
உள்நாட்டு வருவாய் சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை இன்று ஆரம்பம்!
அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது என உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றில் ஆரம்பமானது. இந்த மனுக்கள் புவனேக அலுவிஹாரே, முர்து பெர்னாண்டோ மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணையின் தொடக்கத்தில் மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் உண்மைகளை சமர்பித்தனர். உயர் நீதிமன்ற நீதிபதிகள் சங்கம்,…