலி சப்ரி ஆகியோர் அது தொடர்பில் தெரிவிக்கையில்: ஐ.நா மனித…

Read More

பசில் ராஜபக்ஷ மற்றுமொரு வழக்கிலிருந்தும் விடுவிப்பு!

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றுமொரு வழக்கில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார். அரச நிதியை முறைக்கேடாக பயன்படுத்தியமைக்கு எதிராக கடுவளை நீதவான் நீதிமன்றில் அவருக்கு எதிராக நிதிக்குற்றப் புலனாய்வு பிரிவினரால் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இவ்வழக்கு இன்றையதினம் (28) எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதிமன்றம் குறித்த உத்தரவை விடுத்துள்ளது.

Read More

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்!

ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனீவாவில் ஆரம்பமாகின்றது. இந்த கூட்டத்தொடரானது ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பெச்லெட் முன்வைத்துள்ள இலங்கை தொடர்பான புதிப்பிக்கப்பட்டுள்ள எழுத்து மூல ஆவணம் குறித்து எதிர்வரும் 3ஆம் திகதி விவாதிக்கப்படவுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் உரிமைகளை ஏற்றுக்கொள்வது, இலங்கையில் கடந்த காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை செயற்படுத்துவதில்…

Read More

பாப்பரசரை இன்று சந்திக்கின்றார் கர்தினால் மல்கம் ரஞ்சித்!

கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இன்று (28) வத்திக்கானில் உள்ள புனித பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களைச் சந்திக்கவுள்ளதாக கொழும்பு பேராயர் வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன. ரோம் நேரப்படி காலை 11 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பில் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகள் குறித்து இருவரும் கலந்துரையாடுவார்கள் என வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன. உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகள் மற்றும்…

Read More

உக்ரைன் ஆக்கிரமிப்பு, உலக பொலிஸுக்கு எச்சரிக்கை? சுஐப் எம்.காசிம்-

ஆக்குவது கடினம் அழிப்பது இயல்பு என்பார்கள் அப்போது. இவையிரண்டுமே இலகுதான் இப்போது எனுமளவில்தான் நிலைமைகள் உள்ளன. விஞ்ஞான வளர்ச்சி, தொழில்நுட்பத்தின் உயர்ச்சி மற்றும் மனித அறிவின் எழுச்சிகளால்தான் இந்நிலைமைகள் தோற்றம் பெறுகின்றன. மனித அறிவியல் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம், ஆக்குவதற்கு மட்டுமாக இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். அழிக்கவும் இது வழி ஏற்படுத்தியிருக்கிறதே! இன்று அனுபவிக்கும் அத்தனை வசதிகளும் அறிவியல் புரட்சியால் வந்த விளைவுகள்தான். இவற்றில் சிலவற்றை இந்த வளர்ச்சிகள் காலடிக்கும் கொண்டுவந்திருக்கிறதே, இதைவிடச் சிறப்பு எது இருக்கிறது அறிவியலில்?…

Read More