ஆகஸ்ட் 12 ஆம் திகதி முதல் புதிய நடைமுறை!

அரச நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் வியாபாரங்களை முன்னெடுக்கும் நிறுவனங்களில் பல வாகனங்கள் இருப்பதால், அந்த வாகனங்களுக்கு ஆகஸ்ட் 12 ஆம் திகதி முதல் QR குறியீட்டில் எரிபொருளை பெற பதிவு செய்ய முடியும் என்று எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஒரு கையடக்க தொலைபேசியை பயன்படுத்தி தமது பதிவுகளை மேற்கொள்ளலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமை பதவி தொடர்பில் மனோ கருத்து!

ஆயுட்கால தலைவராக விடாப்பிடியாக நிற்காமல், வழிவிட்டு, தகுதிகொண்ட பிறருக்கும், பொறுப்பை வழங்க சுயமாகவே முன்வருவது ஒரு முற்போக்கு காரியம் என தான் நினைப்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதில், தன்னை புரிந்துக்கொண்டு நேரடியாகவும், தொலைத்தொடர்பு மற்றும் இணைய வழிமுறைகள் மூலமும் தன்னுடன் கலந்துரையாடியவர்களுக்கு அவர் நன்றியும் தெரிவித்துள்ளார். அவரது முகநூல் பக்கத்திலிட்டுள்ள பதிவில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, 2015 ஆம் வருடம் தமிழ் முற்போக்கு…

Read More

மீண்டும் அமைச்சுப் பதவியை ஏற்றார் நிமல் சிறிபால டி சில்வா!

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சராக நிமல் சிறிபால டி சில்வா, ஜனாதிபதி முன்னிலையில் இன்று (02) பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை அடுத்து, அவரை அமைச்சர் பதவியில் இருந்து அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நீக்கியிருந்தார். அதன்பின்னர், குழுவொன்று விசாரணை நடத்தியது. அதன் அறிக்கை ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்னவிடம் கையளிக்கப்பட்டது. அதில், நிமல் சிறிபாலடி சில்வாவின் மீதான குற்றச்சாட்டுகள் எவையும் நிரூபிக்கப்படவில்லை. அதன்பின்னரே, தன்னுடைய அமைச்சுப் பதவியை…

Read More

வெற்று லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் புதிய விலை அறிவிப்பு!

லிட்ரோ வெற்று எரிவாயு சிலிண்டர்களின் புதிய விலையினை லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, 2.5Kg சிலிண்டர் 7000 ரூபா, 5Kg சிலிண்டர் 11 000 ரூபா, 12.5Kg சிலிண்டர் 14000 ரூபா 37.5Kg சிலிண்டர் 35 000 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படும் என அறிவித்துள்ளது.

Read More

டுபாயிலிருந்து3 கிலோ தங்கம் மற்றும் 39 ஐபோன்களை கொண்டு வந்த குற்றத்தில் 6 பேர் கைது!

கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்தங்கம் மற்றும் இறக்குமதிக்கு  தடைசெய்யப்பட்ட பொருட்களை கடத்த முற்பட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயிலிருந்து இன்று அதிகாலை இலங்கை வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, சுங்கப் பிரிவினரால் சோதனையிடப்பட்டதன் பின்னர் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் அணிந்திருந்த மற்றும் அவர்களின் பயணப் பைகளில் மறைத்து வைத்திருந்த 3.158 கிலோ எடையுள்ள தங்க நகைகளை அதிகாரிகள்…

Read More

அல்-காய்தா தலைவர் ஜவாஹிரி அமெரிக்க தாக்குதலில் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானில் ஆளில்லா விமானத் தாக்குதலில் அல்-காய்தாவின் தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதிப்படுத்தியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சிஐஏ நடத்திய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் அவர் கொல்லப்பட்டார். “அமெரிக்க மக்களுக்கு எதிரான கொலை மற்றும் வன்முறையின் தடத்தை உருவாக்கியவர்” என்று ஜவாஹிரி பற்றி பைடன் கூறியுள்ளார். “இப்போது நீதி வழங்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தலைவர் இப்போது இல்லை” என்று அவர் மேலும் கூறியிருக்கிறார். தனது ரகசிய வீட்டின் பால்கனியில் ஜவாஹிரி இருந்தபோது…

Read More

நிந்தவூரில் உக்கிர கடலரிப்பு – சம்பந்தப்பட்ட தரப்பினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் விசனம்!

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பிரதேசத்தில் தற்பொழுது ஏற்பட்டுள்ள உக்கிர கடலரிப்பு காரணமாக கடற்கரையை அண்டி வாழும் பொதுமக்கள் பல அசௌகரீகங்களை எதிர்கொண்டுள்ளனர். நிந்தவூர் பிரதேசத்தில், பிரிவு-09ல் அமைந்துள்ள மீனவர் கட்டடம் மற்றும் அதனோடு இணைந்ததான வாசிகசாலை என்பன, கடல் அரிப்பால் இடிந்து முற்றாக கடலுக்குள் மூழ்கியுள்ளது. இந்த பிரதேசமானது கடந்த சில மாதங்களாக பாரிய கடல் அரிப்புக்குள்ளாகி வருகிறது. இதுதொடர்பாக இப்பிரதேச பொதுமக்கள் பலருக்கும் தெரியப்படுத்தி உரிய தீர்வை கோரியிருந்தனர். ஆனாலும், குறித்த இந்தகடல் அரிப்பைத் தடுப்பதற்காக…

Read More

கைது செய்யப்படுவதை தடுக்கக்கோரி ‘கோட்டா கோ ஹோம்’ செயற்பாட்டாளரான அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் உயர்நீதிமன்றில் மனு!

தான் கைது செய்யப்படுவதை தடுப்பதற்கு, இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கக் கோரி, காலிமுகத்திடல் ‘கோட்டா கோ ஹோம்” போராட்டக்களத்தின் செயற்பாட்டாளரான அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இதேவேளை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் உள்ளிட்டோருக்கு எதிரான அடக்குமுறைக்கு எதிராக, 1640 அருட்தந்தை மற்றும் அருட்சகோதரிகள் நேற்று  (01) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர். கத்தோலிக்க மதகுருமார்கள் கையொப்பமிட்ட இந்த கூட்டறிக்கையில், அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் உள்ளிட்டோரை கைது…

Read More

ஜூலை 9 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைந்த முதல் ஆர்ப்பாட்டக்காரர் கைது!

ஜூலை 9 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்துக்குள் நுழைந்த முதல் நபர் என அடையாளம் காணப்பட்ட  ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர் பன்னிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த, 38 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்தனர். இந்தக் கைதுக்கு மேலதிகமாக, கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்கு தீவைப்புத் தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் மூவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

Read More

கிழக்கு மாகாண கல்வி வலயங்களுக்கு இடையிலான இடமாற்ற விண்ணப்பம் கோரல் காலம் நீடிப்பு!

கிழக்கு மாகாண கல்வி வலயங்களுக்கு இடையிலான 2023ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஆசிரியர் இடம் மாற்றத்துக்கான விண்ணப்பம், எதிர்வரும் 1ஆம் திகதி வரை கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் திருமதி என்.பிள்ளைநாயகம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலுள்ள சகல கல்வி பணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வலயத்தில் இருந்து இன்னும் ஒரு வலயத்துக்கு தமது விருப்பத்தின் பெயரில் இடம்மாற்றம் பெற விரும்புகின்ற ஆசிரியர்கள் மற்றும் தமது வலயத்துக்கென வலய…

Read More

கிழக்கு இளைஞர்கள் அமைப்பின் மாநாட்டில் பிரதேச செயலாளர் ஆஷிக், அதிபர் யூ.எல்.நஸார், ஊடகவியலாளர் ஸாகிர் உள்ளிட்டோருக்கு கௌரவம்!

கிழக்கு இளைஞர் அமைப்பின் 4 ஆவது ஆண்டு மாநாடு சனிக்கிழமை (30) சாய்ந்தமருது பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. கிழக்கு இளைஞர் அமைப்பின் தலைவரும் முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான தானிஷ் ரஹ்மத்துல்லாஹ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவுக்கு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். இதன்போது பிரதேச செயலாளராக இருந்து சாய்ந்தமருது மண்ணுக்கு வேற்றுமைகள் பாராது தம் பணியை செவ்வனே செய்து அரும்பணியாற்றி வரும் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக், அவரது…

Read More

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் இருதயநோய் சிகிச்சை பிரிவு அங்குரார்ப்பணம்!

அம்பாறை மாவட்டத்தின் பாணமை தொடக்கம் கல்முனை வரையிலான கரையோரப் பிரதேசத்தில் உள்ள மூவின சமூகங்களும் சிறந்த முறையில் சிகிச்சை பெறும் வகையில், இம்மாவட்டத்தின் மத்தியில் சுகாதார அமைச்சின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் அமைக்கப்பட்ட வைத்தியசாலை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை ஆகும். இவ்வைத்தியசாலையின் வளர்ச்சிப் பாதையில் மற்றொரு மைல்கல் இருதய நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்காக இவ்வைத்தியசாலையில் அண்மையில் வைபவரீதியாகத் திறந்து வைக்கப்பட்டுள்ள இருதய நோய் சிகிச்சைப் பிரிவு ஆகும். அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஆஸாத்…

Read More

ஹெலிகாப்டரில் மன்னாருக்கு வந்திறங்கிய ரவி கருணாநாயக்க!

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க விசேட உலங்குவானூர்தி மூலம் இன்று (2) காலை மன்னாருக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இந்த திடீர் விஜயம் குறித்து ரவி கருணாநாயக்கவிடம் ஊடகவியலாளர்கள் வினவிய போது எவ்வித பதிலும் கூறாமல் அவ்விடத்தில் வந்த வாகனத்தில் ஏறி சென்று விட்டார். ரவி கருணாநாயக்கவுடன் T.S.F என அழைக்கப்படும் தனியார் கடல் உணவு உற்பத்தி நிலைய பிரதிநிதிகளும் வருகை தந்த நிலையில், அவர்களின்  வாகனத்திலேயே ரவி கருணாநாயக்க சென்றதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

Read More

கல்முனை மாநகர ஆணையாளர் அன்சாருக்கு பிடியாணை உத்தரவு!

கல்முனை மாநகர ஆணையாளர் எம்.சீ அன்சாருக்கு எதிராக கல்முனை நீதவான் நீதிமன்றினால் இன்று (02) பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட கல்முனை மற்றும் சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்களில் தூர்நாற்றம் வீசுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படாமை தொடர்பில், கல்முனை மாநகர சபை உறுப்பினரான சட்டத்தரணி ரோசன் அக்தாரால் கல்முனை நீதவான் நீதிமன்றில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் கல்முனை மாநகர ஆணையளர் உள்ளிட்ட எட்டுப் பேர் பிரதிவாதிகளாக…

Read More

டலஸின் தொலைபேசி 24 மணிநேரமும் ஒட்டுக்கேட்கப்படுகிறதாம்!

“எனது தொலைபேசி 24 மணிநேரமும் ஓட்டுக்கு கேட்கப்படுகிறது. இதற்கு யார் உத்தரவிட்டார்கள் என்பதை இனி வரும் காலங்களில் வெளிப்படுத்துவேன்” என நேற்று (01) ஒளிபரப்பான தெரண தொலைக்காட்சியின் நேர்காணல்   நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகஸ்பெரும தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது, “இந்த நாட்டில் ஒரு பெரிய மாற்றம் நிகழும் என்று இந்த மக்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர். அந்த நம்பிக்கைக்கு உயிர் கொடுக்க வேண்டியது நம் எல்லோருடைய கடமை. ஆனால், நாட்டில் கடந்த செவ்வாய்க்…

Read More

கோட்டாவுக்கு எவ்வித சலுகையும் வழங்கவில்லை – சிங்கப்பூர் அரசாங்கம்!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சிங்கப்பூர் அரசாங்கம், எந்த சலுகையும் விருந்தோம்பலும் அளிக்கவில்லை என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஷவின் சிங்கப்பூர் வருகை குறித்து, பாராளுமன்ற உறுப்பினர் ஜெரால்ட் கியாமின் கேள்விக்கு பாலகிருஷ்ணன் நேற்று எழுத்துப்பூர்வமாக இந்த பதிலை வழங்கியுள்ளார். பொதுவாக, சிங்கப்பூர் அரசாங்கம் முன்னாள் அரச தலைவர்கள் அல்லது தலைவர்களுக்கு சலுகைகள், மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றை வழங்குவதில்லை. இதன் அடிப்படையில், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் எந்தவித…

Read More

மோசடி, ஊழல் குற்றச்சாட்டிலிருந்து நிமல் சிறிபால டி சில்வா விடுதலை – இன்று அமைச்சுப் பதவி!

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சராக முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று மீண்டும் பதவியேற்கவுள்ளார். சமீபத்தில் ஜப்பானில் உள்ள தாய்ஸ் நிறுவனத்திடம் அவர், இலஞ்சம் வாங்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரி நிமல் சிறிபால டி சில்வா தனது அமைச்சுப் பதவியை கடந்த 6ஆம் திகதி இராஜினாமா செய்தார். இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு முன்னாள் ஜனாதிபதி…

Read More

கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு!

எரிபொருள் நெருக்கடியால் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களுக்குப் பயன்படுத்தப்படும் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார். திருகோணமலையிலிருந்து கொழும்புக்கு 50 கிலோகிராம் கோதுமை மா மூடையை கொண்டு செல்லும் போது, ஒரு மூடைக்கு 300 ரூபா மேலதிகமாக அறவிடப்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார். திருகோணமலையில் இருந்து மருதானைக்கு கடந்த காலங்களில் ரயிலில் கோதுமை மா கொண்டு செல்லப்பட்டதாகவும், தற்போது ரயிலில் கோதுமை மா கொண்டு செல்வது…

Read More

அரச ஊழியர்களுக்கு இனி வெள்ளிக்கிழமை விடுமுறை இல்லை!

அண்மைய நாட்களில்  எரிபொருள் பிரச்சினைகள் காரணமாக, அரசாங்க ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் வழங்கப்பட்ட விசேட விடுமுறை இரத்துச் செய்யப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்குவதற்கான சுற்றறிக்கையை இரத்துச் செய்வதற்கான அங்கிகாரத்தை அமைச்சரவை நேற்று (01) வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார். அண்மைய நாட்களில் நிலவிய போக்குவரத்து நெருக்கடி காரணமாக வெள்ளிக்கிழமையை அரச அலுவலகங்களுக்கான விடுமுறை தினமாக அறிவித்து, பொதுநிர்வாக அமைச்சினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டது. எனினும், தற்போது பொதுப்…

Read More

9ஆவது பாராளுமன்றத்தின் 3 வது கூட்டத் தொடர் நாளை நாளை ஆரம்பம்!

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நாளை (03 ) காலை 10.30 மணிக்கு வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. நிகழ்வில் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களையும் கலந்துகொள்ளுமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க கடிதம் மூலம் கடந்த வாரம் அழைப்பு விடுத்திருந்தார்.  ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் 2290/35 இலக்க விசேட வர்த்தமானி அறிவித்தலூடாக கடந்த ஜூலை 28 ஆம் திகதி ஜனாதிபதியால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரை வைபவரீதியாக…

Read More

சம்மாந்துறை வைத்தியசாலைக்கு அதிநவீன கண் சத்திர சிகிச்சை உபகரணங்கள் வழங்கி வைப்பு!

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு ஒரு கோடி ரூபா பெறுமதியான அதிநவீன கண் சத்திர சிகிச்சை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை, மஜ்லிஷ் அஷ்ஷூரா, உலமா சபை போன்ற முச்சபைகளின் வழிகாட்டலின் கீழ், பொது மக்களினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட சுமார் 01 கோடி ரூபா நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட இந்த உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு, வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் தலைவர் வைத்தியர் ஏ.இஸ்ஸடீன் தலைமையில், வைத்தியசாலை கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சுகாதார சேவைகள் பணிப்பாளர்…

Read More