இதுதான் ஜனநாயகமா? – மஹேல ஜெயவர்த்தன..!

ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தினை கடுமையாக சாடியுள்ள மஹேல ஜெயவர்த்தன இதுதான் ஜனநாயகமா என கேள்வி எழுப்பியுள்ளார். டுவிட்டர் பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவதுமக்கள் வன்முறையில் ஈடுபட்டால் அவர்கள் சொத்துக்களை சேதப்படுத்தினால் அவர்களை கைது செய்யலாம், ஆனால் அவர்களை சுடுவதற்கு எந்த காரணமும் இல்லை. இது ஜனநாயகமா? இதுதான் நாட்டின் சட்டமா?இதற்கு காரணமானவர்கள் யார் என்றாலும் அவர்களை நீதியின் முன் நிறுத்தவேண்டும்.இலங்கை பொலிஸாரே நீங்கள் வெட்கப்படவேண்டும்

Read More

அனைத்து பதவிகளில் இருந்தும் சுரேன் ராகவன் நீக்கம்..!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் வகிக்கும் அனைத்து பதவிகளில் இருந்தும் இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் நீக்கப்பட்டுள்ளார். இது குறித்த கடிதம் ஒன்றின் மூலம் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர சுரேன் ராகவனுக்கு தெரியப்படுத்தியுள்ளார். கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலின் பேரில், கட்சியின் பிரதிச் செயலாளர், வன்னி மாவட்ட உறுப்பினர் மற்றும் கட்சியின் சர்வதேச விவகார செயலாளர் பதவிகளில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவனுக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என…

Read More

பாணின் விலை 30 ரூபாவால் அதிகரிப்பு..!

450 கிராம் நிறையுடைய பாணின் விலையை 30 ரூபாவால் அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் தீர்மானித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஏனைய பேக்கரி பொருட்களின் விலைகளை 10 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கோதுமை மாவின் விலை அதிகரிப்பு காரணமாக இவ்வாறு பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Read More

‘சஹ்ரான் பயன்படுத்திய வாகனம் பொலிஸ் பொறுப்பில் இல்லை’ – பொலிஸ் ஊடகப்பிரிவு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் தற்கொலைதாரியான சஹரான் ஹசீமால் பயன்படுத்தப்பட்ட வாகனம், பொலிஸார் பொறுப்பின் கீழ் எடுக்கப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சஹ்ரானின் வாகனம் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகரவால் பயன்படுத்தப்படுகின்றமை தொடர்பில், இன்று ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப் பிரிவு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. அத்துடன், கொள்ளுப்பிட்டி சினமன் கிரான்ட் ஹோட்டலில் தற்கொலை தாக்குதலை நடத்திய மொஹமட் இப்ராஹிம் ஹில்சாப் அஹமட் பயன்படுத்திய WPCAS  1411 என்ற இலக்கத்தையுடைய வாகனமே…

Read More

‘புதிய இராஜாங்க அமைச்சர் ஒவ்வொருவரினதும் விலை 2 மில்லியன் அமெரிக்க டொலர்’ – உண்மையை போட்டுடைத்தார் நளின் பண்டார!

புதிய இராஜாங்க அமைச்சர்கள் ஒவ்வொருவருக்கும் அரசாங்கம் 2 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். ஐந்து பேர் குறித்த தகவல்கள் எங்களிடம் உள்ளன. இந்த அரசாங்கத்தை பாதுகாப்பதற்காக அவர்களிற்கு பணமும் பதவியும் வழங்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார். இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு பணம் பதவிகளை வழங்குவதற்காக சிலர் அவர்களின் வீடுகளிற்கு சென்றுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார் என நளின் பண்டார  தெரிவித்துள்ளார்.

Read More

சத்தியத்தை உறுதிப்படுத்திய பத்ர் களம்!

இஸ்லாமிய வரலாற்றில் பத்ர் நிகழ்வு மகத்தான மாற்றத்தையும், புரட்சிகரமான திருப்பத்தையும் ஏற்படுத்தியது. நன்மைக்கும் தீமைக்கும் இடையில் ஏற்பட்ட பலப்பரீட்சையில், சத்தியத்திற்காகப் போராடியோர் சிறுகுழுவினராக இருந்து கொண்டே தமக்கு எதிராகப் போராடியோரைத் தமது இறைநம்பிக்கையின் வலிமையால் தோற்கடித்தனர். பத்ர் நிகழ்ந்த ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு, ரமழான் திங்கள், பதினேழாம் நாள் இஸ்லாத்தின் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக நோக்கப்படுகிறது. மிகத் திறமை வாய்ந்த 1000 போர் வீரர்களைக் கொண்டிருந்த குறைஷிகளின் அணியை எதிர்கொள்ள, 313 ஸஹாபாத் தோழர்கள் மிகக் குறைந்த…

Read More

ஈஸ்டர் தாக்குதலுக்கு நிலந்த ஜயவர்தன பொறுப்பா?

ஈஸ்டர் தாக்குதலுக்கு அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவர் நிலாந்த ஜயவர்தனவே பொறுப்பு என ஜனாதிபதி சட்டத்தரணி மொஹான் வீரகோன் குற்றஞ்சாட்டியுள்ளார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகள் தொடர்பில் ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முன்னைய தகவல் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்காமைக்கு திரு.நிலந்த ஜயவர்தனவே பொறுப்பு என திரு.மோகன் வீரகோன் தெரிவித்தார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில்…

Read More

அலி சப்ரி தலைமையிலான இலங்கை குழு சர்வதேச நாணய நிதியத்துடன் இரண்டாவது நாளாக பேச்சு!

நிதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.யூ.எம். அலிசப்ரி தலைமையிலான இலங்கை குழு சர்வதேச நாணய நிதியத்துடன் இரண்டாவது நாளாக இன்றும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளது. நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த ஸ்ரீவர்த்தன, இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை, நிதி அமைச்சர் தலைமையிலான இந்த குழுவினர் சர்வதேச நாணய நிதியத்துடன் நேற்று ஆரம்பித்த பேச்சுவார்த்தை சாதகமான முறையில் இடம்பெற்றிருப்பதாக நிதி அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வொஷிங்டனில்…

Read More

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் ஜனாதிபதிக்கு எதிரான குற்றப்பிரேரணை ஆகியவற்றை 20ஆம் திகதி கையளிக்க SJB தீர்மானம்!

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவர இருக்கும் நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் ஜனாதிபதிக்கு எதிரான குற்றப்பிரேரணை ஆகியவற்றை நாளை 20ஆம் திகதி சபாநாயகருக்கு கையளிக்க தீர்மானித்திருக்கின்றது. புத்தாண்டு விடுமுறைக்கு சொந்த இடங்களுக்கு சென்றிருக்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பு திரும்பியதும் அவர்களது  இணக்கப்பாட்டையும் பெற்றுக்கொண்ட பின்னர் கையளிக்க இருப்பதாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். அத்துடன் பிரேரணையை வெற்றிகொள்வதற்கு பாராளுமன்றத்தில் 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகின்றது. எதிர்க்கட்சியில் இருக்கும் அரசியல் கட்சிகள்…

Read More

நெசவுக்கைத்தொழில் உள்நாட்டு ஆடை உற்பத்தி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் முஷாரப் பதவியேற்பு..!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், இன்றையதினம் இராஜாங்க அமைச்சர்கள் சிலர் நியமிக்கப்பட்டுள்ளன. அதன்பிரகாரம்,  நெசவுக்கைத்தொழில் உள்நாட்டு ஆடை உற்பத்தி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் முஷாரப் நியமிக்கப்பட்டுள்ளார். பிள்ளையான் என்றழைக்கப்படும்  சிவநேசதுரை சந்திரகாந்தன்.கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More

இலங்கையின் தேசிய நெருக்கடிக்கு 19வது அரசியலமைப்பு திருத்தம் தற்காலிக தீர்வாக இருக்கலாம் பிரதமர் மஹிந்த..!

இலங்கையின் தேசிய நெருக்கடிக்கு 19 வது அரசியலமைப்பு திருத்தம் தற்காலிக தீர்வாக இருக்கலாம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஒப்புக்கொண்டுள்ளார். ஏப்ரல் புத்தாண்டு விடுமுறையின் பின்னர் பாராளுமன்ற அமர்வுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்று பாராளுமன்றத்தில் அவர் இது தொடர்பாக கருத்து வெளியிட்டார். இத்தருணத்தில் சில திருத்தங்களுடன் அரசியலமைப்பின் 19வது திருத்தம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என தாம் நம்புவதாக பிரதமர் கூறினார். தெஹ் நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடிக்கு குறுகிய கால தீர்வாக இது செயல்படுத்தப்பட வேண்டும்…

Read More

35 சதவீதத்தால் பேருந்து கட்டணங்களும் அதிகரிப்பு!

தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (19) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து பிரயாண கட்டணங்களை 35 சதவீதத்தினால் அதிகரிக்க  தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக, இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. பேருந்து கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் போக்குவரத்து அமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து மேற்படி தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்  தெரிவித்துள்ளது. அதற்கமைய, 20 ரூபாவாக காணப்பட்ட குறைந்தபட்ச…

Read More

முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிப்பு!

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப, கட்டணத்தை மேலும் அதிகரிக்க முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர். அதன்டிபடி, முதல் கிலோமீட்டருக்கான கட்டணம் 80 ரூபாயாகவும் கூடுதல் கிலோமீட்டருக்கு 70 ரூபாயாகவும் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Read More

உணவகங்களில் உணவு பொருட்களின் விலை 20 சதவீதத்தால் அதிகரிப்பு!

உணவகங்களில் உணவு பொருட்களின் விலையை 20 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் டொலர் பெறுமதி அதிகரிப்பு காரணமாக இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டார். இதற்கமைய ஃரைட் ரைஸ், கொத்து மற்றும் சோறு உள்ளிட்டவற்றின் விலை 20 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. உணவு உற்பத்திக்கான மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. உணவுகளை பொதி செய்யும் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இவ்வாறான பின்னணியிலேயே இந்த தீர்மானம்…

Read More

கோதுமை மா விலை அதிகரிப்பு!

ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 40 ரூபாவால் அதிகரிப்பதாக ப்ரீமா நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய ஒரு கிலோகிராம் கோதுமை மாவை 40 ரூபாவால் அதிகரித்து விற்பனை செய்வதாக விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர். உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவதாக ப்றீமா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Read More

40 எம்.பிக்கள் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்வு!

தான் உள்ளிட்ட 40 சுயாதீன எம்.பிக்கள் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்துள்ளதாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட 10 கட்சிகளின் எம்.பிக்கள் மற்றும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் எம்.பிக்கள் உள்ளிட்ட சுயாதீனமாக செயற்பட தீர்மானித்த 40 பாராளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு எதிர்கட்சி ஆசனத்தில் பாராளுமன்றத்தில் அமர்ந்துள்ளனர்.

Read More

CEYPETCOஇன்று நள்ளிரவு முதல்எரிபொருள் விலை அதிகரிப்பு..!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்று (18) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, புதிய CPC எரிபொருள் விலைகள் பின்வருமாறு: பெட்ரோல் ஆக்டேன் 92 – ரூ.  லிட்டருக்கு 338பெட்ரோல் ஆக்டேன் 95 – ரூ.  லிட்டருக்கு 373ஆட்டோ டீசல் – ரூ.  லிட்டருக்கு 289சூப்பர் டீசல் – ரூ.  லிட்டருக்கு 329 இதேவேளை, லங்கா ஐஓசி நிறுவனமும் நேற்று (17) நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை உயர்த்தியிருந்தது. அனைத்து…

Read More

புதிய அமைச்சர்கள் : மாறாத மாற்றம்..!

இன்று புதிய அமைச்சர்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருந்தனர். இதனை ஜனாதிபதி மாற்றமாகவும் குறிப்பிட்டுள்ளார். இதில் அப்படி என்ன மாற்றம் நிகழ்ந்துவிட்டது என்ற கேள்விக்கு சில விடைகள் இருந்தாலும், அது இக் காலத்துக்கு பொருத்தமான மாற்றமா என்பதற்கு யாரிடமும் தெளிவான பதிலிருக்காது. தற்போதைய சூழ் நிலையில் அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்த மாற்றம் நிகழ்ந்திருந்தால், அதுவே பொருத்தமான மாற்றமாக இருந்திருக்கும். குறைந்தது ஐ.தே.கவை வளைத்து போட்டிருக்கலாம். என்ன நடந்தாலும் பிரதமரை கூட விட மனமற்ற இவர்களோடு, எக் கட்சி தான் இணைந்துகொள்ளும்….

Read More

ஹாபீஸ் நஸீரை எண்ணி வெட்கப்படுகிறேன் : மொட்டுக்கு முட்டுக்கொடுப்பதானது சமூகத்திற்கு செய்யும் பலத்த அநீதியாகும் – மு.கா உயர்பீட உறுப்பினர் ஆரிப் சம்சுதீன்..!

நூருல் ஹுதா உமர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹாபீஸ் நஸீர் அஹமட் சுற்றாடல் அமைச்சர் பதவியை பொறுப்பேற்றுக்கொண்டதாக அறிகிறேன். தோல்வியடைந்த அரசில் பதவிகள் பொறுப்பெடுப்பதானது துரோகத்தனமான கண்டனத்துக்குரிய செயற்பாடாக பார்க்கிறோம். எமது நாட்டின் மக்களும், இளைஞர்களும் காலிமுகத்திடலில் நாட்டின் நலனுக்காக ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்று பல நாட்களாக போராட்டத்தை முன்னெடுத்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் தோல்வியின் விளிம்பில் இருக்கும் மொட்டுக்கு முட்டுக்கொடுப்பதானது சமூகத்திற்கு செய்யும் பலத்த அநீதியாகும்…

Read More

சுயாதீனமாக செயற்படும் 41 Mp கள் குழு தங்களை சுயேட்சைக் குழுவாக அங்கீகரிக்குமாறு சபாநாயகரிடம் வேண்டுகோள்..!

அண்மையில் அரசாங்கத்தில் இருந்து விலகிய 41 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். தம்மை தனியான சுயேச்சைக் குழுவாக அங்கீகரிக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கும் வகையில் இன்றைய கலந்துரையாடல் இடம்பெற்றதாக பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். குழுவை எதிர்க்கட்சியில் அமர அனுமதிக்குமாறு எம்.பி.க்கள் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, மற்றும் வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட அரசாங்கத்தின் 11 அங்கத்துவக்…

Read More

அரசியல் கட்சிகளிடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ள தேர்தல் ஆணைக்குழு!

நாட்டில் நிலவும் நெருக்கடிகளுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் மற்றும் அமைப்புகளும் முன்வந்து கலந்துரையாடி தீர்வுகாண வேண்டுமென, தேர்தல் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. நெருக்கடிகள் தொடர்பில் கலந்துரையடி அவற்றுக்கான இணக்கமான தீர்வொன்றை எட்ட வேண்டும் என்பதுடன்,  மக்களின் குரலை தொடர்ந்தும் புறக்கணிப்பது ஆபத்தானது எனவும் தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Read More

அனுபவமில்லாத புதிய அமைச்சரவை தொடர்பில் மஹிந்த கடும் அதிருப்தி..!பதவியேற்பு நிகழ்வையும் பகிஷ்கரித்தார்..!

புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வை பிரதமர் மகிந்த ராஜபக்ச புறக்கணித்து, அதிருப்தியை வெளியிட்டுள்ளார். இந்த முக்கியமான தருணத்தில் எடுக்கப்பட்ட அரசியல் முடிவை தான் ஏற்கவில்லை என்பதை இதன் மூலம் அவர் வெளிப்படுத்தியுள்ளார். இளையவர்களை அடிப்படையாக கொண்ட அமைச்சரவை குறித்து ஜனாதிபதி விருப்பம் வெளியிட்டு வந்த அதேவேளை, பிரதமர் மகிந்த ராஜபக்ச நாடு கடும் நெருக்கடியில் உள்ளதால் முக்கிய அமைச்சரவை பதவிகளிற்கு அனுபவமுள்ளவர்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை பதவியேற்கும் நிகழ்வில்…

Read More

பதவி மோகம் கொண்ட நஸீர் அஹமதும் மற்றும் நமது ஒட்டுண்ணிகளும்..!

ஏறாவூர், கல்குடா தொகுதி மக்களின் வாக்குளால் 2019 பொதுத் தேர்தலில் தேர்வு செய்யப்பட்டு பாராளுமன்ற கட்டிடம் சென்ற நஸீர் அஹ்மத் ( குர்ஆனை முழுமையாக மறந்திருக்க வாய்ப்புண்டு என்பதால் ஹாபிஸ் கேன்சல் செய்யப்பட்டது ) மற்றும் அவரோடு சேர்ந்த நமது ஒட்டுண்ணிகள் முஸ்லிம் சமூகத்தின் வலியை உணராத பிணங்களாக நோக்ககப்பட வேண்டியவர்கள் என்பது அவர்கள் பற்றிய தேடல் சொல்கின்றது. காரணங்கள் பல 1) 20 ம் திருத்ததில் நிறைவேற்று அதிகார முறைமைக்கு முஸ்லிம் சமூகத்தின் தேசிய சமய…

Read More

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்ற முயற்சி – மக்களிற்கான சட்டத்தரணிகள் அமைப்பு தெரிவிப்பு!

சமீபத்தில் நியமிக்கப்பட்ட நீதவான் ஒருவரின் உத்தரவை பயன்படுத்தி, ஜனாதிபதி செயலகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அகற்றுவதற்கான முயற்சிகள் குறித்து, சட்டத்தரணிகள் குழுவொன்று நீதிச்சேவை ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது. மக்களிற்கான சட்டத்தரணிகள் மன்றம் என்ற அமைப்பு இதனை தெரிவித்துள்ளது. அரசாங்க சட்டத்தரணிகள் குழுவொன்று ஆர்ப்பாட்டக்காரர்களை சங்கிரிலா ஹோட்டல் முன்பாக உள்ள ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதற்கான பகுதியுடன் முடக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. சமீபத்தில் நியமிக்கப்பட்ட நீதவான் ஒருவரின் உத்தரவை பயன்படுத்தி, இந்த முயற்சிகள் இடம்பெறுகின்றன. இந்த நீதவான் அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்புள்ளவர்…

Read More

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அமைச்சர் பதவியை ஏற்க மறுத்தேன் : நான் மக்கள் பக்கமாக நின்றே செயற்படுவேன் – ஹரீஸ் எம்.பியின் உடும்புப்பிடி !!

நூருல் ஹுதா உமர் இன்று புதிதாக ஸ்தாபிக்கப்படவுள்ள அமைச்சரவையில் அமைச்சுப் பொறுப்பு ஒன்றை பெற்றுக் கொள்ளுமாறு அரச மேலிடங்களிலிருந்து மூன்று தடவைகள் உத்தியோகபூர்வ அழைப்புகள் விடுக்கப்பட்டன. மக்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும், மக்களின் பிரதிநிதி என்றவகையில் மக்கள் பக்கமாக நின்றே செயற்பட வேண்டும் என்று தீர்மானித்ததன் அடிப்படையில் அரச தரப்பின் அழைப்புகளை முற்றாக தான் நிராகரித்ததாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹாரீஸ் தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு…

Read More