நாளை மின்வெட்டு அமுலாகும் முறை தொடர்பான அறிவிப்பு!

நாளைய தினம் (18) 3 மணிநேரம் 40 நிமிடம் மின்வெட்டை மேற்கொள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களில்  காலை 9.00 மணி முதல்  மாலை 5.00 மணி வரையான காலப்பகுதிக்குள் 2 மணி நேரமும், மாலை 5.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையான  காலப்பகுதியில்  ஒரு மணித்தியாலம் நாற்பது நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும். மேலும், M,N,O,X,Y,Z ஆகிய வலயங்களில் காலை 5.00 மணி முதல்…

Read More

மாத்தளை பிரதேச சமூகசேவகர் ஸைனுதீன் மாஸ்டர் காலமானார்!

முன்னாள் ஆசிரியரும், முஸ்லிம் விவாகப் பதிவாளரும், சமூக சேவையாளருமான அகில இலங்கை சமாதான நீதவான் முஹமட் ஹனிபா ஸைனுதீன் மாஸ்டர் அண்மையில் காலமானர். அன்னாரின் ஜனாசா கடந்த 07.05.2022 மாலை மாத்தளை கொங்காவல முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. கடந்த 06.05.2022 திடீர் சுகவீனமுற்று மாத்தளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஸைனுதீன் மாஸ்டர் சிகிச்சை பலனின்றி மாத்தளை ஆதார வைத்தியசாலையில் காலமானார். இறக்கும் போது இவருக்கு வயது 85 ஆகும். 1936 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்…

Read More

ரணில் பிரதமரானதால் மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

ஒருபுறம் ஆட்சி மாற்றம் வேண்டுமென்று மக்கள் போராடிக் கொண்டிருக்க, மறுபுறம் பிரதமர் பதவிக்காக பலரும் கனவு கண்டுகொண்டிருக்க, இந்தக் கதைக்குள் சத்தமில்லாமல் திடீரென நுழைந்த ரணில் விக்கிரமசிங்க மிகச் சூட்சுமமான முறையில் பிரதமராகியுள்ளார். ஜனாதிபதியும் ஏனைய ராஜபக்‌ஷர்களும் ஒப்பீட்டளவில் தமக்கு பாதுகாப்பான ஒருவரை பிரதமராக  நியமித்ததன் மூலம் ஆறுதலடைந்துள்ளனர். ஆனால், மக்களது எதிர்பார்ப்புக்கள், இறுதி இலக்குகள்  நிறைவேறி, நிரந்தர ஆறுதல் கிடைக்குமா என்பதில் சந்தேகங்கள் இப்போதே மேலெழத் தொடங்கிவிட்டன. கோட்டாபாய  உள்ளிட்ட அனைத்து ராஜபக்‌ஷர்களையும் பதவி விலகுமாறு…

Read More

வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்புவோருக்கான எச்சரிக்கை!

சட்டவிரோதமான வழிகளில் வெளிநாட்டு நாணயங்கள் மாற்றும் மையங்களை (உண்டியல் பரிமாற்றம்) சோதனையிட பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் கூட்டு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். நாட்டில் டொலர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள போதிலும் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நாணயங்களை பரிவர்த்தனை செய்யும் நிறுவனங்கள் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே நேற்று முன்தினம் பெப்பிலியான பிரதேசத்திலுள்ள வீடொன்றில் 2 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 50,000 யூரோக்கள் பொலிஸ்…

Read More

71 எம்.பிக்களுக்கு புதிய வீடுகள்!

அண்மையில் நாட்டில் பல பகுதிகளில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களின் போது 71 நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கும் சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அவர்களுக்கு விரைவாக புதிய வீடொன்றை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தலவத்துகொட பகுதியில் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான இடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக 100 வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன. அவற்றை விரைவில் நிறைவு செய்து பாதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் இடம்பெற்ற வன்முறை காரணமாக சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்கள் தனித்து…

Read More

திருமலையில் படகு கவிழ்ந்ததில் இளைஞன் உயிரிழப்பு!

திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இறக்கக்கண்டி பகுதியில் படகு கவிழ்ந்ததில் இளைஞன் ஒருவர், இன்று (17) காலை உயிரிழந்துள்ளார் என குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர், இறக்ககண்டி, வாழையூற்று பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய துஷ்யந்தன் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். மூன்று இளைஞர்கள் இணைந்து படகில் சென்றபோது, படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனவும் மற்ற இருவரும் உயிர் தப்பியுள்ளனர் எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. உயிரிழந்த இளைஞனின் சடலம், நிலாவெளி வைத்தியசாலைக்கு…

Read More

அச்சிடப்படும் பணமும், நாட்டின் பொருளாதாரமும்!

நிலவும் அரசியல் பொருளாதார நெருக்கடியின் பின்னணியில் அண்மையில் பதவி ஏற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,  அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு பணம் அச்சிடப்பட வேண்டியுள்ளது என்றார். 2021ல், நவீன நாணய கோட்பாட்டின் அடிப்படையில் (Modern Monetary  Theory) அச்சிடப்பட்ட பணத்தின் (நாணயத் தாளின்) பெருமதி  1.2 டிரில்லியன்  Trillion  ரூபாவாகும் (1,200,000,000,000/=). கோடிகளில் ஒரு கோடியே இருபது லட்சமாகும். 2022,ல் அச்சிடப்படவுள்ள பணத் தாளின் பெருமதி 2.78 டிரில்லியன் ஆகும். இதுவரை அச்சிடப்பட்ட பணத்தின் மொத்த பெருமதி…

Read More

21 வது திருத்தச் சட்டம்; சட்டமா அதிபருடன் ரணில் பேச்சு!

செயலிழக்கச் செய்யப்பட்டுள்ள அரசமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தை உயிர்ப்பித்து மீண்டும் நாடாளுமன்றத்தின் ஊடாக நடைமுறைப்படுத்திக் கொள்ளும் வகையில் கொண்டுவரப்படவுள்ள 21ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சட்டமா அதிபருடன் கலந்தாலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த கலந்தாலோசனையானது இன்று (17) மேற்கொள்ளப்பட்டது நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்து அந்த அதிகாரத்தை நாடாளுமன்றத்துக்குப் பெற்றுக்கொடுக்கும் பொருட்டு நல்லாட்சி அரசால் கொண்டுவரப்பட்ட 19ஆவது திருத்தச் சட்டம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு கொண்டுவந்த 20ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக…

Read More

சுமந்திரன் முன்வைத்த பிரேரணை தோற்கடிப்பு!

பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு அதிருப்தி தெரிவிக்கும் பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வது மேலதிக வாக்குகளால் நிராகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனால் குறித்த பிரேரணை கொண்டு வரப்பட்ட நிலையில் அது 51 வாக்குகளால் நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 119 பேரும், எதிர்ப்பாக 68 பேரும் வாக்களித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

தங்கத்தின் விலை வீழ்ச்சி – மேலும் குறைவடையும் வாய்ப்பு!

அமெரிக்க டொலரின் மதிப்பு இரண்டு தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், தங்கத்தின் விலை குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,810 அமெரிக்க டொலர்களாக நேற்றைய தினம் பதிவாகியுள்ளது. அதேசயம், இலங்கையில் 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 185,850 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 170,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Read More

ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணை மீது வாக்கெடுப்பு!

பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எம்.ஏ.சுமந்திரன் முன்வைத்துள்ளார். நிலையியற் கட்டளையின் பிரகாரம் அவ்வாறு செய்யமுடியாது என ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். அப்படியாயின், வாக்கெடுப்புக்குச் செல்வோமென தெரிவித்துள்ளார். அதன்பிரகாரம் வாக்களிப்பு அழைக்கும் மணி, பாராளுமன்றத்தில் ஒலித்துக்கொண்டிருக்கின்றது

Read More

மொட்டுக் கட்சியின் அஜித் ராஜபக்ஷ பிரதி சபாநாயகராக தெரிவு!

புதிய பிரதி சபாநாயகராக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ஷ தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக 109 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அஜித் ராஜபக்ஷ- 109 ரோஹினி கவிரத்ன – 78 செல்லுபடியற்ற வாக்குகள் – 25 பிரதி சபாநாயகர் பதவிக்கு இரண்டு பெயர்கள் நாடாளுமன்றில் இன்று முற்பகல் முன்மொழியப்பட்டு, இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தது. பிரதி சபாநாயகர் பதவிக்கு ரோஹினி கவிரத்னவின் பெயரை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ முன்மொழிந்ததோடு, ஜி.எல்.பீரிஸ் எம்.பி அஜித்…

Read More

முதல் நாளன்றே ரணிலுக்கும் மொட்டுக்கும் இடையில் முரண்பாடு!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையே முதலாவது முரண்பாடு முதல் நாளன்றே தோற்றியுள்ளது. ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றதன் பின்னர், பாராளுமன்றம் இன்று (17) முதன்முறையாக கூடியது. இந்நிலையில், நாளொன்றை வீணடிப்பதைத் தவிர்க்க,  பெண் எம்.பி ஒருவரை பிரதி சபாநாயகராக ஏகமனதாக நியமிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எம்.பி.க்களிடம் கேட்டுக் கொண்டார். எனினும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஆண் எம்.பி ஒருவரின் பெயரை பிரேரித்து முன்மொழிந்தது.  இது, பாராளுமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்புக்கு…

Read More

கைகூடிக் கைகழுவும் காலம்; ரணிலுக்கு அடித்தது யோகம்! -சுஐப் எம். காசிம்-

அரச இயந்திரத்தின் இரட்டைச் சக்கரங்களாக கடந்த இரு தசாப்தங்களாக மஹிந்த ராஜபக்ஷவும், ரணிலும்தான் சுழல்கின்றனர். அரசாங்கத்தின் அச்சாணியாகக் கருதப்படும் உயர் பதவிக்குரிய பிதாமகன்களும் இவ்விருவரும்தான்.2004 முதல் இன்று வரைக்கும் வேறு எவரும் இப்பதவிக்கு எதிரும் புதிருமாக போட்டியிடவில்லை. இதுதான், இவர்களை அங்கீகரிக்கப்பட்ட அடையாளமாக்கி உள்ளது. நாட்டு அரசியலில் கடந்த இரு தசாப்தங்களாக ஏற்பட்ட மாற்றங்கள் இருக்கிறதே!(2004-2022) அரசியலில் நிரந்தர எதிரியுமில்லை, நண்பரும் இல்லை என்பதை நிரூபித்திருக்கிறது. இவ்விருவரும் இப்பதவிக்காக இக்காலப் பகுதியில் எடுத்துக்கொண்ட பிரயத்தனங்களும், வியூகங்களும்தான் தேசிய…

Read More

பாராளுமன்ற வளாகத்திற்கு வந்த மர்ம நபர்கள்; அச்சத்தில் அரசியல்வாதிகள்!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் அல்லாத குழுவொன்று நாடாளுமன்ற வளாகத்திற்குள் பிரவேசித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் அல்லாத நபர்கள் சிலர் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்து காணொளி ஒன்றை பதிவிட்டுள்ளதாகவும் தொலைபேசி அழைப்புகள் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் தற்போது குழு கூட்டம் நடத்தினோம். ஆளும் கட்சி உறுப்பினர்கள் அவ்விடத்திற்கு வந்தார்கள். இதனால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது….

Read More