நீண்ட காலமாக மூடப்பட்டுள்ள மன்னார் – புத்தளம் பாதை மீள் திறப்பு தொடர்பில், ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் அதிகாரிகள் குழுவினர் விஜயம்!

மன்னார் – புத்தளம் பாதை (எலுவன்குளம் ஊடாக) கடந்த பலவருடங்களாக மூடப்பட்டிருந்த நிலையில், அவற்றை மீளத்திறந்து மக்களின் போக்குவரத்து மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கான உதவிகளை செய்யுமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் முன்வைத்த கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைக்கப் பெற்றுள்ளது. அண்மையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி அதன் தலைவர் ரிஷாட் பதியுதீன் தலைமையில், ஜனாதிபதியினை சந்தித்த போது மேற்படி பாதையின் அவசியம் தொடர்பில்…

Read More

தமிழ் அமைப்புகள் மீதான தடை நீக்கம் குறித்து அமைச்சரவையில் விளக்கம்..!

சர்வதேச முதலீடுகளை எதிர்பார்த்து புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடையை சமகால அரசாங்கம் நீக்கியது என்பது சிலரது தனிப்பட்ட கருத்தாகும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன விளக்கமளித்துள்ளார். சர்வதேசத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள கொள்கை மற்றும் விதிமுறைகளுக்கு அமைவாகவே அரசாங்கம் சில புலம்பெயர் அமைப்புகள் மீதான தடையை நீக்கியுள்ளது என்றும் அவர் கூறினார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று (16) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மகாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்குப்…

Read More

13 வருடங்களின் பின்னர் கட்டணங்கள் மறுசீரமைப்பு..!

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் எதிர்வரும் காலங்களில் சாரதி அனும‌தி பத்திரம் மற்றும் வாகன கைமாற்றங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் மறுசீரமைப்பு செய்ய மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அனுமதி கோரியுள்ளது. திணைக்களம் அதன் அனைத்து சேவைகளுக்கான கட்டணங்களைத் மறுசீரமைப்பதற்கு அமைச்சரின் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. இது விரைவில் வர்த்தமானியில் வெளியிடப்படும். 2009 ஆம் ஆண்டு இறுதித் திருத்தம் செய்யப்பட்டது. 13 வருடங்களின் பின்னர் இந்தக் கட்டணங்களுக்கான மறுசீரமைப்பு இடம்பெறவுள்ளதாக ஆணையாளர் வசந்த…

Read More

அவசரகால சட்டத்தை நீட்டிக்கப்போவதில்லை – ஜனாதிபதி..!

இந்த வார இறுதியில் நிறைவடையவுள்ள அவசரகால சட்டத்தை மீண்டும் நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் நிலைமை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதால் அவசரகால சட்டத்தை நீட்டிக்க போவதில்லை என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Read More

நாளை வெடிக்கவுள்ள மாணவர் போராட்டம்! பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவிப்பு..!

கொழும்பில் அரசாங்கத்திற்கு எதிராகபோராட்டமொன்று முன்னெடுக்கப்படுவதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. இந்தப் போராட்டம் நாளைய தினம் (18) கொழும்பில் முன்னெடுக்கப்பட உள்ளதாக குறித்த ஒன்றியம் தெரிவித்துள்ளது. கடந்த மாதங்களில் பொது மக்களுக்கு நிவாரணங்களை வழங்குமாறு கோரி போராட்டங்களை முன்னெடுத்த செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், அவர்களை விடுதலை செய்யப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மேலும், பல்கலைக்கழகங்களில் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்த உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது. 

Read More

கிழக்கு மாகாண ஆளுனராக, பஷீர் சேகு தாவூதை நியமிக்குமாறு கோரிக்கை..!

கிழக்கு மாகாண ஆளுநராக, முன்னாள் அமைச்சர் பஷீர் சேகு தாவூத்தை நியமனம் செய்ய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இலங்கை மக்கள் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் என்.விஷ்ணுகாந்தன் அறிக்கையொன்றில் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்றைய தினம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையொன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.  அதில் மேலும், “கிழக்கு மாகாண ஆளுனராக கிழக்கு மண்ணையும், இங்கு உள்ள மக்களையும் நேசிக்கின்ற கனவான் ஒருவரே நியமிக்கப்பட வேண்டும். அதேபோல அவர் இங்கு வாழ்கின்ற அனைத்து இன…

Read More