தேசிய பேரவையின் முதலாவது கூட்டத்தில் இரு உப குழுக்களை அமைக்க தீர்மானம்!

ஆளும் கட்சி, எதிர்க்கட்சியின் பங்குபற்றலுடன் நடைபெற்ற “தேசிய பேரவையின்” முதலாவது கூட்டத்தில் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பில் இரு உப குழுக்களை அமைக்கத் தீர்மானிக்கப்பட்டது. குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால தேசிய கொள்கைகளை வகுப்பதற்கான வழிகாட்டுதல்கள் தொடர்பான பாராளுமன்றத்தின் பொதுவான முன்னுரிமைகளைத் தீர்மானிப்பது மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பான குறுகிய மற்றும் மத்திய கால நிகழ்ச்சித்திட்டத்தை உருவாக்குவது தொடர்பில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவது என்பனவே இந்த உப குழுக்கள் அமைக்கப்படுவதற்கான நோக்கங்களாகும். சபாநாயகர் மஹிந்த யாப்பா…

Read More

பார்வையை இழந்தும் சவால்களை சாதனையாக்கி சிகரம் தொட புறப்பட்ட மாணவி சைசூன்!

பார்வையை இழந்தும் சவால்களை சாதனையாக்கி சிகரம் தொட புறப்பட்ட மாணவி! கல்முனையைச் சேர்ந்த மாணவி அப்துல் சலீம் சைசூன் தரம்-9 இல் கல்வி கற்றுக் கொண்டு இருக்கும்போது, தனது கண்பார்வையினை முழுமையாக இழந்த நிலையில், அதனை ஒரு சவாலாக கொண்டு, கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் கலை வர்த்தக பிரிவில் கல்வி கற்று, பின்னர் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை, கலாசார பீடத்தின் ஆங்கில மொழித்துறையில் முதற்தரத்தில் சித்தியடைந்து, தற்போது பொதுநலவாய நாடுகளுக்கான உதவித் தொகை பெற்று,…

Read More

அமெரிக்கா சென்ற பசிலுக்கு நேர்ந்த கதி!

அமெரிக்கா சென்ற முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இலங்கையுடனான அனைத்து தொடர்புகளையும் துண்டித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அனைத்து விதமாக இலங்கை தொடர்பான செயற்பாடுகளையும் விட்டு விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் தனது தொலைபேசி எண்ணை மாற்றி அமெரிக்காவில் தனியாக வசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பசில் ராஜபக்சவுடன் நெருக்கமாக பணியாற்றுபவர்கள் கூட அவரைத் தொடர்பு கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கோட்டாபய ராஜபக்ச பதவியை விட்டு வெளியேறி புதிய ஜனாதிபதியை நியமித்ததன் மூலம் ராஜபக்ச குடும்பத்திலும், பசில்…

Read More

‘விவசாயிகளுக்கு துப்பாக்கிகள் வழங்கப்படும்’ – மஹிந்த அமரவீர!

வனவிலங்குளிடமிருந்து பயிர்களைக் காக்க விவசாயிகளுக்கும் துப்பாக்கிகள் வழங்கப்படும் என விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார். வன விலங்குகளால் ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்கு முன்வைக்கப்பட்ட யோசனைகள் வெற்றியளிக்காவிட்டால், விவசாயிகளுக்கு துப்பாக்கிகள் வழங்கப்படும் என விவசாய மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கன்னொறுவ விவசாய உற்பத்தி நிலையத்தை நேற்று (28) அவதானித்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,  வன விலங்குகளிடமிருந்து பயிர் சேதங்களைக் குறைப்பதற்கு முன்மொழிவுகளை சமர்ப்பிக்க விவசாய அமைச்சு மற்றும் வனஜீவராசிகள், வனப் பாதுகாப்பு அமைச்சின்…

Read More

சிவில் செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக்க கமகேவுக்கு எதிராக குற்றப்பத்திரம்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் அரசாங்கத்துக்கு எதிராக அதிருப்தி உணர்வுகளை தூண்டினார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ள சிவில் செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக்க கமகேவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில், நேற்று (28) குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அரசாங்கத்தின் மீது அதிருப்தி உணர்வுகளை உற்சாகப்படுத்தியதற்காக அல்லது தூண்ட முயற்சித்தமைக்காக தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் அவருக்கு எதிராக சட்டமா அதிபரால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பிணையிலும், 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான…

Read More

சகாக்களை சந்தித்தார் சுப்பிரமணியன் சுவாமி!

இந்திய பாஜக மூத்த அரசியல்வாதி சுப்ரமணியன் சுவாமி, முன்னாள் ஜனாதிபதியையும், முன்னாள் பிரதமரையும் நேற்று (28) கொழும்பில் சந்தித்தார். கொழும்பில் உள்ள கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட “தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளின் முன்னேற்றத்தின் மூலம் பொருளாதார மறுமலர்ச்சி தேசிய பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை” என்ற தலைப்பில், 15வது சர்வதேச ஆராய்ச்சி மாநாட்டிற்காக சுப்பிரமணியன் சுவாமி இலங்கை வந்துள்ளார். அவருடன் பல இந்திய வழக்கறிஞர்கள் மற்றும் தொழிலதிபர்களும் வந்திருந்தனர். முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் நேற்று…

Read More

அதிபரின் அமானுஷ்ய தாக்குதலுக்கு இலக்கான மாணவி வைத்தியசாலையில் அனுமதி!

நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட கொட்டகலை – போகாவத்த பிரதேச பாடசாலையொன்றில் தரம் பத்தில் கல்வி பயிலும் மாணவியொருவர், அதிபரின் தாக்குதலுக்கு இலக்காகி காயங்களுடன் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டப் பின்னர் மேலதிக ​சிகிச்சைக்காக டிக்கோயா வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார் என, ​கொட்டகலை பிரதேச வைத்திய அதிகாரி சாவித்ரி சர்மா தெரிவித்துள்ளார். பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆசிரியர் தின நிகழ்வுக்காக தனது சகோதரன் 300 ரூபாய் செலுத்தவில்லை என தெரிவித்து, குறித்த அதிபர் மாணவியின் சகோதரனை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்….

Read More

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைத்தியர்கள் சாதனை!

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வாய், முகம் மற்றும் தாடை சம்மந்தமான சிகிச்சை நடவடிக்கைகள் சத்திர சிகிச்சை நிபுணர்களினால் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் சில சிகிச்சைகளுக்காக நோயாளர்கள் வெளி மாவட்டங்களான யாழ்ப்பாணம், வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 27.09.2022 அன்று சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் அகிலன் தலைமையிலான குழுவினரால், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளிக்கு ஆறு மணி நேர முயற்சியின் பலனால்  அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில்…

Read More

கல்முனை ஸாஹிராவின் ‘தங்க’ மாணவர்கள்!

கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியில் கல்வி பயிலும்  தரம் 09 சீ பிரிவை சேர்ந்த மாணவர்களான என்.எம் சப்ரின், கே. கைப் சக்கி, ஏ.எம்.எம் அஸ்ஜத் ஆகிய மூன்று மாணவர்களும், இரண்டு இலட்சத்து எண்பதினாயிரம்  ரூபாய் பெறுமதியான தங்க கைப்பட்டியைக் கல்லூரி வளாகத்தில் கண்டெடுத்து,  கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைத்த சம்பவம்,  செவ்வாய்க்கிழமை (27) இடம்பெற்றது. இந்த மூன்று மாணவர்களும், தாம் கண்டெடுத்த ​கைப்பட்டி தொடர்பாக உரையாடி, தரம் 09 பகுதித் தலைவர் எம்.எஸ்.ஏ சிராஜ் ஆசிரியரிடம் ஒப்படைத்துள்ளனர்….

Read More

22​ஆவது திருத்தம் மீதான விவாதம் விரைவில்!

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6, 7ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சற்றுமுன்னர் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றியக் குழுக் கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Read More

விரைவில் தேர்தல்!

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பு இன்றைய தினம் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் தினேஷ் குணவர்தன விடுத்துள்ள கோரிக்கைக்கு அமையவே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ள தேர்தல்கள் தொடர்பில் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைகளுக்குரிய தேர்தலை எதிர்வரும் 2023 ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின்…

Read More

தேசிய சபையின் ஆரம்பக் கூட்டம் இன்று!

தேசிய சபை முதல் தடவையாக இன்று(29) கூடவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று(29) காலை 10.30 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. தேசிய சபைக்கென தெரிவு செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியலை சபாநாயகர் ஏற்கனவே பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தார். இதனிடையே, பாராளுமன்ற நடவடிக்கை தொடர்பிலான தெரிவுக் குழு கூட்டமும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று(29) நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும்…

Read More

தென்கிழக்குப் பல்கலைக்கழக அறபு மொழி பீடத்தின் 9ஆவது சர்வதேச ஆய்வரங்கு!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அறபு மொழிப் பீடத்தின் 9ஆவது சர்வதேச ஆய்வரங்கு பீடாதிபதி பேராசிரியர் எஸ்.எம்.எம். மஸாஹிர் தலைமையில் தென்கிழக்குப் பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ள, முதுநிலை விரிவுரையாளர் எச்.எம்.ஏ. ஹில்மியின் ஒருங்கிணைப்பில் 28.09.2022 (புதன்) இன்று இணைய வழியிலாகவும் நேரடியாகவும் இடம்பெற்றது. ‘இஸ்லாமிய மற்றும் அறபுக் கற்கைகள் ஊடாக சமூக-பொருளாதார அபிவிருத்தி’ எனும் தொனிப்பொருளில் இவ்வாய்வரங்கு நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாய்வரங்கின் தொடக்க நிகழ்வின்…

Read More