ஜூலை 22 வரையிலும் பெட்ரோலும், ஜூலை 11 திகதி வரை டீசலும் இல்லை – ரணிலின் சகா அறிவிப்பு..!

ஜூலை மாதம் 22 ஆம் திகதி வரையிலும் பெட்ரோல் இல்லையென்றும், ஜூலை 11 ஆம் திகதி வரையிலும் டீசல் இருக்கானதென்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் விசேட குழு உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார். எனினும், எதிர்வரும் நான்கு வாரங்களுக்குத் தேவையான ஒரு இலட்சம் மெட்ரிக் ​தொன் சமையல் எரிவாயு, ஜூலை மாதத்தில் வரவேண்டும் என்றார். டீசலை இறக்குமதிச்செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஜூலை 2வது வாரத்தில் டீசல் கிடைக்கும்  எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் ஏற்றுமதி தொடர்பாக இந்தியாவுடன்…

Read More

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் வாரத்தில் இரு நாட்களுக்கு மூடப்படும்..!

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் வாரத்தில் இரு நாட்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இவ்வாறு மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சாரதி அனுமதிப்பத்திரம் புதுப்பிப்பதற்காக இணைய வழியில் முற்பதிவு செய்பவர்களுக்காக வேரஹெர சாரதி அனுமதிப்பத்திர விநியோக அலுவலகம், கம்பஹா மற்றும் அனுராதபுரம் மாவட்ட அலுவலகங்கள் வியாழக்கிழமை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

கந்தக்காடு முகாமிலிருந்து தப்பியோடியவர்களில் 232 பேர் சிக்கினர்..!

கந்தக்காடு புனர்வாழ்வு முகாமிலிருந்து தப்பிச்சென்றவர்களில் 232 பேர் பொலிசாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர். புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார். கந்தக்காடு புனர்வாழ்வு முகாமிலிருந்து நேற்றிரவு (28) இடம்பெற்ற மோதலின் போது, புனர்வாழ்வு பெற்றுவந்த 500க்கும் மேற்பட்டோர் வேலிகளை உடைத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். மேற்படி மோதல் சம்பவத்தின்போது, புனர்வாழ்வளிக்கப்பட்டு வந்த கைதி ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார். அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக வெலிகந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று புனர்வாழ்வு நிலையத்துக்கு சென்றிருந்தபோதே இவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது….

Read More

அரபு நாடுகள், இலங்கையில் கால் பதிக்குமா..?

எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகளின் நிறுவனங்கள் இலங்கையில் எரிபொருளை இறக்குமதி செய்யவும், சில்லறை விற்பனையில் ஈடுபடுவதற்கும் வாய்ப்பளிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர முன்வைத்த யோசனைக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின் மொத்த எரிபொருள் தேவையில் 90 சதவீதத்தினை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பூர்த்திசெய்வதுடன், மிகுதி 10 சதவீதத்தினை லங்கா ஐஓசி நிறுவனம்  ஈடுசெய்கிறது. தற்போது, நாடு எதிர்நோக்கியுள்ளது அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக தொடர்ச்சியாக எரிபொருள் தேவையினை பூர்த்திசெய்வது சவாலுக்குரிய செயற்பாடாகியுள்ளது….

Read More

இலங்கையில் அமைதியான ஆர்ப்பாட்டங்கள் கூட வன்முறையாக மாறலாம் – அமெரிக்கா எச்சரிக்கை..!

இலங்கையில் நாடு தழுவிய ரீதியில் நடத்தப்படவுள்ள போராட்டம் தொடர்பில் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது. இலங்கையில் நாளை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நாடு தழுவிய அளவில் “வாகனப் போராட்டம்” நடத்தப்படவுள்ளமை தொடர்பில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் இலங்கையில் உள்ள அமெரிக்க பிரஜைகளுக்கான பயண எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயண எச்சரிக்கையில் மேலும், அனைத்து வாகனங்களையும் வீதிகளில் நிறுத்துமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் சமூக ஊடகங்களில் இதற்கான…

Read More

நாளை கொழும்பை முற்றுகையிடவுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்ப்புப் பேரணி..!

நாளை பாரிய எதிர்ப்பு போராட்டம் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நாளை பாரிய எதிர்ப்பு போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த எதிர்ப்பு போராட்டம் நாளை மதியம் கொழும்பு புறக்கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்னால் இடம்பெறவுள்ளது. அனைத்து மக்களையும் அதில் கலந்துகொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் கேட்டுக்கொண்டுள்ளார். மக்களுக்கு அழைப்பு ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதிக்கு அருகில் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இதேவேளை, இன்று…

Read More

அடுத்த மூன்று வாரங்களுக்கு பெட்ரோல் இறக்குமதி இல்லை! அரசாங்கம் கையை விரித்தது..!

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால் ஜுலை 22 ஆம் திகதி வரை பெட்ரோலை இறக்குமதி செய்ய முடியாது என பிரதமரின் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திடம் நிதி இருந்தாலும், பெட்ரோல் இறக்குமதியை அணுக முடியாது என்று செய்தி ஊடக பணியாளர்கள் கூட்டத்தில் அவர் கூறினார். டீசல் இறக்குமதி தொடர்ந்து கருத்துரைத்த அவர்,”இலங்கையில் தற்போது 11,000 மெட்ரிக் தொன் டீசல், 5,000 மெட்ரிக் தொன் பெட்ரோல், மற்றும் 800 மெட்ரிக் தொன் ஜெட் எரிபொருள் கையிருப்பில்…

Read More

இலங்கைக்கு அமெரிக்கா 20 மில்லியன் டொலர் நிதி உதவி..!

இலங்கையின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்த 20 மில்லியன் டொலர் கூடுதல் உதவியாக வழங்கப்படவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்தார். இன்று நடைபெற்ற G7 உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அமெரிக்க ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இதேவேளை, இலங்கைக்கு 20 மில்லியன் டொலர் கூடுதல் உதவி வழங்குவதாக ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்திருப்பது, உணவுப் பாதுகாப்பு, பொது சுகாதாரம் மற்றும் அனைத்து இலங்கை மக்களின் பொருளாதார நல்வாழ்வுக்கான அமெரிக்காவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை நிரூபிப்பதாக இலங்கைக்கான…

Read More

கட்டார் எரிசக்தி அமைச்சரை சந்தித்தார் காஞ்சன..!

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் கட்டார் சென்றுள்ள அமைச்சர் காஞ்சன விஜயசேகர இன்று கட்டார்  எரிசக்தி அமைச்சர் Saad Sherida Al-Kaabi ஐ சந்தித்து கலந்துரையாடியுள்ளார்

Read More

பொலிசாருக்கும் ஹிருணிகாவுக்கும் இடையில் முரண்பாடு: ஏற்பட்டுள்ள பதற்ற நிலை..!

குற்றவியல் விசாரணை திணைக்கத்திற்கு சென்று ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் பிரிவு தலைவி ஹிருணிகா பிரேமச்சந்திரவை பொலிஸார் செல்லவிடாது தடுத்து நிறுத்தியுள்ளனர். ஊடகவியலாளரும் சமூக செயற்பாட்டாளருமான தரிந்து உடுவரகெதரவை குற்றவியல் விசாரணை திணைக்கத்தில் முன்னிலையாகுமாறு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பாணையை கண்டித்து இன்று கொழும்பு கோட்டையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொள்வதற்காக ஹிருணிகா சென்றிருந்தார். குற்றவியல் விசாரணை திணைக்களம் அமைந்துள்ள இடத்தில் இருந்து பல மீற்றர் தூரத்தில் பொலிஸார் வீதித்தடைகளை ஏற்படுத்தியுள்ளனர். இதனால்இ கோட்டை பகுதியில் சிறிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Read More

பாலமுனை ஜனாஸா வாகனசேவைக்கு 10 வருடங்கள் பூர்த்தி..!

(அப்ஸத்அயாஷ்-பாலமுனை) வைத்தியசாலையில் மரணமாகும் முஸ்லிம் ஜனாஸாக்களை வீடு கொண்டு சேர்க்கும் நோக்கில் பொதுமக்களின் நிதிப்பங்களிப்புடன் அம்பாறை மாவட்டத்தைச் சேரந்த பாலமுனை கிராமத்தில் 2012.06.23ம் திகதி ஆரம்பமான ஜனாஸா வாகன சேவைக்கு 10 வருடங்கள் கடந்துள்ளது. சுமார் 1000 க்கு மேற்பட்ட ஜனாஸாக்களை வைத்தியசாலையில் இருந்து வீடு கொண்டு சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இச்சேவையானது பொத்துவில் தொடக்கம் மருதமுனை வரை வழங்கி வந்த நிலையில் கடந்த சில வருடங்களாக ஏனைய ஊர்களில் இச்சேவையினை ஆரம்பித்து வைத்த காரணத்தினால் தற்போது…

Read More

‘தாத்தா கம் ஹோம்’ என பதாகை ஏந்துவோம் – தம்மிக்க பெரேரா..!

எதிர்வரும் 6 மாதங்களில் இலங்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதே தமது இலக்கு என அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். நாட்டு மக்களின் பசியை போக்கு முடியவில்லை என்றால், அதிகாரத்தில் இருந்து அர்த்தமில்லை என தனது தாய் தெரிவித்ததாக, தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், டொலர்களை உள்ளீர்ப்பதற்கான வழிமுறைகளையும் பட்டியலிட்டுள்ளார். வங்குரோத்தடைந்த கம்பனிகளை பொறுப்பேற்று, அதனை கட்டியெழுப்பும் நிர்வாக திறன் என்னிடமுள்ளது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி சவாலையும் வெற்றிகொள்ள முடியும்…

Read More

எரிபொருள் கப்பலின் வருகை மேலும் தாமதம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் மசகு எண்ணெய் கப்பல்களின் வருகை மேலும் தாமதமடையுமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். குறிப்பிட்ட திகதியில் எரிபொருள் விநியோகிப்பதில் உள்ள சிரமம் தொடர்பில் விநியோகஸ்தர்களால் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். அடுத்த எரிபொருள் கப்பல் நாட்டை வந்தடைந்து தரையிறக்கப்படும் வரை, எரிபொருள் விநியோகத்தின் போது பொது போக்குவரத்து, மின் உற்பத்தி மற்றும் தொழிற்சாலைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார். அடுத்த வாரத்திற்குள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான எரிபொருள்…

Read More

அரசாங்கம் தோல்வியடைந்து விட்டது, விநோதமான தீர்மானங்களை எடுப்பதற்குப் பதிலாக உடன் பதவி விலகுங்கள்..!

அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை வழங்க அரசாங்கம் தீர்மானித்ததன் காரணமாக பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது என்பதை மீண்டும் நிரூபிப்பதாக கட்சியின் தலைவரான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார் இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். நோயாளர்கள் வைத்தியசாலைகளுக்குச் செல்ல முடியாத நிலையிலும், மாணவர்கள் பாடசாலைக்குச் செல்ல முடியாத நிலையிலும், ஏனைய அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாடு ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்….

Read More

புதிய பிரதமர் விரைவில் – 4 பேரின் பெயர்கள் பரிந்துரை..!

இலங்கையில் எதிர்வரும் 20ஆம் திகதிக்குள் புதிய பிரதமரின் கீழ் அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் பல அரசியல் கட்சிகள் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளன.   ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி மற்றும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சுயேட்சை கட்சிகளுக்கு இடையில் இது தொடர்பில் பேச்சுவார்த்தை ஆரம்பித்துள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வகட்சி அரசாங்கத்தின் பிரதமர் பதவிக்கு தம்மிக்க பெரேரா, அனுரகுமார திஸாநாயக்க, மைத்திரிபால சிறிசேன மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோரின்…

Read More

நாட்டின் விடிவுக்கு தடையாக உள்ளவர் கோட்டாவே; மனோ காட்டம்..!

கோட்டாபய இருக்கும் வரை இலங்கையை நம்பி உதவிட உலகம் தயாரில்லை எனவும், நாட்டின் விடிவுக்கு வழிவிடாது ஏன் நந்தி மாதிரி வழி மறித்துக்கொண்டு பதவியில் கோட்டாபய விடாப்பிடியாக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் சினம் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளதாவது, எரிபொருள் விநியோகம் கட்டுப்படுத்தப்படுவதால், ஜூலை 10 வரை நாடு ஏறக்குறைய முடக்கல் நிலையை அடைகிறது. ஆனால் ஜூலை 10த்திற்குப் பிறகும் ஏதும் மாற்று திட்டம் இருக்கின்றதா? என கோடாபயவால் சொல்ல முடியவில்லை….

Read More

சொந்த செலவில் குடிவரவு – குடியகல்வு அலுவலகமொன்றை திறக்கும் தம்மிக்க..!

யாழ்ப்பாணத்தில் புதிய குடிவரவு – குடியகல்வு அலுவலகமொன்றை தனது தனிப்பட்ட செலவில் திறந்து வைக்க எதிர்ப்பார்ப்பதாக அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். ஐந்து மாகாணங்களில் மேலும் ஐந்து குடிவரவு – குடியகல்வு அலுவலகங்களைத் திறக்குமாறு ஜனாதிபதி தன்னிடம் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் முதலாவதாக தனது சொந்தப் பணத்தில் யாழ்ப்பாணத்தில் அலுவலகமொன்றை திறப்பதாக அவர் தெரிவித்துள்ளார்

Read More

எரிபொருள் இறக்குமதிக்கு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி..!

எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகளின் நிறுவனங்கள் இலங்கையில் எரிபொருளை இறக்குமதி செய்யவும், சில்லறை விற்பனையில் ஈடுபடவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர முன்வைத்த யோசனைக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Read More

இலங்கையில் சும்மாயிருப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு..!

நாட்டில் குறைந்தபட்சமாக வேலைத் தேடுபவர்களை விட எந்தவொரு தொழிலையும் செய்யாதோர் அதிகமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் 2021ஆம் ஆண்டிற்கான நாட்டின் வேலைப்படை தரவுளின் படி, நாட்டின் பொருளாதாரத்தில் செயற்பாட்டில் உள்ள மக்கள் தொகை சுமார் 8.55 மில்லியன் ஆக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேசமயம் நாட்டின் பொருளாதாரத்தில் செயற்பாட்டில் அல்லாதோர் சுமார் 8.58 மில்லியனாகவும் காணப்படுகிறது. அவர்களில் , 73 சதவீதமானேர் பெண்களாக உள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

Read More

கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தின் பணிகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு..!

கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தின் பணிகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட நீதிமன்ற பதிவாளர் நாயகத்தின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த பணிகள் இன்று முதல் எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தடை உத்தரவு கோரி, அவசர வழக்குகள் தொடர்பாக தாக்கல்  செய்யப்படும் முறைப்பாடுகள் மற்றும் முன்மொழிவுகளை குறித்த நாளில் காலை 10 மணிக்குள் காப்பகத்தில் ஒப்படைக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த தினத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் நிலையில்,…

Read More

சஜித் பிரேமதாசா எரிபொருளை கொள்வனவு செய்தால், அமைச்சு பதவியை இராஜினாமா செய்யத் தயார் – ஹரின்..!

மூன்று நாடுகளிலிருந்து தன்னால் எரிபொருள் கொள்வனவு செய்ய முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்திருந்தார். நாட்டு நலன் கருதி இதனை அவர் செய்ய வேண்டும் என அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். சஜித் பிரேமதாச, அவ்வாறு எரிபொருளை கொள்வனவு செய்தால், அமைச்சு பதவியை இராஜினாமா செய்வதற்கு தான் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More

ஊடக நிறுவனங்களுக்கு எரிபொருள் வழங்குமாறு கோரிக்கை..!

ஊடகங்களுக்கு தேவையான எரிபொருளை வழங்குமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் எரிசக்தி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக வெகுசன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Read More

இலங்கை முஸ்லிம்களின் மறக்கப்பட்ட வரலாறு..!

இலக்­கிய ஆதா­ரங்கள், வாய்­மொழி ஆதா­ரங்கள் அனைத்­திலும் கவனம் செலுத்தும் முயற்­சிகள் தேவை. ஒரு சிறு­பான்மை சமூ­கத்­திற்­குள்ள பிரச்­சி­னைகள், இஸ்­லா­மி­யர்­க­ளுக்­கு­ரிய வழக்­கா­றுகள், ஆட்­சி­யா­ளர்­க­ளாக முஸ்­லிம்கள் இல்­லாத நிலைமை என்­பன முஸ்லிம் சமூ­கத்தின் வர­லாற்றைக் கட்டி எழுப்­பு­வதில் பிரச்­சி­னை­க­ளாக உள்­ளன. எனினும், வர­வேற்­கத்­தக்க முன்­னேற்­றங்கள் இந்த துறையில் நடந்­தி­ருப்­பதை மறுப்­ப­தற்­கில்லை.   அதிகம் பேசப்­ப­டாத விட­யங்கள் பற்­றிய உணர்­வு­டன்தான் இக்­கட்­டுரைத் தொடர் நான்கு வரு­டங்­க­ளுக்கு முன்னர் ஆரம்­ப­மா­கி­யது. விடி­வெள்ளி ஆசி­ரியர் எம்.பீ.எம்.பைரூ­ஸுக்கு முதலில் நான் நன்றி சொல்ல வேண்டும். இந்தத்…

Read More

ஜனாதிபதியை சந்தித்த அமெரிக்க தூதுக்குழு இலங்கைக்கு தொடர்ந்தும் உதவத் தயார் என தெரிவிப்பு..!

இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் அமெரிக்க உயர்மட்ட தூதுக்குழுவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்து விரிவாக ஆராயப்பட்டது.  இது ஒரு சவாலான நேரம், ஆனால் இலங்கைக்கு வளமான, பாதுகாப்பான மற்றும் ஜனநாயக எதிர்காலத்தை அடைய உதவும் வகையில் நாங்கள் தொடர்ந்து உதவி மற்றும் நீண்ட கால கூட்டாண்மையை வழங்குகிறோம் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் டுவிட் செய்துள்ளார். உயர்மட்ட தூதுக்குழுவில் ஆசியாவுக்கான திறைச்சேரியின் துணைச் செயலாளர் ரொபர்ட்…

Read More

நாடளாவிய ரீதியில் 70% எரிபொருள் நிரப்பு நிலையங்களை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை..!

தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் 70% எரிபொருள் நிரப்பு நிலையங்களை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.   30 நாட்களுக்கு முன்னரே முற்பதிவு செய்த போதிலும், போதியளவு எரிபொருள் இன்னும் கிடைக்கவில்லை என சங்கத்தின் தலைவர் W.S.S. பெர்னாண்டோ தெரிவித்தார். அமைச்சரின் கூற்றுக்கிணங்க எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கு பின்னரே எரிபொருள் கிடைக்கும் என்பதால், வரிசையில் காத்திருக்க வேண்டாம் என அவர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். சிறுதொகை எரிபொருளே…

Read More