சீமெந்து மற்றும் கம்பி போன்ற முக்கிய பொருட்களுக்கு நிர்ணய விலை!

கட்டுமானத் தொழில் துறையில் ஏற்பட்டுள்ள பொருட்களின் விலை உயர்வுகளை அடுத்து, சீமெந்து மற்றும் கம்பி போன்ற முக்கிய பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிப்பது தொடர்பான பரிசீலனையை நுகர்வோர் விவகார அதிகாரசபை மேற்கொண்டு வருவதாக அறியமுடிகிறது. பொருளாதார ஸ்திரமின்மைக்கு மத்தியில் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கான வழிகளைக் கண்டறிந்து உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு வர்த்தக அமைச்சருக்கு ஜனாதிபதி விடுத்த பணிப்புரைக்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சந்தையில் விலைகள் வேகமாக அதிகரித்து வருவதால் கட்டுமானத் துறையில் பல…

Read More

சீனாவின் தரமற்ற பசளையை கொள்வனவு செய்ய முற்பட்டதால் இலங்கை அடைந்த நஷ்டம் அதிகம்!

சீனாவில் இருந்து இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட உரம் தொடர்பான விமர்சனங்கள் இன்னும் தொடர்ந்தபடியே உள்ளன. சீனாவின் உரம் தரமற்றதெனத் தெரிவிக்கப்பட்டு அந்நாட்டுக்ேக திரும்பிச் சென்ற போதிலும், அதனால் இலங்கைக்கு ஏற்பட்ட நஷ்டம் தொடர்பாக இன்னும் விமர்சனங்கள் தொடர்கின்றன. சீனாவில் இருந்து இலங்கைக்கு உரத்தை இறக்குமதி செய்து 69 இலட்சம் டொலர்கள் நஷ்டத்தை ஏற்படுத்து விட்டதாக அவ்வேளையில் ஆட்சியிலிருந்த ஒருசிலர் மீது கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் சீனாவின் கிங்டாவோ சீவின் பயோடெக் நிறுவனத்தை கறுப்புப் பட்டியலில் சேர்க்குமாறு…

Read More

இலங்கையில் இரட்டிப்பாக அதிகரித்த சவப்பெட்டிகளின் விலை!

சவப்பெட்டிகளின் விலை மற்றும் இறுதிக் கிரியைகளுக்கான ஏனைய கட்டணங்களும் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இறந்தவர்களுக்காக, இருப்பவர்கள் பெரும் இன்னல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 30 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட பிணப் பெட்டியின் விலை தற்போது 60 ஆயிரம் ரூபாவரை அதிகரித்துள்ளது. அத்துடன், அமரர் ஊர்தி வாடகை, மலர் வளையங்களின் விலை உட்பட சகல சேவைகளினதும் கட்டணங்கள் வெகுவாக அதிகரித்துள்ளன. அதேசமயம் இறந்தவர்களின் சடலத்தை அஞ்சலிக்காக வைத்திருக்கும் போது பிஸ்கட், தேநீர், குளிர்பானங்கள்…

Read More

அரிசி இறக்குமதி இடைநிறுத்தம்!

அரிசி இறக்குமதியை இடைநிறுத்துவதற்கான எழுத்துமூல அறிவித்தல் ஏற்கனவே உரிய அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்தாண்டு போகத்தில் மொத்தம் 512,000 ஹெக்டேர் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் தெரிவித்தார்.அரசாங்கம் 275,000 ஹெக்டேர் நெற்செய்கைக்காக மதிப்பீடு செய்திருந்தது. ஆனால் கடினமான சூழ்நிலையிலும் விவசாயிகள் தங்கள் வயல்களில் வெற்றிகரமாக செய்கை செய்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார். “நெல் கொள்வனவு செய்வதற்கு இரண்டு பில்லியன் ரூபா தேவைப்படுகிறது மற்றும் இரண்டு அரச வங்கிகள் ஊடாக ரூபா 250 மில்லியன்…

Read More

இராஜாங்க அமைச்சராக பதவியேற்ற சனத் நிஷாந்தவுக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு!

நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சராக இன்று முற்பகல் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புத்தளம் மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவை நீதிமன்றில் ஆஜராகுமாறு, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று  (08) நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. எதிர்வரும் 13ஆம் திகதி அவரை மன்றில் ஆஜராகுமாறும், தாக்கல் செய்யப்பட்டஇரண்டு மனுக்களையும் அன்றையதினம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதற்கும் நீதிமன்றம் தீர்மானித்தது. நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஆர். குருசிங்க ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில்…

Read More

கல்முனையில் சட்டவிரோத அங்காடிகளை அகற்றும் நடவடிக்கை!

கல்முனை மாநகர சபை ஆள்புல எல்லையினுள் பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் சட்டவிரோத வியாபாரத் தலங்களை அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் விடுத்துள்ள பணிப்புரைக்கமைவாக, மாநகர சபையின் வருமான பரிசோதகர்கள் நேற்று (07) முதல் இந்நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பிரதான வீதிகளிலும் உள்ளூர் வீதிகளிலும் சட்டவிரோதமாக பலகை, மேசை மற்றும் கொட்டகை அமைத்து மீன், மரக்கறி, பழ வகைகள், இளநீர் மற்றும் இதர பொருட்களின் வியாபார நடவடிக்கைகளால் வாகனப்…

Read More

பாணின் விலையை அதிகரிக்கக் கோரி யாழ் வெதுப்பக உரிமையாளர் சங்க தலைவருக்கு மிரட்டல்!

ஒரு இறாத்தல் பாணின் விலை 350 ரூபாவாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் யாழ்.மாவட்டத்தில் ஒரு இறாத்தல் பாணின் விலையை 200 ரூபாய்க்கும் மேல் அதிகரிக்கும்படி சிலர் தன்னை மிரட்டி வருவதாக மாவட்ட வெதுப்பக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கந்தையா குணரத்தினம் தெரிவித்தார். நேற்று யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் ஊடகவியலாளரிடம் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், மாவட்டத்தில் பெரும்பாலான…

Read More

பிரபல நடிகை தமிதா அபேரத்னவுக்கு விளக்கமறியல்!

பிரபல நடிகை தமிதா அபேரத்னவை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் இடம்பெற்ற போராட்டத்தின் போது ஜனாதிபதி செயலகத்திற்குள் பலவந்தமாக நுழைந்த சம்பவம் தொடர்பில் இவர் நேற்றிரவு (07) கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதைத் தொடர்ந்து, சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Read More

ரயில் டிக்கெட் ஒன்லைன் முன்பதிவு தொடர்பில் அதிருப்தி!

ஒன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவு மூலம் ரயில்வே திணைக்களத்திற்கு சரியான முறையில் பணம் அனுப்பப்படுகிறதா? என்பதில் சந்தேகம் இருப்பதாக இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார். “பொதுவாக ரயில் நிலையங்களிலுள்ள கருமபீடங்களில் முன்பதிவு உறுதி செய்யப்பட்ட பின்னர் டிக்கெட்டின் அச்சிடப்பட்ட நகல் வழங்கப்படும். ஆனால், டிக்கெட்டின் அச்சிடப்பட்ட நகலை கவனமாகப் பார்க்கும்போது, ​​அடுத்த பயணத்திற்கான ரயில் கட்டணம் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், திரும்பும் பயணத்திற்கான செலவைக் குறிப்பிடவில்லை. எனவே, திரும்பும் பயணத்தின் மூலம்…

Read More

காத்தான்குடி கடற்கரையில் தொடர் கடலரிப்பு – கட்டடங்களுக்கு பாதிப்பு!

காத்தான்குடி கடற்கரையில் கடலரிப்புக் காரணமாக அப்பகுதி கட்டடங்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாக அப்பகுதி மீனவர்களும் பொதுமக்களுக்கும் தெரிவிக்கின்றனர். கடந்த ஒருவாரத்துக்கும் மேலாக இங்கு பாரிய கடலரிப்பு ஏற்பட்டு வருவதுடன், காத்தான்குடி கடற்கரையின் ஏத்துக்கால் பகுதியிலேயே கடலரிப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது. இப்பகுதியிலுள்ள மீன்பிடி படகுககள் கரையை அன்மித்த வீதியின் ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், அப்பகுதியிலுள்ள சிற்றுண்டிச் சாலைகள், கட்டடங்கள், மரங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் நிலை காணப்படுகின்றது. இந்தக் கலரிப்புக் காரணமாக மீன்பிடி படகுகளை கடலுக்கு கொண்டு செல்வதிலும்…

Read More

இலங்கை வருகிறார் சமந்தா பவர்!

அமெரிக்க உதவி திட்டத்தின் தலைமை அதிகாரி சமந்தா பவர் நாளை மறுதினம் (10) சனிக்கிழமை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக அவர் இலங்கை வருகின்றார். அவரது இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ள உள்ளார்.

Read More

கொள்கை இல்லாத தெற்கு கூட்டணிகள்!

சிறுபான்மை மக்களின் உரிமைகளை மதிக்காத விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணியும் உதய கம்மன்பிலவின் பிவிதுரு ஹெல உருமயவும் சேர்ந்து, சிறுபான்மை மக்களின் உரிமைகளை நிராகரிக்காத சமசமாஜ கட்சியுடனும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியுடனும் கூட்டணி அமைத்தால், அக்கூட்டணியின் கொள்கை எவ்வாறானதாக இருக்கலாம்? இக்கட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்தது மட்டுமல்ல, இவை மேலும் சில கட்சிகளுடனும் சேர்ந்து ஞாயிற்றுக்கிழமை (04) புதிய கூட்டணியை அமைத்துள்ளன. அதன் அங்குரார்ப்பணக் கூட்டத்தின் போது, மேடையில் கட்டப்பட்டிருந்த பதாகையில், அதன் பெயர்…

Read More

சஹரானின் மனைவி உட்பட ஐவருக்கு இம்மாதம் 21 வரை விளக்கமறியல்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தேசிய தௌஹீத் ஜமாத் தலைவர் சஹ்ரான் ஹாசிமின் மனைவி உட்பட ஆறு பேரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நேற்று உத்தரவிட்டுள்ளார். சஹ்ரான் ஹாசிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா காடியா, 2019 ஏப்ரலில் சாய்ந்தமருது குண்டுவெடிப்பின் பின்னர் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர்கள் 6 பேரையும் ஸ்கைப் தொழில்நுட்பத்தின் ஊடாக ஆய்வு செய்த பின்னர் அவர்களை மேலும் விளக்கமறியலில்…

Read More

டொலர்களை நாட்டுக்கு கொண்டு வர பிரசன்னவின் மற்றுமொரு திட்டம்!

நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான பயன்படுத்தப்படாத காணிகள் மற்றும் கட்டிடங்கள் அரச மற்றும் தனியார் துறைகளின் ஒத்துழைப்பில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. அபிவிருத்திக்காக அடையாளம் காணப்பட்ட காணிகள் மற்றும் கட்டிடங்களின் எண்ணிக்கை 1008 ஆகும். நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடிக்கு மற்றுமொரு தீர்வாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் இணைந்து இந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்த பொது மற்றும் தனியார் துறை கூட்டு…

Read More

புதிய இராஜாங்க அமைச்சர்கள் சற்றுமுன் பதவிப்பிரமாணம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் 37 இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். இன்று (08) முற்பல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், நிதி இராஜாங்க அமைச்சர், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் ஆகிய 2 இராஜாங்க அமைச்சர்களாக இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜகத் புஸ்பகுமார – வெளிநாட்டு வேலைவாய்ப்பு இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய – நிதி இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம…

Read More

பசிலின் கோரிக்கை நிராகரிப்பு!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ, முப்பத்தாறு இராஜாங்க அமைச்சர்களை  நியமிக்குமாறு கோரி ஜனாதிபதிக்கு பட்டியலை அனுப்பியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், அதனை நிராகரித்த ஜனாதிபதி, ராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கையை 32ஆக குறைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

Apple Unveils Smartwatch With a Focus on Fitness

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries, but also the leap into electronic…

Read More