
பல்கலைக்கழக மாணவர்களின் பேரணியை கலைக்க கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம்!
“கோட்டா-ரணில் சதி அரசாங்கத்தை அகற்றுவோம்” என்ற தொனிப்பொருளில் இன்று (19) பிற்பகல் ஆரம்பமான அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் (IUSF) எதிர்ப்பு பேரணியை நோக்கி, பொலிசார் கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் நடத்தியுள்ளனர். குறித்த பேரணி கொழும்பு உலக வர்த்தக மையத்திற்கு பிரவேசிக்கும் போது இலங்கை வங்கி வீதியில் காவல்துறையினர் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இன்று பிற்பகல் கொழும்பு தாமரை தடாகத்துக்கு அருகாமையில் ஆரம்பமான இந்த நடைபயண பேரணி மருதானை ஊடாக, காலி முகத்திடல் போராட்டக்…