செம்மஞ்சள் சேலையுடன் சபைக்கு வந்த பெண் பாராளுமன்ற உறுப்பினர்!

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு எதிராக உலகம் முழுவதும் 18 நாட்களாக நடைபெற்று வரும் பிரசாரத்தை குறிக்கும் வகையில் இலங்கை பாராளுமன்றத்தின் அனைத்து பெண் பாராளுமன்றத்தின் உறுப்பினர்களும் செம்மஞ்சள் நிற சேலையுடன் இன்று சபைக்கு வருகைத் தந்துள்ளனர். மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்கவும் செம்மஞ்சள் நிற சேலையுடன் இன்று சபைக்கு வருகைத் தந்துள்ளார். அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அதே நிறத்திலான கைப்பட்டிகளையும் அணிந்து வந்துள்ளனர். பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆடை முறை…

Read More

நெல்சன் மண்டேலாவிற்கு கிடைத்த கௌரவம் மஹிந்தவுக்கும் கிடைக்க வேண்டும்!

ஸ்ரீலங்கா பெரமுன கட்சிக்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ளன என்று தகவல்கள் வெளிவரும் நிலையில், முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற கருத்து அந்தக் கட்சிக்குள் இருந்து எழ ஆரம்பித்திருக்கின்றது. ராஜபக்ச குடும்பத்தினரிடையே ஏற்பட்டுள்ள மோதல்களே இதற்குக் காரணம் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது. நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் பின்னரான மக்கள் எதிர்ப்பால் ராஜபக்சவினர் தங்கள் பதவிகளில் இருந்து விலக வேண்டிய சூழ்நிலை உருவானது. கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதிப் பதவியில்…

Read More

சாணக்கியனின் குற்றச்சாட்டுக்கு சீனாவின் பதிலடி!

“சீனா இலங்கையின் உண்மையான நண்பன் அல்ல. உண்மையான நண்பராக இருந்தால், ஏன் சர்வதேச நாணய நிதிய கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளுக்கு சீனா உதவவில்லை?” என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது, கேள்வி எழுப்பியிருந்தார். இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் குறித்த கருத்திற்கு பதிலளிக்கும் வகையில், சீனத் தூதரகம் டுவிட்டரில் இந்த விடயத்தை பதிவிட்டுள்ளது. அந்த பதிவில் மேலும், “தற்போதைய பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க இலங்கைக்கு ஆதரவளிக்க சர்வதேச நிதி…

Read More

தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்தை மீள ஆரம்பிக்க இணக்கம்!

தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்தை ஆரம்பிப்பது தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் இணக்கம் எட்டப்பட்டது. இதன்படி சைட்டம் (SAITM) என்ற தனியார் பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்க முடியும் என்று இரண்டு தரப்பினரும் உடன்பட்டனர். கல்வி என்பது அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில், தனியார் பல்கலைக்கழகங்களை ஆரம்பித்து, அங்குப் பயிலும் வறுமையான மாணவர்களுக்கு அரசாங்கம் நிதியுதவிகளை மேற்கொள்ள முடியும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார். இந்த கல்லூரியை மீள ஆரம்பிப்பதில் எந்த சிக்கலும் இல்லையென உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது….

Read More

சர்வதேச எய்ட்ஸ் தினம் இன்று!

சர்வதேச எய்ட்ஸ் தினம் இன்று (01) அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்த வருடம் ‘Putting Ourselves to the Test: Achieving Equity to End HIV’_’எம்மை நாம் பரிசோதனைக்கு உட்படுத்துவோம்: எய்ட்ஸை ஒழிக்க சமத்துவமாக ஒன்று திரள்வோம்’ எனும் தொனிப்பொருளில் சர்வதேச ரீதியில் எய்ட்ஸ் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. தேசிய எய்ட்ஸ் தடுப்பு திட்டத்தின் பணிப்பாளர் விஷேட வைத்தியர் ரசாஞ்சலி ஹெட்டியாரச்சி அவர்களின் அறிக்கையிலிருந்து, இலங்கையில் இளம் வயதினர் மத்தியில் எய்ட்ஸ் நோய் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. உலக சுகாதார அமைப்பினால்…

Read More

‘தொலைக்காட்சியை பார்த்ததால் தப்பிச் சென்ற கோட்டா’ – விமல்!

ஜனாதிபதி மாளிகைக்குள் வைத்து கோட்டாபய ராஜபக்சவைக் கொல்வதற்கான ஒரு சதித்திட்டம் இருந்தது உண்மை, பாதுகாப்பு அதிகாரிகளே அந்தத் திட்டத்தை வகுத்திருந்தார்கள் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மாளிகையில் கடந்த ஜூன் மாதம் 9ஆம் திகதியும் தங்கி நின்ற கோட்டாபய, தற்செயலாக அன்று காலை தொலைக்காட்சியில் செய்தியைப் பார்த்திருக்காவிட்டால் பின்வாசலால் தப்பியோடியிருக்கமாட்டார், அன்று போராட்டக்காரர்கள் அவரை அடித்துப் படுகொலை செய்திருப்பார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருக்கும்…

Read More

‘பறக்கத் தெரியாத பறவைகள்’ சிறுவர் கதையாக்கத்திற்கு தேசிய விருது!

கவியரசி எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமாவின் ‘பறக்கத் தெரியாத பறவைகள்’சிறுவர் கதையாக்கத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.புத்தசாசன,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம் என்பன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த பிரதேச செயலக மட்டம் மற்றும் மாவட்ட செயலக மட்டத்திலும் நடத்தப்பட்ட இலக்கியப் போட்டித் தொடரில் வெற்றியாளர்களுக்கிடையே தேசிய மட்டத்தில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்காக 2022ஆம் ஆண்டிற்கான தேசிய இலக்கிய விருது வழங்கும் நிகழ்வு, அண்மையில் கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், பிரதமர் தினேஷ் குணவர்த்தன தலைமையில்…

Read More

நெருக்கடிக்கு மேல் நெருக்கடி – ஜனவரி முதல் அதிகரிக்கப்படவுள்ள மின் கட்டணம்!

2023 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் 2 கட்டங்களின் கீழ் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியைப் பெறுவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்ட போதிலும், மின்சார சபையின் நட்டத்தை ஈடுகட்ட அவை போதாது, எனவே தற்போது மின் கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக மின்சார சபையின்…

Read More

Zam Zam நிறுவனத்துடன் கைகோர்த்து, எதிர்கால சந்ததியினருக்கு உதவும் திட்டத்திற்கு பங்களிப்போம்!

நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமைகள் காரணமாக இலங்கை  தீவிர நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது. சாதாரண குடும்பங்கள் தங்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் வேளையில், அடுத்த தலைமுறையின் அடிப்படைக் கல்வி ஆபத்தில் உள்ளது.இது சமூகத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பிலும் நீண்டகால எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். குழந்தைகளின் அடிப்படைக் கல்வியைத் தொடர அவசரத் தலையீடு தேவைப்படுகிறது. இது நம் அனைவரின் மீதும் உள்ள சமூகப் பொறுப்பாகும்.இந்தப் பிரச்சினையை இப்போதே தீர்க்காவிட்டால் நீண்ட கால விளைவுகளுக்கு நாம்…

Read More

விசா கட்டணங்கள் இன்று முதல் அதிகரிப்பு!

இரட்டை குடியுரிமைக்கான விண்ணப்பம் உள்ளிட்ட பல பிரிவுகளுக்கான விசா கட்டணம் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, இரட்டை குடியுரிமையை வழங்குவற்கான கட்டணம் மூன்று இலட்சத்து 45 ஆயிரம் ரூபாவில் இருந்து இரண்டாயிரம் அமெரிக்க டொலர்களாக திருத்தப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், குடியுரிமை சட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தாட்சி பத்திரங்களின் பிரதிகளுக்கான கட்டணம் 1,150 ரூபாவில் இருந்து 2000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, மேலும் சில பிரிவுகளுக்கான விசா கட்டணங்கள்…

Read More