“திலினி பிரியமாலியை யாரென்றே எனக்குத் தெரியாது” – முருத்தெட்டுவே ஆனந்த தேரர்!

திலினி பிரியமாலி என்ற பெண்ணை இதற்கு முன்னர் தான் அறிந்திருக்கவில்லை என்றும் திலினி பிரியமாலி என்பவரிடம் தனது ஜீப் வண்டியை வழங்கியதாக மக்கள் விடுதலை முன்னணியின் வசந்த சமரசிங்க சுமத்தும் குற்றச்சாட்டு பொய்யானது எனவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பு, நாராஹேன்பிட்டி, அபயராம விகாரையில் இன்று (14) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். வசந்த சமரசிங்க சமூக ஊடங்களில்  கூறுவது போல் நான் எனது ஜீப் வண்டியை திலினி பிரியமாலியிடம் வழங்கவில்லை. வசந்த…

Read More

ஐ.தே.க தலைமையகமான சிறிகொத்த இடமாற்றம்?

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்த தற்போது அமைந்துள்ள இடத்தில் சில புவியியல் சிக்கல்கள் இருப்பதாக கண்டறியப்பட்டதையடுத்து அது வேறு இடத்திற்கு மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விடயம் இன்னும் கலந்துரையாடலில் உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உதவித் தலைவர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ஆரம்பகட்ட கலந்துரையாடல்களை முன்னெடுத்தோம் ஆனால் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். பெருந்தோட்டத்துறை சங்கத்தின் தற்போதைய அலுவலகம்…

Read More

பணமின்மையால் சுமார் 60 பில்லியன் ரூபா பெறுமதியான காசோலைகள் நிராகரிப்பு!

இலங்கையில் இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டு பகுதியில் சுமார் 60 பில்லியன் ரூபா பெறுமதியான காசோலைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. வங்கியில் பணமின்றி இந்த காசோலைகள் இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பாரியளவிலான தொகை காசோலைகள் நிராகரிக்கப்பட்டமை பாரிய பிரச்சினை என சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர் முஹீட் ஜீரான் தெரிவித்துள்ளார். இதனால் அநேகமான வியாபாரங்கள் பெரும் நெருக்கடி நிலைமையை எதிர்நோக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த 2022ம் ஆண்டுக்கான இரண்டாம்…

Read More

குர்­ஆனில் சத்தியம் செய்யவைத்து, பிணக்குக்கு தீர்வுகண்ட பௌத்த தேரர் – விகாரையில் சம்பவம்!

கிந்­தோட்ட பள்­ளி­வா­சலில் மசூரா மூலம் தீர்த்­துக்­கொள்­ளப்­பட வேண்­டிய கருத்து முரண்­பா­டு­க­ளுடன் கூடிய பிரச்­சி­னை­யொன்று, பன்­சலை வரை சென்று தற்­கா­லி­க­மாக சமா­தானம் செய்து வைக்­கப்­பட்­டுள்­ளது. இப்­பள்­ளி­வா­சலின் பிரச்­சினை ஏற்­க­னவே வக்பு சபையில் முறை­யி­டப்­பட்டு தற்­போது விசா­ர­ணையின் கீழ் உள்­ளது. கிந்­தோட்ட கடற்­க­ரைக்கு அண்­மை­யி­லுள்ள அவ்­லியா மலைப்­பள்­ளியின் பிரச்­சி­னையே, கிந்­தோட்டை துன்­மஹல் விகாரை வரை சென்­றுள்­ளது. துன்­மஹல் விகாரை அதி­பதி வீர­கெட்­டிய சஞ்­சய தேரர் பள்­ளி­வா­சலில் முரண்­பட்­டுக்­கொண்ட இரு தரப்­பி­ன­ரையும் அழைத்து, பிரச்­சினை தொடர்பில் விசா­ரணை நடாத்தி, இரு தரப்­பி­ன­ருக்கும்…

Read More

“இலங்கை முஸ்லிம் நாடுகளின் ஆதரவை இழந்து வரு­கிறது” – எம்.எம்.சுஹைர்!

இலங்கை சர்­வ­தேச நாடு­க­ளினதும் குறிப்­பாக முஸ்லிம் நாடு­க­ளி­னதும் ஆத­ரவை இழந்து வரு­வ­தாக சுட்­டிக்­காட்­டி­யுள்ள ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணியும் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.எம்.சுஹைர், இம் முறை ஜெனீ­வாவில் இலங்கைப் பிர­தி­நி­தி­க­ளுக்கு முஸ்லிம் அமைச்சர் ஒருவர் தலைமை தாங்­கிய போதிலும், இலங்­கைக்கு முன்னர் ஆத­ர­வ­ளித்த முன்­னணி முஸ்லிம் பெரும்­பான்மை நாடுகள் ஆத­ர­வ­ளிப்­பதில் இருந்து தவிர்ந்து கொண்­டமை இதனை தெளி­வாக உணர்த்­து­வ­தா­கவும் குறிப்­பிட்­டுள்ளார். சமகால விவகாரங்கள் தொடர்பில் அவர் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, 2009 இல் இலங்கை சர்­வ­தே­சத்­துடன் ஒத்­து­ழைத்த…

Read More

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்; மைத்திரிக்கு எதிரான வழக்கு – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஏபரல் 21 ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீதான விசாரணையை ஒத்திவைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்துக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மைத்திரிபால சிறிசேன இன்று (14) கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு வருகை தந்தார். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் தமக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பான விசாரணையை இடைநிறுத்தி, உத்தரவொன்றைப் பிறப்பிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பிலேயே அவர் மேன்முறையீட்டு…

Read More

சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி ஊடாக நலனுதவி கொடுப்பனவுகள் வழங்கும் முறை அங்குரார்ப்பணம்!

முதியோர், விசேட தேவையுடையோர், மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்காக மாதாந்தம் வழங்கப்படும் நிதியுதவிக் கொடுப்பனவுகளை செப்டம்பர் மாதம் தொடக்கம் சமுர்த்தி வங்கிகளின் ஊடாக வழங்கும் அங்குராப்பன நிகழ்வு சாய்ந்தமருது சமுர்த்தி வங்கியில் பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக் தலைமையில் இன்று (14) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் சமுர்த்தி தலைமை பீட சிரேஷ்ட முகாமையாளர் ஏ.சி.ஏ. நஜீம், சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ். றிபாயா, சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.எல்.யூ.ஜூனைதா, சமூக சேவை பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எஸ்.ஐ. பஸ்மியா, எம்.எப்…

Read More

கிண்ணியா பிரதேச பாடசாலைகளுக்கு இம்ரான் திடீர் விஜயம்!

கிண்ணியா கல்வி வலயத்திற்குட்பட்ட சில பாடசாலைகளுக்கு, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் (13) திடீர் விஜயம் மேற்கொண்டு பாடசாலைகளின் தேவைகளையும் கேட்டறிந்தார். கிண்ணியா மத்திய கல்லூரி தேசிய பாடசாலை , அல் ஹிரா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயம், நடுத்தீவு அல் இக்பால் ஆகிய பாடசாலைகளுக்கு விஜயம் செய்துள்ளார். கிண்ணியா மத்திய கல்லூரி தேசிய பாடசாலைக்கு விஜயம் செய்து ஓய்வுபெறும் அதிபர் எஸ்.எம். அனிபா சேவைகளை பாராட்டி, வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். கிண்ணியா அல்-ஹிரா முஸ்லிம்…

Read More

தேர்தல் ஆணையத்தின் விசேட உத்தரவு!

2005 ஆம் ஆண்டு பெப்ரவரி 01 ஆம் திகதிக்கு முன்னர் பிறந்தவர்களுக்கு இலங்கை தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டு பெப்ரவரி 01 ஆம் திகதிக்கு முன்னர் பிறந்தவர்கள் தமது பெயர்களை வாக்காளர் பதிவேட்டில் இடம்பெற்றுள்ளதா? என்பதை உறுதிப்படுத்துமாறு ஆணைக்குழு கோரியுள்ளது. பிரதேச கிராம உத்தியோகத்தரைத் தொடர்புகொள்வதன் மூலமோ அல்லது ஆணைக்குழுவின் இணையத்தளமான Election.gov.lk ஐப் பார்வையிடுமாறு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2005 பெப்ரவரி 01 ஆம் திகதிக்கு முன்னர் பிறந்தவர்கள் ஒக்டோபர்…

Read More

திருகோணமலைக்கு ரணில் திடீர் விஜயம்!

திருகோணமலைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (14) திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது ஜனாதிபதி திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கலந்துரையாடலின் போது ஊடகவியவாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும், ஊடகவியலாளர்கள் காணி மற்றும் வீட்டு வசதிகள் அற்று வாழ்வதாகவும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த நிலையில் சகல விடயங்களையும் கேட்டறிந்த ஜனாதிபதி இவ்விடயம் தொடர்பாக குழுவொன்றை நியமித்து உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். இதனை தொடர்ந்து திருகோணமலை…

Read More

கோதுமை மா விலை குறைப்பு!

சந்தையில் கோதுமை மாவின் விலை குறைவடைந்துள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார். கோதுமை மா இறக்குமதி செய்யப்பட்டுள்ளதன் காரணமாக, இவ்வாறு விலை குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில், 375 ரூபாயாக இருந்த ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 290 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 25 கிலோகிராம் நிறையுடைய கோதுமை மா மூடை ஒன்றின் விலை 7,250 ரூபாயாகும்.  

Read More

ஞானசார தேரருக்கு பிடியாணை பிறப்பிப்பு!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தினால் அவரை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலையாகாதமைக்கான நியாயமான காரணத்தை பாதுகாப்பு தரப்பு முன்வைக்கத் தவறியதையடுத்து, அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. நாட்டில் முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் கருத்துக்களை…

Read More