டுபாய் ஆட்சியாளரின் ‘One Billion Meals’ திட்டம்!

உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கும் திட்டம் ஒன்றை ஐக்கிய அரபு அமீரகத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் ஆல் மக்தூம் (Mohammed bin Rashid Al Maktoum) ஆரம்பிக்கப்பட்ட ‘10 million meals’ திட்டமானது ‘100 million meals’ என அதிகரிக்கப்பட்டுக் கடந்த வருடம் ‘One Billion Meals’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பல்வேறு நாடுகளில்…

Read More

எல்லாவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற 4 பேர் வபாத்!

வெல்லவாய பொலிஸ் பிரிவிற்க்குபட்ட எல்லாவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற 10 பேரில் நால்வர் இன்று (21) உயிரிழந்துள்ளனர். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்…! கல்முனை தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் கல்வி கற்கும் 10 மாணவர்கள் உல்லாச சுற்றுலா சென்றிருந்த வேளையிலேயே, நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காகச் சென்ற நிலையில், நான்கு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள், கல்முனை, சாய்ந்தமருது மற்றும் சம்மாந்துறையைச் சேர்ந்தவர்களாவர். 4 சகோதரர்களுக்கும் இறைவன் ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும்  உயர்தர சுவர்க்கத்தினை  இறைவன்…

Read More

ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்பு!

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதிக்கான அனுமதி கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினத்தை விடவும் இன்று வலுவாகியுள்ளது. நேற்றைய தினம் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் கொள்வனவு பெறுமதி 331 ரூபா 71 சதமாக காணப்பட்டதுடன், அதன் இன்றைய பெறுமதி 316 ரூபா 84 சதமாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. மேலும், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் விற்பனை பெறுமதி நேற்றைய தினம் 349 ரூபா…

Read More

மன்னாரில் காற்றாலை மின்சாரம் அமைத்தல் தொடர்பில் ஆராய்வு!

மன்னார் தீவுப் பகுதியில் 2ஆம் கட்ட காற்றாலை மின்சாரம் அமைத்தல் தொடர்பில் தீவுப் பகுதி மக்களின் எதிர்ப்பு நடவடிக்கை அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் காற்றாலை மின்சாரம் தொடர்பில் அரசாங்கத்தால் சூழலியல் தாக்கல் அறிக்கை (EIA) வெளியிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கை தொடர்பில் பொது அமைப்பு மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். குறித்த அறிக்கையில் மக்களின் பாதிப்பு தொடர்பிலான உண்மைத் தன்மை இல்லை என்பதே மக்கள் பிரதிநிதிகளின் கருத்தாக அமைந்துள்ளது. 2ஆம் கட்ட காற்றாலை மின்சாரம் மன்னார்  தீவுப்பகுதி மக்களின்…

Read More

IPL வாய்ப்பு: இந்தியா செல்கிறார் வியாஸ்காந்!

இந்தியாவில் நடைபெறவுள்ள இந்தியன் பிறீமியர் லீக் (IPL) தொடரில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந் தற்போது இணைந்து கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ். மத்திய கல்லூரியின் பழைய மாணவனான வியாஸ்காந்த் லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் ஜப்னா கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றார். ராஜஸ்தான் றோயல் அணியில் வலைப் பந்து வீச்சாளராக வாய்ப்பு பெற்றுள்ள் வியாஷ்காந் இன்னும் சில தினங்களில் இந்தியா செல்லவுள்ளார். கடந்த முறை நடைபெற்ற இத் தொடரில் இவரின் திறமைகளைப் பார்த்த பலரும் தேசிய அணியில்…

Read More

மகிழ்ச்சி பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்!

மகிழ்ச்சி என்பது உணர்வு ரீதியானது. அகவயம் சார்ந்தது. மனநிறைவு, திருப்தி, அகமலர்ச்சி மற்றும் பிற இனிமையான, நேர்மறையான உணர்வுகளின் கலவை ஆகும். மானுட வாழ்வின் சுவையும் அர்த்தமும் மனிதன் தன் வாழ்நாளில் அனுபவிக்கின்ற மகிழ்ச்சியிலும் நல்வாழ்விலுமே தங்கியிருக்கிறது. அதனைப் பெற்றுக் கொள்வதற்காக மனிதன் எதனையும் அர்ப்பணிக்கத் தயாராக இருக்கின்றான். அல்லாஹ்வின் மீதான உறுதியான நம்பிக்கையும் (ஈமான்) நல்லமல்களும் ஓர் அடியானுக்கு மனமகிழ்ச்சியான நல்வாழ்வையும் நற்கூலியையும் பெற்றுக்கொடுக்கும் என்பதை அல்குர்ஆன் வசனம் உறுதிப்படுத்துகிறது. ‘ஆணாயினும் பெண்ணாயினும் முஃமினாக இருந்து…

Read More

றமழான் என்பது மறுமை வியாபாரிகளின் பருவ காலம்!

நாமெல்லாம் மலர இருக்கும் அருள்மிகு றமழானை வரவேற்க காத்திருக்கின்ற இந்த வேளையில் சில முக்கியமான விஷயங்களை உங்களது கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். றமழான் என்பது மறுமை வியாபாரிகளின் பருவ காலம் (Season). பருவ காலத்தில் உலக வியாபாரிகள் எப்படி, எவ்வாறு மும்முரமாக, முழு மூச்சாக வியாபாரத்தில் ஈடுபடுவார்கள் என்பதை நாம் நன்கு அறிவோம். அதே போன்றுதான் முஃமீன்கள் றமழான் காலத்தில் மறுமை வியாபாரத்தில் முனைப்புடன் ஈடுபட வேண்டும். ஆரம்பமாக றமழானுக்கு தயாராகும் வகையில் அவசர அவசரமாக மனிதர்களுடனான…

Read More

புலஸ்தினி இந்தியாவிற்கு தப்பிச் செல்ல உதவிய குற்றச்சாட்டில் கைதான பொலிஸ் அதிகாரி அபூபக்கர் விடுதலை!

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் ஒரு முக்கிய சூத்திரதாரியாக சந்தேகிக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன் (ஸாரா ஜஸ்மின்) என்பவர் இந்தியாவிற்கு தப்பிச் செல்ல தனது வாகனத்தில் ஏற்றிச் சென்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு மூன்று வருடங்களாக சிறையில் இருக்கும் தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி நாகூர்த்தம்பி அபூபக்கர் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதியினால் (20) பிணையில் விடுவிக்கப்பட்டார். நாகூர்த்தம்பி அபூபக்கர் புலஸ்தினி மகேந்திரனைப் பற்றிய தகவலைத் தெரிந்தும் அதனை வெளிப்படுத்தாதமைக்காகவும். அவரை நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காகவும்…

Read More

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கல்விப் பிரிவு வழங்கும் இலவச கருத்தரங்கு!

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கல்விப் பிரிவு வழங்கும் இலவச கருத்தரங்கு (Free seminar) பாடம் : இஸ்லாம் G.C.E (O/L)2022 சிறந்த பெறுபேற்றை எதிர்பார்த்து நிற்கும் மாணவர்களுக்காக தேசிய ரீதியாக இஸ்லாம் பாட பெறுபேற்றை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் நடாத்தப்படுகின்றது. கடந்த கால வினாப்பத்திரங்கள் மாதிரி வினாப்பத்திரங்கள் எதிர்பார்க்கை வினாக்கள் கலந்துரையாடல் *Zoom ஊடாக* *(தமிழ் மொழி மூலம்)* ரமழானில் திங்கள் முதல் வியாழன் காலை 6.30 – 7.30 வரை ஆசிரியர் அஷ்ஷேஹ் M.S.M…

Read More

சட்டக்கல்லூரியில் ஆங்கிலத்தில் மாத்திரம் பரீட்சை – பாராளுமன்றில் முன்வைக்கப்பட்ட யோசனை தோற்கடிப்பு!

அனைத்து சட்டக் கல்லூரி பரீட்சைகளையும் ஆங்கிலத்தில் மாத்திரம் நடாத்துவது தொடர்பான வர்த்தமானி தொடர்பில் இன்றைய தினம் (21) பாராளுமன்றத்தில்  வாக்கெடுப்பின் போது தோற்கடிக்கப்பட்டது. சட்டக் கல்லூரியில் கல்வி கற்கும் பெரும்பான்மையான மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, வர்த்தமானியை இரத்துச் செய்யுமாறு பல தரப்பினர் நீதி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இது தொடர்பான பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்படி உரிய பரீட்சைகள் ஆங்கிலத்தில் மாத்திரமே நடத்தப்பட வேண்டும் என ஒரு வாக்கும், வர்த்தமானிக்கு எதிராக 113 வாக்குகளும்…

Read More

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடைபெறுமா? இல்லையா? – இறுதித் தீர்மானம் நாளை மறுதினம்!

தேர்தல்கள் ஆணைக்குழு நாளை மறுதினம் கூடவுள்ளதாக அதன் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியுமா? இல்லையா? என்பது தொடர்பில், இறுதி தீர்மானத்தை எட்டுவதற்காக குறித்த ஆணைக்குழு கூடவுள்ளது. இதற்காக சகல அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்

Read More

“இலங்கை இனி வங்குரோத்தடைந்த நாடாக கருதப்படாது’ – ரணில்!

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழுவினால் நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கான அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில் , கடனை மறுசீரமைக்கும் வலிமை கொண்ட நாடு என்ற  சர்வதேச  அங்கீகாரத்தை பெற்றுள்ளதாகவும், அதன்படி இலங்கை வங்குரோத்தான நாடல்ல என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். எனவே இனிமேல் வழமையான கொடுக்கல் வாங்கல்களை ஆரம்பிக்கும் திறன் எமக்கு கிடைத்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கான அங்கீகாரம் தொடர்பில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இன்று (21) ஆற்றிய விசேட உரையிலேயே…

Read More

ரங்காவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வவுனியா மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் மார்ச் மாதம் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. வாகன விபத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பான வழக்கு விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கைது செய்யப்பட்ட அவர் நேற்று  (20) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த…

Read More

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – தபால் மூல வாக்களிப்பு திட்டமிட்ட தினங்களில் நடத்தப்படாது!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்களிப்பு திட்டமிட்ட தினங்களில் நடத்தப்படாது என தேர்தல்கள் ஆணைக்குழு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது. தபால் மூல வாக்குச் சீட்டுகள் இன்று (21ஆம் திகதி) மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் தபால் நிலையத்தில் கையளிக்கப்படவிருந்த போதிலும், அதற்கான தபால் மூல வாக்குச் சீட்டுகள் தேர்தல் அதிகாரிகளுக்கு கிடைக்கவில்லை. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகளை இம்மாதம் 28, 29, 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் நடத்த தேர்தல்கள்…

Read More

இலங்கைக்கு முதல் கட்டமாக 330 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைக்கும்!

நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு உதவியளிக்க சர்வதேச நிதியத்தின் நிறைவேற்றுக்குழு அங்கீகாரம் அளித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியம், சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் பலதரப்பு நிறுவனங்களிடமிருந்து 7 பில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான நிதியுதவியை இலங்கை பெறவுள்ளது. இதற்கமைய, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலரை இலங்கை பெறும். 48 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்ட கடன்வசதியின் கீழ் இலங்கைக்கு குறித்த தொகை வழங்கப்படும். இந்த…

Read More

ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட உரை!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More