பொருளாதார குற்றங்கள் தொடர்பில் ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழுவை ஸ்தாபிக்க தயார் – ரணில்!

பாராளுமன்றம் இணங்கும் பட்சத்தில் பொருளாதார குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை ஸ்தாபிக்க தயாரென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இன்றைய(08) பாராளுமன்ற சபையில் ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

Read More

ஜனவரி முதல் மின் கட்டணம் ஒன்லைனில் மட்டுமே!

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மின் கட்டண பட்டியல் மற்றும் கட்டணச் சான்றிதழ்கள் இணையத்தளத்தில் வழங்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தற்போது இது அச்சிடப்பட்ட காகிதத்தில் வழங்கப்படுவதாகவும், செலவைக் குறைக்கும் வகையில் இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார். CEB செலவுகளை நிர்வகிப்பதற்கும் குறைப்பதற்கும் இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Read More

சட்டக்கல்லூரி அனுமதி பரீட்சைக்கு ஆங்கிலத்தில் மாத்திரமே தோற்ற வேண்டும் – வர்த்தமானியை இரத்து செய்ய யோசனை!

இலங்கையின் சட்டக் கல்லூரி அனுமதிப் பரீட்சைக்கு தனி ஆங்கில மொழியில் தோற்ற வேண்டும் என்பதை இரத்துச்செய்யும் வகையில், அடுத்த வாரம் பாராளுமன்றில் குறித்த வர்த்தமானி முன்வைக்கப்படவுள்ளது. நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச இதனை இன்று பாராளுமன்றில் தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் மற்றும் ஏனைய தரப்புக்கள் தொடர்ந்தும் விடுத்து வரும் கோரிக்கைகக்கு இணங்க இதனை தாம் பாராளுமன்றில் முன்வைப்பதாக நீதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார். சட்டக்கல்லூரிக்கான அனுமதிப் பரீட்சைக்கு ஆங்கில மொழியில் மாத்திரமே தோற்ற வேண்டும் என்ற வர்த்தமானி முன்னாள் நீதியமைச்சர் அலி சாப்ரி,…

Read More

மூத்த ஊடகவியலாளர் கலாபூஷணம் எம்.எஸ்.குவால்தீன் காலமானார்!

மூத்த ஊடகவியலாளர் கலாபூஷணம் எம்.எஸ்.குவால்தீன் காலமானார் இவர், கண்டி – செங்கடகல நிருபராக வீரகேசரி,  தினகரன் பத்திரிகை உற்பட பல்வேறு பத்திரிகைளிலும் இலத்தரனியல் ஊடகங்களிலும் பிரதேச நிருபராகக் கடமையாற்றியுள்ளர். அகில இலங்கை சமாதான நீதவானான  இவர் கலாபூசணம், ரத்னதீபம், மற்றும் தகவல் துறையில் வாழ்நாள் சாதனையாளர் விருது போன்ற பல்வேறு விருதுகளை பெற்றவராகும்.  அத்துடன் பிரதேச முஸ்லிம் விவாகப்ப திவாளராகவும் கடமையாற்றியுள்ளார். இரண்டு ஆண் பிள்ளைகளின் தந்தையான இவர் கண்டி தென்னக்கும்புறைப் பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர். வீரகேசரி…

Read More

விரைவில் அமைச்சரவை மாற்றம்?

விளையாட்டு, துறைமுகங்கள், தொழில், நெடுஞ்சாலைகள், சுகாதாரம், போக்குவரத்து, மின்சாரம், வனவிலங்கு மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறைகளில் அடுத்த சில நாட்களில் அமைச்சுப்  பதவி மாற்றங்கள்  ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாராளுமன்ற உறுப்பினர்களான துமிந்த திசாநாயக்க, குமார வெல்கம மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோருக்கு சுகாதாரம், போக்குவரத்து மற்றும் மின்சாரம் மற்றும் எரிசக்தி ஆகிய துறைகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ள அதேவேளை, பல புதிய இராஜாங்க அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, மேற்படி அமைச்சுக்களை…

Read More

காற்று, கடல் கொந்தளிப்பு தொடர்பில் எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் (திருகோணமலைக்கு கிழக்கே 370கிமீ) ஆழமான காற்றழுத்த தாழமுக்கம் ‘மாண்டூஸ்’ சூறாவளியாக குவிந்து  வலுவடைந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளதை தொடர்ந்து, பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு  அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி. முகம்மட் றியாஸ் தெரிவித்தார். வங்காள விரிகுடாவில்  ஏற்பட்டுள்ள தாளமுக்கம் தொடர்பில் அவர் மேலும் கூரியுள்ளதாவது, வங்காள விரிகுடாவில்  ஏற்பட்டுள்ள தாளமுக்கம் காரணமாக கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்வதுடன்  மாவட்டத்தின் சில இடங்களில் மழைவீழ்ச்சியுடன் அதிகளவான காற்றும்…

Read More

பாராளுமன்ற குழுக்களில் பணியாற்ற எம்.பிக்கள் நியமனம்!

3 பாராளுமன்ற குழுக்களில் பணியாற்ற தலா 10 பேர் கொண்ட எம்.பிக்களின் குழு நியமிக்கப்பட்டுள்ளது. வங்கித்தொழில் மற்றும் நிதிச் சேவைகள் பற்றிய குழுவுக்கான உறுப்பினர்கள் பெயரிடப்பட்டனர் பாராளுமன்றத்தினால் கடந்த டிசம்பர் 06 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையின் பிரகாரம் வங்கித்தொழில் மற்றும் நிதிச் சேவைகள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காகத் தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து  நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் பெயர்களை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (08) சபையில் அறிவித்தார். வங்கித்தொழில் மற்றும் நிதிச் சேவைகள் பற்றிய குழு…

Read More

9A பெற்ற மாணவன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த சந்தேகநபரின் தாயார் வழங்கிய வாக்குமூலம்!

அம்பிட்டிய பிரதேசத்தில் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் ஒன்பது “ஏ” பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்த மாணவர் ஒருவரை நபரொருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவர் பலத்த தீக்காயங்களுக்குள்ளான நிலையில் கவலைக்கிடமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு மாணவனின் உடலுக்கு தீ வைத்ததாக சந்தேகிக்கப்படும் 28 வயதுடைய சந்தேகநபர் அம்பிட்டிய தம்பவெல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ள குருசகந்தே பாத்தும் எனப்படும் பி.பி. சஞ்சீவாவின் தாயார் தனது மகன் தொடர்பில்…

Read More

“தமிழ், முஸ்லிம் தலைமைகளின் பேச்சுக்கள் மூடு மந்திரமாக இருக்கக் கூடாது” – நஸீர் அஹமட்!

சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வுக்கு முஸ்லிம் கட்சிகளையும் அழைத்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு, அந்தப் பேச்சுக்களை மூடிய அறைக்குள் நடத்தாமல் பகிரங்கத்தளத்தில் பேச வேண்டுமென, சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். அரசியல் தீர்வு குறித்த பேச்சுவார்த்தைகளுக்கு முஸ்லிம் கட்சிகள் மற்றும் மலையக கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளமை வரவேற்கத்தக்கது எனவும் தெரிவித்துள்ள அவர், அது தொடர்பில் ஊடக  அறிக்கையொன்றை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளதாவது. நீண்டகால அரசியல் பிரச்சினைக்கு தீர்வு கிடைப்பது வரவேற்கத்தக்கது….

Read More

எரிவாயு விலை குறைவடையும் – லிட்ரோ!

உலக சந்தையில் நிலவும் விலைகளுக்கேற்ப அடுத்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை குறைவடையக்கூடுமென லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலைகள் குறைவடையலாம். இந்த விலைகுறைப்பு உலக சந்தையில் நிலவும் விலைகளுக்கேற்ப முன்னெடுக்கப்படும். தற்போதைய காலக்கட்டத்தில் 12.5 கிலோ நிறை கொண்ட சமையல் எரிவாயுவுக்கான விலையை கணிசமான அளவு அதிகரித்திருக்க வேண்டும். எனினும், நுகர்வோர் நலன் கருதி பொறுப்புவாய்ந்த…

Read More

2023 – பட்ஜெட்டின் இறுதி வாக்கெடுப்பு இன்று!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று வியாழக்கிழமை பி.ப. 5.00 மணிக்கு பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சரென்ற வகையில் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை கடந்த நவம்பர் மாதம் 14 ஆம் திகதி சபையில் சமர்ப்பித்து வரவு செலவுத் திட்டம் மீதான உரையை ஆற்றினார். அதனைத்தொடர்ந்து வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் 15 ஆம் திகதி…

Read More