சரத் வீரசேகரவிற்கு ஏற்பட்ட நிலை, விமல் வீரவன்ச தரப்புக்கு கப்பலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு..!

இலங்கையை வந்தடைந்துள்ள சீனாவின் யுவான் வாங் – 5 கப்பலின் கப்டன் இலங்கை பிரதிநிதிகளை அவமதித்ததாக கருத்துக்கள் வெளியாகியுள்ளன.  கடந்த நாட்களில் சர்ச்சைக்குரிய விடயமாக பரவலாக பேசப்பட்ட இந்த கப்பல் இன்று -16- இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது.  கப்பலை வரவேற்பதற்கென்று முன்னாள் பொதுப் பாதுகாப்பு அமைச்சர்  ரியர் அட்மிரல் சரத் வீரசேகர உள்ளிட்ட குழுவினர் சென்றிருந்தனர்.  இதன்போது, அவரும் அவருடன் சென்ற குழுவினரும் அவமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  சரத் வீரசேகர, சீன கப்பலின் கப்டனுக்கு கைலாகு…

Read More

75 ஆவது சுதந்திர தின விழாவிற்காக அமைச்சரவை உபகுழு நியமனம்..!

2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி வருகின்ற 75 ஆவது சுதந்திர தின விழா நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்காக மற்றும் வழிநடாத்துவதற்காக கீழ்க்காணும் கட்டமைப்புடன் கூடிய அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்காக பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. • ரணில் விக்கிரமசிங்க – ஜனாதிபதி• தினேஷ் குணவர்த்தன – பிரதமர்• டக்ளஸ் தேவானந்தா – கடற்றொழில் அமைச்சர்• சுசில் பிரேமஜயந்த –…

Read More

குழுக்கள் பலவற்றின் தலைமை எதிர்க்கட்சிக்கு..!

முன்னிலை முக்கிய பல குழுக்களின் தலைமை பதவிகளை எதிர்க்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைப்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுவதாகவும், இது மிகவும் சாதகமான நிலைமை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். இதன் பிரகாரம், சம்பந்தப்பட்ட அனைத்து குழுக்களின் தலைவர் பதவியையும் எதிர்க்கட்சிக்கு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யுமாறு அரசாங்கத்திற்கு முன்மொழிவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், நாட்டை கட்டியெழுப்புவதற்கும், நாட்டுக்கு சேவை செய்வதற்கும் அமைச்சுப் பதவிகள் அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்தார். மாறாக, நேர்மறையான பணிகளை மேற்கொள்ள குழுக்களை…

Read More

எரிபொருள் விலை தொடர்பில் அரசு எடுத்துள்ள தீர்மானம்..!

விலைச்சூத்திரத்தின்படி, எரிபொருளின் விலையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் 1 ஆம் மற்றும் 15 ஆம் திகதிகளில் எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். அதன்படி நேற்றிரவு (15) திருத்தம் அமுல்படுத்தப்படவிருந்த போதிலும், அது தொடர்பில் அமைச்சு எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை. உலக சந்தையில் ஒரு கச்சா எண்ணெய் விலை தற்போது மிகவும் குறைவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

பாவனைக்காக அடுத்தமாதம் திறக்கப்படவுள்ள தாமரை கோபுரம்..!

சீன கடனுதவியில் கொழும்பில் நிர்மாணிக்கப்பட்ட தாமரை கோபுரத்தை அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் திறந்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வர்த்தக நன்மைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் முதலீட்டு வாய்ப்புகளுக்காக இந்த 300 மீற்றர் உயர கோபுரத்தை திறக்க கொழும்பு தாமரை கோபுர முகாமைத்துவ தனியார் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, தாமரை கோபுரத்தில் அலுவலக வசதிகள், காட்சியறைகள், மாநாட்டு அரங்குகள் மற்றும் பிரத்தியேகமான வர்த்தக நிலையங்களை பெற முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நன்மைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கம் அவ்வாறே அதில், சர்வதேச…

Read More

வான் – 5 என்ற சீன ஆராய்ச்சிக்கப்பல் ஹம்பாந்தோட்டை வந்தது..!

சர்ச்சைக்குரிய யுவான் வான்-5 என்ற சீன ஆராய்ச்சிக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை இன்று காலை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த கப்பல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்படவுள்ளது. கடந்த 11 ஆம் திகதி கப்பல் நாட்டை வந்தடையவிருந்த நிலையில் உரிய அனுமதி கிடைக்காததால் கப்பலின் வருகை தாமதமானது. குறித்த கப்பலினால் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி காரணமாக இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுக்கூடும் என இந்தியா குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

அர்ஜுன ரணதுங்கவிடம் 2 பில்லியன் ரூபா நஷ்ட ஈடு கோரியுள்ள இலங்கை கிரிக்கெட்..!

விளையாட்டுத்துறை பேரவையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அர்ஜுன ரணதுங்கவிடம் 2 பில்லியன் ரூபா நஷ்ட ஈடு கோரி ஸ்ரீலங்கா கிரிக்கெட் (இலங்கை கிரிக்கெட் நிறுவனம்)  கோரிக்கை   கடிதங்களை    அனுப்பி வைத்துள்ளது. ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினதும் அதன் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களினதும் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அர்ஜுன ரணதுங்க வெளியிட்ட கருத்துக்கு எதிராக நஷ்ட ஈடு வழங்குமாறு கோரியே அர்ஜுன ரணதுங்கவுக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் கடிதம் அனுப்பியுள்ளது. விளையாட்டுத்துறை பேரவையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட அர்ஜுன…

Read More