இலங்கையில் பயங்கரவாதத் தடை சட்டத்தை இடைநிறுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை!

சர்வதேச மனித உரிமைகள் சட்டங்கள் மற்றும் நியமங்களுக்கு முழுமையாக இணங்கும் வரை, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இடைநிறுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையிடம் நேற்று (12) கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்...

வாசனைத் திரவியங்களை உள்ளிட்ட பல பொருட்களை மீண்டும் இறக்குமதி செய்ய அனுமதி!

வாசனைத் திரவியங்கள் உட்பட மேலும் பல பொருட்களை கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 300 பொருட்களுக்கான இறக்குமதியை கட்டுப்படுத்தி அரசாங்கம் அண்மையில் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் திருத்தப்பட்டுள்ளது. இறக்குமதி மற்றும்...

பகிடிவதை குற்றச்சாட்டு; மாணவனுக்கு விளக்கமறியல்!

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக மாணவனை பகிடிவதைக்கு உட்படுத்தி தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மாணவனை விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியை சேர்ந்த ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக முதலாம்...

செப்டெம்பர் 19 விசேட விடுமுறை!

எதிர்வரும் செப்டெம்பர் 19 ஆம் திகதி, திங்கட்கிழமை, அரச அலுவலகங்களுக்கு விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரினால் இவ்வறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் எலிசபெத் மகாராணியின்...

உள்ளூராட்சி தேர்தல் அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் – அக்டோபர் 30க்கு பின்னர் வர்த்தமானி வெளியிடப்படும்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அடுத்தாண்டு மார்ச் மாதம் நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அக்டோபர் 30ஆம் திகதிக்கு பின்னர் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம்...

வெள்ளவத்தை கடற்பரப்பில் 40 முதலைகள் – மக்கள் அவதானம்!

வெள்ளவத்தை கடலில் சுமார் 40 முதலைகள் சுற்றித்திரிவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெள்ளவத்தை கடலில் நீராடச் சென்ற கின்ரோஸ் உயிர்காப்பு நிறுவன ஊழியர்கள், முதலை குட்டி ஒன்றை பிடித்து வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து...

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையில் இம்முறை வரலாற்றுச் சாதனை!

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையில் 2021 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகள் மிகவும் சிறந்த முறையில் கிடைக்கப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளதாக அதிபர் ஏ.அப்துல் கபூர் தெரிவித்தார். அந்த...

புதிதாக பதவியேற்ற 37 இராஜாங்க அமைச்சர்களின் பராமரிப்புக்கு மாதம் ஆயிரம் கோடி செலவு!

நேற்றைய தினம் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட 37 இராஜாங்க அமைச்சர்களை பராமரிக்க மாதாந்தம் கிட்டத்தட்ட 100 கோடி அல்லது ஒரு பில்லியன் ரூபா செலவிடப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சி...

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு!

மாணவர்கள் கல்வியின் மூலம் சரியான இலக்கை அடைய வறுமை நிலை காரணமாக அமையக் கூடாது என்ற காரணத்தினால், சமுர்த்தி திணைக்களமானது புலமைப்பரிசில் திட்டத்தை ஆரம்பித்துள்ளது என அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சப்ராஸ் தெரிவித்தார்....

சபுகஸ்கந்த பிளாஸ்டிக் தொழிற்சாலையில் திடீர் தீ!

சபுகஸ்கந்தவில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றில் திடீரென தீ பரவியுள்ளது. தீயை அணைக்க 6 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு சேவை  தெரிவித்துள்ளது. தீக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு ஆர்.ஜே.மீடியா உதவிக்கரம்!

அண்மைக்காலத்தில் சீரற்ற காலநிலையினால் நாட்டில் ஏற்பட்ட தொடர் மழை காரணமாக, பெரும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு, சிரமத்திற்குள்ளான நாவலப்பிட்டி மக்களுக்கு உதவித்தொகை வழங்கும் வைபவம் நேற்று முன்தினம் நாவலப்பிட்டி லபுவல்கோடுவவில் இடம்பெற்றது . இந்நிகழ்வில் ஆர்.ஜே.மீடியாவின்...

சீனாவின் கொவிட் கொள்கைக்கு எதிர்ப்பு – துருக்கியில் ஆர்ப்பாட்டம்!

சீனா முன்னெடுத்துவரும் கொவிட் பெருந்தொற்று பூச்சிய கொள்கைக்கு எதிராக உய்குர் இன மக்கள் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இஸ்தான்புல் நகரின் பாத்திஹ் பூங்காவில் நடைபெற்ற இவ்வார்ப்பாட்டத்தில் இஸ்லாமிய சதாத் கட்சி பிரதிநிதிகள்...

‘நிர்க்கதியான மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசு பொறிமுறை மீது நம்பிக்கை இல்லை’ – மனோ!

பின்தங்கிய நிர்க்கதியான மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசு பொறிமுறை மீது எனக்கு நம்பிக்கை இல்லை. நிவாரணம் பெறுவோரை தெரிவு செய்வதில் பிரதேச செயலக, கிராம சேவகர் மட்ட அரசாங்க அதிகாரிகள் அரசியல் நோக்கிலும், இனவாத...

பாராளுமன்றம் 20ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கம் தொடர்பில் பாராளுமன்றில் விவாதம் ஒன்றை கோரவுள்ளதாக, எதிர்கட்சி இன்று (09) பாராளுமன்றில் தெரிவித்தது. எதிர்கட்சியின் பிரதம அமைப்பாளர் லஷ்மன் கிரியெல்ல இதனை இன்று (09) பாராளுமன்றில் தெரிவித்தார்....

பாராளுமன்றில் 2 நிமிட மௌன அஞ்சலி!

இன்று(09) காலை பாராளுமன்ற அமர்வு ஆரம்பமானதை தொடர்ந்து, பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத்தின் மறைவுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி  செலுத்தப்பட்டுள்ளது. நேற்றையதினம் (08) மரணமடைந்த, இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு இலங்கை பாராளுமன்றத்தில் 2 நிமிட மௌன...

பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபெத் மகாராணி 96 வயதில் காலமானார்!

பிரிட்டனின் நீண்டகால முடியாட்சியை மேற்கொண்டு வந்த மகாராணி இரண்டாம் எலிசபெத், தனது 70 ஆண்டு ஆட்சிக்குப் பின்னர், 96ஆவது வயதில் நேற்று (08) காலமானார். நேற்றையதினம் (08) வியாழக்கிழமை ராணியின் உடல்நிலை கவலைக்கிடமானதை அடுத்து,...

சீமெந்து மற்றும் கம்பி போன்ற முக்கிய பொருட்களுக்கு நிர்ணய விலை!

கட்டுமானத் தொழில் துறையில் ஏற்பட்டுள்ள பொருட்களின் விலை உயர்வுகளை அடுத்து, சீமெந்து மற்றும் கம்பி போன்ற முக்கிய பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிப்பது தொடர்பான பரிசீலனையை நுகர்வோர் விவகார அதிகாரசபை மேற்கொண்டு வருவதாக...

சீனாவின் தரமற்ற பசளையை கொள்வனவு செய்ய முற்பட்டதால் இலங்கை அடைந்த நஷ்டம் அதிகம்!

சீனாவில் இருந்து இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட உரம் தொடர்பான விமர்சனங்கள் இன்னும் தொடர்ந்தபடியே உள்ளன. சீனாவின் உரம் தரமற்றதெனத் தெரிவிக்கப்பட்டு அந்நாட்டுக்ேக திரும்பிச் சென்ற போதிலும், அதனால் இலங்கைக்கு ஏற்பட்ட நஷ்டம் தொடர்பாக இன்னும்...

இலங்கையில் இரட்டிப்பாக அதிகரித்த சவப்பெட்டிகளின் விலை!

சவப்பெட்டிகளின் விலை மற்றும் இறுதிக் கிரியைகளுக்கான ஏனைய கட்டணங்களும் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இறந்தவர்களுக்காக, இருப்பவர்கள் பெரும் இன்னல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 30 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட...

அரிசி இறக்குமதி இடைநிறுத்தம்!

அரிசி இறக்குமதியை இடைநிறுத்துவதற்கான எழுத்துமூல அறிவித்தல் ஏற்கனவே உரிய அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்தாண்டு போகத்தில் மொத்தம் 512,000 ஹெக்டேர் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் தெரிவித்தார்.அரசாங்கம் 275,000 ஹெக்டேர்...

இராஜாங்க அமைச்சராக பதவியேற்ற சனத் நிஷாந்தவுக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு!

நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சராக இன்று முற்பகல் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புத்தளம் மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவை நீதிமன்றில் ஆஜராகுமாறு, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று  (08)...

கல்முனையில் சட்டவிரோத அங்காடிகளை அகற்றும் நடவடிக்கை!

கல்முனை மாநகர சபை ஆள்புல எல்லையினுள் பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் சட்டவிரோத வியாபாரத் தலங்களை அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் விடுத்துள்ள பணிப்புரைக்கமைவாக, மாநகர...

பாணின் விலையை அதிகரிக்கக் கோரி யாழ் வெதுப்பக உரிமையாளர் சங்க தலைவருக்கு மிரட்டல்!

ஒரு இறாத்தல் பாணின் விலை 350 ரூபாவாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் யாழ்.மாவட்டத்தில் ஒரு இறாத்தல் பாணின் விலையை 200 ரூபாய்க்கும் மேல் அதிகரிக்கும்படி...

பிரபல நடிகை தமிதா அபேரத்னவுக்கு விளக்கமறியல்!

பிரபல நடிகை தமிதா அபேரத்னவை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் இடம்பெற்ற போராட்டத்தின் போது ஜனாதிபதி செயலகத்திற்குள் பலவந்தமாக நுழைந்த சம்பவம் தொடர்பில்...

ரயில் டிக்கெட் ஒன்லைன் முன்பதிவு தொடர்பில் அதிருப்தி!

ஒன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவு மூலம் ரயில்வே திணைக்களத்திற்கு சரியான முறையில் பணம் அனுப்பப்படுகிறதா? என்பதில் சந்தேகம் இருப்பதாக இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார். “பொதுவாக ரயில்...