
திருமலை, தம்பலகாமம் பஸ் விபத்தில் 6 பேர் காயம்!
திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கண்டி – திருகோணமலை பிரதான வீதி, தம்பலகாமம் சந்தியை அண்மித்த சுவாமி மலை பிள்ளையார் கோயிலுக்கு முன்பாக வாகன விபத்தொன்று இன்று (25) இடம் பெற்றுள்ளது.திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸும் களனியை நோக்கி சென்ற கனரக வாகனமுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளானது. சுவாமிமலை பிள்ளையார் கோயிலுக்கு முன்னால் பஸ் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் பின்னால் வந்த கனரக வாகனமே மோதியதால் இச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம்…