
‘சமுர்த்தி வேலைத்திட்டங்கள் மக்கள் மத்தியில் ஒற்றுமையுடன் செயற்படுவதையிட்டு பெருமிதமடைகிறேன்’ – அம்பாரை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர்!
சமுர்த்தி திட்டத்தின் வேலைத் திட்டங்கள் மக்கள் மத்தியில் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் செயற்படுவதையிட்டு மாவட்ட பணிப்பாளர் என்ற வகையில் பெருமிதமடைகிறேன் என அம்பாரை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சப்ராஸ் தெரிவித்தார். சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கல்முனை பிரதேச செயலகத்தின் கல்முனைக்குடி சமுர்த்தி வலயத்தின் இஸ்லாமாபாத் பிரிவின் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புகளின் ஏற்பாட்டில் “புன்னகை கானும் எமது உலகம்” எனும் தொனிப் பொருளில் சிறுவர் தின நிகழ்வுகள் இஸ்லாமாபாத் சிறுவர் பூங்கா வளாகத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. கல்முனைக்குடி…