அரச ஊழியர்களின் உடை குறித்த சுற்றறிக்கைகள் இரத்து!

அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியாகியிருந்த இரு சுற்றறிக்கைகள் உடன் நடைமுறைக்கு வரும் கையில் இரத்து செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில், 2019 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் அரச துறையின் ஊழியர் தர அதிகாரிகளின் உத்தியோகபூர்வ உடை தொடர்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு இன்று (30) அறிவித்துள்ளது. புதிய சுற்றறிக்கையை வெளியிட்ட அமைச்சு, இதற்கு முன்னர் ஜூன் 2019 மற்றும் செப்டம்பர் 2022 இல் வெளியிடப்பட்ட இரண்டு சுற்றறிக்கைகள்…

Read More

‘IMF ஆதரவைப் பெறுவது சில சமயங்களில் விரும்பத்தகாததாக இருக்கும்’ – இந்திரஜித் குமாரசுவாமி!

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவது சில சமயங்களில் விரும்பத்தகாததாக இருக்கும் என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். நிதி நல்லிணக்கத்தைப் பேணுவது இன்றியமையாதது என்றும், அதற்காக அரசியலமைப்பு ஏற்பாடுகள் போன்ற சட்ட காரணிகளால் நிதி முகாமைத்துவம் ஆதரிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். இலங்கை மத்திய வங்கியை அபிவிருத்தி வங்கியாகக் கருதாது அதன் சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் அக்கறை செலுத்த வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச நாணய நிதியம் ஆதரவளித்தாலும் இல்லாவிட்டாலும் பொருளாதாரத்தை…

Read More

மக்களை பயமுறுத்தும் ரணில்; ‘பேய்களுக்கு பயந்தால் மயானங்களில் வீடுகளை கட்ட முடியாது’ – நாலக கொடஹேவா!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மைய காலத்தில் இருந்து நாட்டு மக்களை பயமுறுத்தி வருவதாக ஆளும் கட்சியில் இருந்து விலகி எதிரணியுடன் இணைந்துள்ள டளஸ் அழகப்பெரும அணியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார். பேய்களுக்கு பயந்தால் மயானங்களில் வீடுகளை கட்ட முடியாது என்பதை ஜனாதிபதிக்கு கூற விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். ஜனாதிபதி அண்மைய காலமாக மக்களை பயமுறுத்தி முயற்சித்து வருகிறார்.பல்வேறு அச்சுறுத்தல்களை விடுக்கின்றார். பேய்களுக்கு பயந்தால், மயானங்களில் வீடுகளை கட்ட முடியாது என்பதை ஜனாதிபதிக்கு கூற விரும்புகிறேன்….

Read More

கடன்பொறியை நிராகரித்தது சீனா!

சீனா எப்போதும் இலங்கையின் அரசியல் நிபந்தனைகளுக்கு அமைய எந்தவித உதவிகளையும் செய்யவில்லை. அவ்வாறான நிலைப்பாட்டை சீனா ஒருபோதும் கொண்டிருக்காது என  சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஜாவோ லிஜான் அந்நாட்டு செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார். இலங்கையில் முதலீடுகளை முன்னெடுப்பது மற்றும் நிதி உதவிகளை செய்வது தொடர்பான விடயங்களில் நாங்கள் ஒருபோதும் அரசியல் சுயநலத்துடன் செயற்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார் . கடன் நிதி உதவிகள் விடயத்தில்  இலங்கை வெளிவிவகார அமைச்சரின் கருத்தை வரவேற்கின்றோம், சீனாவின் உதவிகளை வரவேற்பதாகவும், …

Read More

‘பலஸ்தீனை விடுவிப்போம்” – பலஸ்தீன ஒருமைப்பாட்டு தின நிகழ்வு!

பலஸ்தீன் இலங்கை ஒருமைப்பாட்டுக்குழு ஏற்பாடு செய்திருந்த “பலஸ்தீன் நாட்டினை இஸ்ரேவிலிடமிருந்து விடுவிப்போம்” என்ற தலைப்பில், நேற்று (29) பி.எம்.ஜ.சி.எச் இல் நடைபெற்றது. இந் நிகழ்வு பலஸ்தீன் மக்களுடனான சர்வதேச ஒருமைப்பாட்டுத் தினத்தைக் கடைப்பிடிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது. பலஸ்தீன் இலங்கை ஒருமைப்பாட்டுக் குழுவின் தலைவா் முன்னாள் பாராளுமன்ற உறுப்பிணா் பிமல் ரத்ணாயக்க, ஜக்கிய நாடுகள் இலங்கைக் காரியாலயத்தின் வதிவிடப் பிரநிதி ஹனா சிங்கா், இத்துறை சாா்ந்த ஆராய்ச்சியாளா்  திரு.குசும் விஜயதிலக்க, பலஸ்தீன் துாதுவா் கலாநிதி சுகைர் மொஹமட் ஹம்துல்லா…

Read More

“நிம்மதியாக இருக்கின்றேன் ; நேரடியாக அரசியலில் ஈடுபடுவேன்”- பசில்!

21வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் ஊடாக தனக்கு நிம்மதி கிடைத்துள்ளதாகவும் பிரதான பொறுப்புகள் சிலவற்றில் இருந்து மீள கிடைத்தமை நிம்மதியானது எனவும் முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமானபசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிங்கள பத்திரிகைக்கு ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார். 21வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் நான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினேன். தனிப்பட்ட ரீதியில் அந்த முடிவை எடுத்தேன். 21வது திருத்தச்சட்டம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தில் நிறைவேற்றப்பட்டமை நான் எடுத்த…

Read More

முஸ்லிம் சமூகத்தின் உடமையை பாதுகாக்க முன்னெடுக்கும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு!

கபூரிய்யா அரபுக் கல்லூரியின் நம்பிக்கையாளர்கள் அண்மைக் காலமாக அதன் ஸ்திரத்தன்மையையும், உடமையையும், கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் என அனைவரையும் பாரிய சவாலுக்குட்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதை இலங்கை வாழ் சமூகம் நன்கறியும். இலங்கை முஸ்லிம்களின் பாரம்பரிய இந்த வக்பும், இலங்கை முஸ்லிம்களின் மார்க்க கல்வியின் பிரதான சின்னமான கபூரிய்யாவும் அதன் உடமையான கிராண்ட்பாஸ் (முன்னர் சுலைமான் வைத்தியசாலை அமைந்திருந்த) காணியும் மறுமைநாள் வரை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நன்நோக்கில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்க கல்லூரி பழைய…

Read More

இன்று செயற்குழுவைக் கூட்டினால் மைத்திரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை – மஹிந்த உறுதி!

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (30.11.2022) செயற்குழுவைக் கூட்டினால் சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கட்சியின் பொதுச் செயலாளர் என்ற ரீதியில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், அமைச்சர் இந்தக் கூட்டத்திற்கு தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பப்பட்டுள்ள குறித்த கடிதத்தில், கட்சியின் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள படி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயற்குழு…

Read More

மஹிந்த, கோட்டாவின் 05 வெளிநாட்டு பயணங்களுக்கு 40 மில்லியன் செலவு!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் 2021 ஆம் ஆண்டு மேற்கொண்ட ஐந்து உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயங்களினால் அரசுக்கு சுமார் 40 மில்லியன் ரூபாய் செலவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகம் வழங்கிய விவரங்களின்படி, ராஜபக்ச சகோதரர்கள் இருவரும் கடந்த ஆண்டு ஐந்து உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணங்களுக்காக மொத்தம் 44, 739,184.91 ரூபாய் செலவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தகவல் அறியும் உரிமைச்…

Read More

9A பெற்ற மாணவன் மீது தீ வைத்த நபர் சிக்கினார் – வெளியான காரணம்!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 9 ஏ சித்தி பெற்ற 17 வயதுச் சிறுவனை எரித்த 28 வயது இளைஞன், அம்பிட்டியவில் விசேட பொலிஸ் குழுவினால் நேற்று  (29) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட மாணவர் பலத்த தீக்காயங்களுக்குள்ளான நிலையில் கவலைக்கிடமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கண்டி தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்,மாணவனின் உடலுக்கு தீ வைத்ததாக சந்தேகிக்கப்படும் 28 வயதுடைய சந்தேகநபர் அம்பிட்டிய தம்பவெல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ,…

Read More

இலங்கை கிரிக்கெட் அணிக்கு உலகக் கிண்ணத்திற்கு நேரடித் தகுதி பெறுவதில் சிக்கல்!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டிக்கு இலங்கை அணி நேரடித் தகுதி பெறுவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பல்லேகலவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் 229 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 10 ஓட்டங்களை பெற்றிருந்தபோதும் மழை குறுக்கிட்டதை அடுத்து போட்டி கைவிடப்பட்டது. இதனால் உலகக் கிண்ண சுப்பர் லீக் புள்ளிப் பட்டியலில் இரு அணிகளுக்கும் தலா…

Read More

ஈஸ்டர் தாக்குதல் சந்தேக நபர் கொலை – வெளியான மற்றுமொரு தகவல்!

மட்டக்குளி பிரதேசத்தில் நேற்று மதியம் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட நபர் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறு கொல்லப்பட்டவர் 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டவர் ஆவார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் இவருடன் மேலும் 4 சந்தேக நபர்களுடன் ஜா-எல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2019 ஆம் ஆண்டில், சந்தேக நபரும் அவரது குழுவும் கைது செய்யப்பட்டபோது அவர்களிடமிருந்து,…

Read More

சர்வதேச பலஸ்தீன ஒருமைப்பாட்டு தின கருத்தரங்கு இன்று!

இன்று சர்வதேச பலஸ்தீன ஒருமைப்பாட்டு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. வருடாந்தம் நவம்பர் மாதம் 29 ஆம் திகதி இத் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு இலங்கை பலஸ்தீன் ஒருமைப்பாட்டு இயக்கம் கொழும்பில் கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. ‘பலஸ்தீனுக்கு நீதி’ எனும் தொனிப் பொருளில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்திலுள்ள சர்வதேச கற்கைகளுக்கான பண்டாரநாயக்க நிலையத்தின் ஒலிம்பஸ் மண்டபத்தில்  இன்று 29 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்கு இக் கருத்தரங்கு இடம்பெறவுள்ளது. இலங்கை…

Read More

“ஈஸ்டர் தாக்குதல் சந்தேக நபர் நடுவீதியில் கொலை: சட்டத்தை மதிக்காத அராஜக போக்கு தலைதூக்கியுள்ளது” – சஜித்!

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த  சந்தேக நபர் ஒருவர் வீதியில் கொல்லப்பட்டார். என்று சுட்டிக்காட்டிய  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, சட்டத்தை மதிக்காத அராஜக போக்கு தலைதூக்கியுள்ளது என்றார். பாராளுமன்றத்தில் இன்று(29) கேள்வி எழுப்பி உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். சிரந்த அமரசிங்க என்ற சமூக ஊடக செயற்பாட்டாளருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் காணொளியொன்று உள்ளதாகவும், மறுபுறம், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஒருவர் வீதியில் கொல்லப்பட்டுள்ளார். சமூகம் அச்சத்தில்…

Read More

வடக்கு, கிழக்கில் உள்ள விவசாய நிலங்களையும் கடற்பரப்பையும் சீனாவிற்கு விற்க இரகசிய ஒப்பந்தம்?  – மக்களின் விருப்பத்திற்கு மாறாக சீனாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வேண்டாம்!

மக்களின் விருப்பத்திற்கு மாறாக சீனாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வேண்டாம் என இலங்கை அரசுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டதாவது, “யாழ். பல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள், சீன அரசாங்கத்தினால் சீன விவசாயப் பல்கலைக்கழகத்திற்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம், இலங்கை அரசாங்கத்தின் மறைமுக ஆதரவுடன் நவம்பர் 25, கையொப்பமிட இரகசிய ஏற்பாடு செய்யப்பட்டது. என்பதை ஊடகங்களில்…

Read More

அலி சப்ரி இன்று அமெரிக்கா பயணம்!

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அமெரிக்க இராஜாங்கச் செயலர் அந்தனி பிளிங்கனின் அழைப்பின் பேரில் இன்று (29) அதிகாலை அமெரிக்கா பயணமானார். இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சின் மூன்று சிரேஷ்ட அதிகாரிகளும் இணைந்துக்கொண்டுள்ளனர். வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் விஜயத்தின் போது, சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றுக்கு இடையிலான கலந்துரையாடல்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது. அத்துடன், இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து இங்கு கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது….

Read More

2023 முதல் A/L பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் தொடர்பில் முக்கிய தீர்மானம்!

2023ஆம் ஆண்டு முதல், க.பொ.த. உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு 80% பாடசாலை வருகை கட்டாயமாக்கப்படுவதாக, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சின் செயலாளரினால், 2022 ஓகஸ்ட் 12ஆம் திகதியிடப்பட்ட ED/09/Ads (SA)/7 எனும் கடிதம் மூலம் 2022 க.பொ.த. உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு மாத்திரம் 80% வருகைப் பதிவை உறுதிப்படுத்த வேண்டிய அவசியமில்லை என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, குறித்த விலக்களிப்பு 2022 கா.பொ.த. உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு மாத்திரமே…

Read More

9A பெற்ற மாணவன் மீது தீ வைப்பு – கண்டியில் சம்பவம்!

இம்முறை நடந்த க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 9A விசேட சித்திகள் பெற்ற மாணவன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கண்டி, அம்பிட்டிய – பல்லேகம பிரதேசத்தைச் சேர்ந்த மாணவரொருவரே இதில் பலத்த தீக்காயங்களுக்குள்ளாகி கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தான் பரீட்சையில் 9 விசேட சித்திகள் பெற்றதை தமது பாட்டியிடம் கூறிவிட்டு, தந்தையுடன் நேற்று முன்தினம் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, இனந்தெரியாத சிலர் குறித்த மாணவனின் உடல்மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ…

Read More

தேசிய சூரா சபையின் புதிய நிறைவேற்று குழு தெரிவு!

தேசிய சூரா சபையின் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம்  ஞாயிற்றுக்கிழமை (27) கொழும்பில் நடைபெற்றது. அதன் போது அடுத்த இரண்டு வருடங்களுக்கான நிறைவேற்றுக் குழு தெரிவு செய்யப்பட்டது. தலைவர் சட்டத்தரணி ரீ.கே.அஸூர் அவர்களது தலைமையில் நடைபெற்ற மேற்படி கூட்டத்தில், கடந்த பொதுக் கூட்ட அறிக்கை மற்றும் கடந்த இரு வருடங்களில் சூரா சபை மேற்கொண்ட பணிகள் பற்றிய அறிக்கை என்பன, அதன் செயலாளர் சட்டத்தரணி ரஷீத் எம்.இம்தியாஸ் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டது. நிதி அறிக்கையை மௌலவி ஸியாத் இப்ராஹிம் அவர்கள்…

Read More

“சுதந்திர தினத்திற்கு முன்னர் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருக்கும் ஜனாதிபதியின் இந்த முயற்சியை நாங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” – ஹக்கீம்!

சுதந்திர தினத்திற்கு முன்னர் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார். அவரின் இந்த முயற்சியை நாங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அத்துடன், மனித உரிமை விடயத்தில் அரசாங்கம் நழுவிச்செல்லும் போக்கை கடைப்பிடிக்கக் கூடாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (28) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில்  வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் வெகுசன ஊடக அமைச்சு விடயதானங்களுக்கான…

Read More

ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தில் பிணையில் விடுவிக்கப்பட்டவர் வெட்டிக் கொலை!

மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாவியா லேன் அருகில், நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று (28) காலை வேளையில், கார் ஒன்றில் வந்தவர்கள் இவ்வாறு குறித்த நபர் மீது தாக்குதல் மேற்கொண்டதில், அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மட்டக்குளி, சாவியா ஒழுங்கையைச் சேர்ந்த 38 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில்…

Read More

பலமிழந்துள்ள இலங்கையின் கழுத்தை பலம் பொருந்திய நாடுகள் இறுக்கிப்பிடிக்க முற்படுகின்றன” – விமல்!

பொறிக்குள் இலங்கையை சிக்க வைப்பதற்கு இந்தியாவும், மேற்குலகமும் முயற்சிக்கின்றன – விமல்! இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, தமது பொறிக்குள் இலங்கையை சிக்க வைப்பதற்கு இந்தியாவும், மேற்குலகமும் முயற்சிக்கின்றன என்று ‘உத்தர லங்கா சபாகயவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். நேற்று (27) நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,…

Read More

துஆவுடன் விளையாடத் துவங்கும் ஜெர்மன் வீரர் Musut Ozil க்கு கட்டாரில் ஆதரவு!

அட்டாக்கிங் மிட்ஃபீல்டராக விளையாடும் ஜெர்மன் தொழில்முறை கால்பந்து வீரர் Musut Ozil, தனது தொழில்நுட்ப திறன்கள், படைப்பாற்றல், தேர்ச்சி திறன் மற்றும் பார்வை ஆகியவற்றிற்காக அறியப்படுகிறார் அவர் வைட் மிட்ஃபீல்டராகவும் விளையாட முடியும். அவரின் முன்னோர்கள் துருக்கியைச் சேர்ந்த முஸ்லிம்கள். அவர் சிறந்த மார்க்கப் பற்றாளர். தொழுகையைப் பேணுபவர். குர்ஆன் வசனங்களை ஓதி துஆவுடன்தான் விளையாடத் துவங்குவார். ஜெர்மன் அணியின் பல போட்டிகளில் வெற்றிக்குக் காரணமானவர். அதிகம் ஊதியம் பெறும் வீரர்களில் அவரும் ஒருவர். ஆனாலும், அவருடைய…

Read More

ஜெனிவா தீர்மானங்களை நடைமுறைப்படுத்த இலங்கை நிர்ப்பந்திக்கப்படலாம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையால் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த இலங்கை நிர்ப்பந்திக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையே இதற்கு முக்கிய காரணமாக இருக்கும் என்று ராஜதந்திர தரப்புக்கள் தெரிவித்துள்ளன. இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு சர்வதேச நாணய நிதியத்தை தவிர வேறு வழியில்லை என்ற நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் அமெரிக்கா செயற்பட்டமை அனைவரும் அறிந்த விடயமாகும். இந்த நிலையில் ஜெனிவா தீர்மானத்துக்கு அனுசரணை வழங்கிய நாடு என்ற வகையில்,…

Read More

ஹாஷிம் ஸூரி (மதனி) அவர்களுக்கு தேசமான்ய கௌரவம் வழங்கப்பட்டது!

பாலமுனை ஸஹ்வா அரபுக்கல்லாரியின் ஸ்தாபகத் தந்தையும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வின் உதவித் தலைவர்களில் ஒருவருமாகிய அஷ்ஷேய்க் ILM. ஹாஷிம் ஸூரி (மதனி) அவர்களுக்கு தேசமான்ய கௌரவம் வழங்கப்பட்டது. நேற்று (27-11-2022) கொழும்பு BMICH (Orchid ) மண்டபத்தில் தேசமானி மற்றும் Golden Lion ஆகிய இரு தேசிய விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. சிறந்த கல்வி, கலாச்சார மேம்பாடு மற்றும் சிறந்த சமூக சேவையாளர் என்ற அடிப்படையில் விருதுகள் வழங்கப்பட்டன.

Read More