
‘மக்களாணையை மீண்டும் பெற்று ஸ்திரமான ஆட்சிக்கு வழிகோலுங்கள்’ – ரிஷாட்!
வங்குரோத்து அடைந்துள்ள இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு இடைக்கால வரவு – செலவுத் திட்டம் எந்தளவில் ஈடுகொடுக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளதாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பாராளுமன்றில் இன்றைய தினம் (02) உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, “நான்கு மாத காலத்துக்கான ஒரு இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தை நிதி அமைச்சரான ஜனாதிபதி சமர்ப்பித்திருக்கின்றார். நீண்ட நாட்களாக வங்குரோத்து நிலையில் இருக்கின்ற நாட்டை கட்டியெழுப்புகின்ற வரவு – செலவுத் திட்டமாக…