
22 ஆம் திருத்தத்துக்கு பிரதான எதிர்க்கட்சி நிபந்தனைகளுடன் ஆதரவு – மனோ!
22 ஆம் திருத்தத்துக்கு நிபந்தனைகளுடன் ஆதரவு அளிக்க பிரதான எதிர்க்கட்சி ஐக்கிய மக்கள் கூட்டணி தீர்மானித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி மனோ கணேசன் தெரிவித்தார். நேற்று (14) நடைபெற்ற ஐக்கிய மக்கள் கூட்டணி தலைமைக்குழு கூட்டத்தில் இம்முடிவு எட்டப்பட்டதாகவும் மனோ கணேசன் எம்.பி கூறினார். இதுபற்றி தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மேலும் கூறியதாவது, “இரட்டை குடியுரிமை கொண்டோர் பாராளுமன்றத்தில் உறுப்புரிமை வகிக்க முடியாது. சமர்பிக்கப்பட்டுள்ள வரைபில் உள்ளதை மாற்றி, அமெரிக்க பிரஜை பெசில் ராஜபக்சவின் எண்ணப்படி…