நாட்டுக்காக உயிரை பணயம் வைத்துள்ளேன்; விசேட உரையில் பிரதமர்..!

”உயிரை பணயம் வைத்து இந்த சவாலுக்கு நான் முகம் கொடுப்பேன். அந்த சவாலை வெற்றி கொள்வேன். அதற்கு உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பையும் எனக்கு பெற்றுத் தாருங்கள்.” இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின்போது தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது , கடந்த வியாழக்கிழமை நான் பிரதமர் பதவியை பொறுப்பேற்றேன்.அந்தப் பதவியை நான் கேட்கவில்லை. நாட்டில் ஏற்பட்டிருந்த நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு இந்தப் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு   ஜனாதிபதி எனக்கு அழைப்பு விடுத்தார். நான் அரசியல்…

Read More

ஜனாதிபதி முன் பொலிஸ்மா அதிபருக்கு பொதுஜன பெரமுன Mp க்கள் தூசன மழை – தமக்கு ஆயுதம் தருமாறு கோரிக்கை..!

பாதுகாப்புக்காக தமக்கு துப்பாக்கிகளை வழங்குமாறு, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின்  எம்.பிக்கள் ஜனாதிபதி மற்றும் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகளுக்கு பின்னர், நேற்று முன்தினம் (14) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் , ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின்  பாராளுமன்ற உறுப்பினர்களுடனான கூட்டம் ஒன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மஹிந்த, முன்னாள் அமைச்சர்களான நாமல், ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ ஆகியோர் கலந்துகொள்ளாத நிலையில், முன்னாள் அமைச்சர்…

Read More

நாளை முதல் ரயில் சேவை வழமைக்கு..!

நாளை (17) முதல் வழமை போன்று ரயில் போக்குவரத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி அனைத்து அலுவலக ரயில்களையும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதன் பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார். அனைத்து தொலைதூர ரயில் சேவைகளும் நாளை முதல் இயக்கப்படும் எனவும் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்புக்கான இரவு நேர அஞ்சல் ரயில் மாத்திரம் இயக்கப்படாது என காமினி செனவிரத்ன தெரிவித்தார். அதன்படி நாளையதினம் 374 ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர்…

Read More

பாராளுமன்ற பொதுநிதிக்குழுவிற்குத் தலைமைதாங்கத் தயார்..!

பாராளுமன்ற பொதுநிதிக்குழுவிற்குத் தலைமைதாங்கத் தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா அறிவித்துள்ளார்.

Read More

மஹிந்த வீட்டு நாய்க்குட்டியை திருடிய விவகாரம் – ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினரிடம் விசாரணை..!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மெதமுலன வீட்டில் இருந்த நாய்க்குட்டியை திருடிச் சென்றார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், ஐக்கிய மக்கள் சக்தியின் வீரகெட்டிய பிரதேச சபை உறுப்பினரிடம் பொலிஸ் விசாரணை நடத்துகின்றது. திருடிச்சென்ற நாய்க்குட்டியை பிரதேச சபை உறுப்பினரின் மகள் பராமரித்து வருகின்றார் என அறியமுடிகின்றது. அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குரிய சொத்துக்களுக்கு  தீ மூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

ராஜபக்சக்களின் குடும்பத்திற்குள் மோதல் – கோட்டாபய பதவி விலகி, ரணில் ஜனாதிபதியாகலாம் – அசாத் சாலி..!

ராஜபக்சக்களின் குடும்பத்திற்குள் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக எதிர்வரும் காலங்களில் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகி தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகலாம் என மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமரை ஜனாதிபதி காப்பாற்றாத காரணத்தினால், குடும்பத்திற்குள் கடும் அரசியல் மோதல் ஏற்பட்டுள்ளதுடன்,ஒருவரையொருவர் காட்டிக்கொடுக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Read More

நீர் மின் உற்பத்தி 60 சதவீதமாக அதிகரிப்பு..!

கனமழையால், நீர் மின் உற்பத்தி தற்போது தினசரி மின் உற்பத்தியில் 60 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீப காலமாக நாட்டில் நிலவி வறண்ட வானிலை காரணமாக நீர் மின் உற்பத்தி 18% ஆகக் குறைந்திருந்தது.. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், ஐந்து மாகாணங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் நேற்றும் இன்றும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பதிவானதாக…

Read More

9 ஆம் திகதி வன்முறை சம்பவங்கள் – பாதுகாப்பு செயலாளர் மீது குற்றஞ்சாட்டு..!

கொழும்பு அலரிமாளிகையில் இருந்து கொழும்பு கோட்டாகோகமவிற்கு வந்த வன்முறையாளர்களை தடுக்க வேண்டாமென பாதுகாப்பு செயலாளரே பணிப்புரை விடுத்ததாக தேசிய மக்கள் சக்தியின் பாரா ளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பதவியில் இருக்கும்போதே, சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதில் அர்த்தமில்லை. அவரை பதவி நீக்கம் செய்துவிட்டு விசாரணை நடத்த வேண்டும். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயற்பட்டவர்கள் முன்னாள்…

Read More

புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு – சஜித் அணியினர் தீர்மானம்..!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளது. பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முற்போக்கான தீர்மானத்திற்கே ஆதரவு என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. அத்தோடு புதிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை ஏற்காமல் பாராளுமன்ற செயற்பாட்டின் ஊடாக தமது பூரண ஆதரவை வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளது. இருப்பினும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களுடன் டீல் பேச புதிய அரசாங்கம் முற்பட்டால் ஆதரவை மீளப்பெற்றுக் கொள்வோம்…

Read More