
எகிப்தில் நடைபெறும் காலநிலை மாநாட்டில் நஸீர் அஹமட் பங்கேற்க தீர்மானம்!
எகிப்தில் நடைபெறவுள்ள காலநிலை மாட்டில் சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் பங்கேற்கவுள்ளார். உலகின் பல தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் சுற்றாடலுடன் தொடர்புடைய புத்திஜீவிகள் கலந்து கொள்ளும் இந்த மாநாட்டில் பல்வேறு விடயங்கள் ஆராயப்படவுள்ளன. கொழும்பிலுள்ள எகிப்திய தூதுவர் மேஜ்ட்மொஷ்லி இதற்கான அழைப்பிதழை கடந்த சனிக்கிழமை அமைச்சரிடம் கையளித்தார். தூதுவரின் தனியார் வாசஸ்தலத்தில் நடந்த இச்சந்திப்பில் பல்வேறு விடயங்கள்குறித்து இவ்விருவரும் கலந்துரையாடினர். இந்த சந்திப்பில் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் Dr அனில் ஜெயசிங்க, ஐநா நிரந்தர வதிவிட பிரதிநிதி…