ரமழான் தலைப்பிறை தென்படவில்லை – வெள்ளிக்கிழமை நோன்பு ஆரம்பம்!

உப பிறைக் குழுக்களின் அறிக்கையின் படி, 2023 மார்ச் மாதம் 22 ஆம் திகதி புதன் கிழமை மாலை வியாழக் கிழமை இரவு ஹிஜ்ரி 1444 ரமழான் மாதத்தின் தலைப்பிறை தென்படவில்லை. அவ்வகையில், ஹிஜ்ரி 1444 ஷஃபான் மாதம் 30 நாட்களாக நிறைவடைவதுடன், 2023 மார்ச் 24 ஆம் திகதி ஹிஜ்ரி 1444 ரமழான் மாதத்தின் 01 ஆம் பிறை என கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழு மற்றும் முஸ்லிம்…

Read More

மூத்த எழுத்தாளர் ஆசுகவி அன்புடீன் அவர்கள் காலமானார்கள்!

மூத்த எழுத்தாளர் ஆசுகவி அன்புடீன் அவர்கள் காலமானார்கள். அட்டாளைச்சேனையைச் சேர்ந்த நாடறிந்த இலக்கியவாதியான கவிஞர் ஆசுகவி அன்புடீன் இன்று (22) புதன்கிழமை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில் இருந்த வேளையில் காலமானார். இவர் நஜாத், நப்லா ஆகியோரின் தந்தையும் நிசாம்டீன் ரிஸ்லி அவர்களின் மாமனாரும் ஆவார்.  

Read More

பேருவளை, பெருகமலை ஹேன ரஹ்மான் ஸாவியா புனர்நிர்மாணம் செய்து திறந்து வைப்பு!

பேருவளை, சீனன்கோட்டை பள்ளிச் சங்கத்தின் கீழ் உள்ள பெருகமலை ஹேன ரஹ்மான் ஸாவியா மஸ்ஜிதின் மேல் மாடி பல மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு கடந்த 18ஆம் திகதி மாலை அஸர் தொழுகையோடு வக்பு செய்து திறந்து வைக்கப்பட்டது. பள்ளிச் சங்க தலைவர் ஏ.எச்.எம்‌.முக்தார் ஹாஜியார் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மருதானை ஸாவியா தர்மகர்த்தா சீனன்கோட்டையைச் சேர்ந்த அல்-ஹாஜ் எம். ஜாபிர் முஹம்மத் இரண்டாம் மாடியை திறந்து வைத்தார். கலீபதுஷ்ஷாதுலி மௌலவி எம்.ஐ.எம்.ரபீக் (பஹ்ஜி) அஸர்…

Read More

“கடின உழைப்பின் பலன் மக்களுக்கு விரைவில் கிடைக்கும்; சிரமங்களைப் பொறுத்துக்கொண்டு நிதானமாகச் செயல்பட்ட மக்களுக்கு நன்றிகள்” ரணில்!

சர்வதேச நாணய நிதியத்தின், நீடிக்கப்பட்ட நிதி வசதியின், முதல் தவணை நிதியான, 333 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி தற்போது கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றில் அறிவித்தார். சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றில் முன்வைத்த போதே, அவர் இதனை தெரிவித்தார். இன்று காலை 9.30க்கு ஆரம்பமான பாராளுமன்ற அமர்வில், சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கை தொடர்பில் விசேட உரையாற்றும்போது ஜனாதிபதி குறித்த உடன்படிக்கையை சபையில் வெளியிட்டார். ஜனாதிபதி…

Read More

IMF இன் முதல் தவணை கொடுப்பனவு இன்று – ரஞ்சித் சியம்பலாபிட்டிய!

சர்வதேச நாணய நிதியத்தின் 330 மில்லியன் அமெரிக்க டொலர்களின் முதல் தவணை இலங்கைக்கு இன்று கிடைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று தெரிவித்துள்ளார். IMF நிதியை நாட்டின் தேவைக்காகப் பயன்படுத்துவதற்காக திறைசேரிக்கு மாற்றுவதற்கு IMF அனுமதி வழங்கியுள்ளதாகவும், அதேசமயம் இதற்கு முன்னர் 16 தடவைகள் IMF நிதிகளை மத்திய வங்கியின் டொலர் கணக்கில் மாத்திரமே வைப்பு செய்ய முடியும் எனவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். “IMF நிதி கிடைத்தவுடன் திறைசேரியின் துணைச் செயலாளரின் கணக்கிற்கு…

Read More

பொலன்னறுவை கட்டுவன்வில ஜம்மியத்துல் உலமா சபையால் ரமழானை வரவேற்போம் மாநாடு!

பொலன்னறுவை, கட்டுவன்வில ஜம்மியத்துல் உலமா சபையால் ரமழானை வரவேற்போம் என்ற தலைப்பில், வெலிகந்த பிரதேச அனைத்து உலமா சபையின் ஒத்துழைப்போடு,  கட்டுவன்வில பெரிய ஜும்மா பள்ளிவாசலில் உலமா சபையின் தலைவர் அஷ் ஷேஹ் அலியார் மஜீதி தலைமையில்  மகாநாடு நடத்தப்பட்டது. இந்த மகாநாட்டில் சிறப்பு பேச்சாளர்களாக தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும், தாவா  பேச்சாளருமான அஷ்ஷேஹ் ரிஸ்வி மஜீதி அவர்களும், மருத முனை தாருல் ஹுதா அரபிக் கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி அஷ்ஷேஹ் முபாரக் மதனி அவர்களும் கலந்துகொண்டு…

Read More

“நாட்டை வங்குரோத்தாக்கிவிட்டு கடன் வாங்கிவிட்டதாக பெருமிதம்” – லக்ஷ்மன் கிரியெல்ல!

நாட்டை வங்குரோத்து நிலைக்குக் கொண்டு சென்று விட்டு இப்போது கடன் வாங்கிவிட்டதாகத் தற்பெருமை பேசிப் பயனில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.நாட்டி ன் கையிருப்பை பூச்சியமாக குறைத்த இந்த அரசாங்கம் அந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்காகவே கடனைப் பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தப் பணத்தை வழங்குவதற்கான நிபந்தனைகள் என்னவென்று அவர்களுக்குத் தெரியாது என்றும் லக் ஷ்மன் கிரியெல்ல கூறினார். இதேநேரம் நாட்டின் நீதித்துறை, தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் ஊடகவியலாளர்களை பாராளுமன்ற சிறப்புரிமைகளைப் பயன்படுத்தி நசுக்கும் நட…

Read More

சவூதி அரேபியா – இலங்கைக்கு இடையில் வேலைவாய்ப்பு தொடர்பான புதிய ஒப்பந்தம் கைச்சாத்து!

சவூதி அரேபியாவும் இலங்கையும் செவ்வாயன்று (21) தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு தொடர்பான புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன, இது நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நாட்டிலிருந்து தொழில் வல்லுநர்களுக்கு இராச்சியத்தில் அதிக வாய்ப்புகளைத் திறக்கிறது என்று அரபு செய்திகள் தெரிவிக்கின்றன. திறன் சரிபார்ப்பு திட்டம், சவுதி தொழிலாளர் சந்தையில் பணியாளர்களின் தொழில்முறை திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இலங்கையில் இருந்து திறமையான பணியாளர்களை ஆட்சேர்ப்பு செயல்முறையை எளிதாக்குகிறது. இலங்கையின் மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழு மற்றும் இராச்சியத்தின் மனித வளங்கள் மற்றும்…

Read More

நாட்டிற்காக உயிர்நீத்த மகனின் பெயரை கண்டுபிடித்து அழுத தாய்!

அம்பாறை மாவட்டத்தில் 159 வருட பொலிஸ் வீரர் தினம்  செவ்வாய்க்கிழமை  (21) இடம்பெற்ற வேளை நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்றும் பதிவாகியுள்ளது. குறித்த நிகழ்வில் மௌன அஞ்சலியைத் தொடர்ந்து பொலிஸ் கொடி ஏற்றப்பட்டதுடன்  பொலிஸ் நினைவுத் தூபிக்கு விசேட பொலிஸ்  மரியாதை நிகழ்வுகளுடன்   நினைவுத் தூபிக்கு மலர் வளையம் மற்றும் மலர் கொத்துக்கள் வைத்து அஞ்சலி  செலுத்தப்பட்டது. இதன் போது நாட்டிற்காக உயிர் நீத்த பொலிஸ் வீரர்களின் உறவினர்கள், அங்கவீனமுற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள்,  ஓய்வூபெற்ற மற்றும் தற்போது கடமையில்…

Read More

பாடசாலை மாணவர்களுக்கான சீருடை விநியோகம் நாளை!

இரண்டாம் கட்ட பாடசாலை சீருடைகள் நாளை(23) விநியோகிக்கப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதனடிப்படையில், 4.1 மில்லியன் பாடசாலை மாணவர்கள் மற்றும் பிக்கு மாணவர்களுக்கு சீருடைகள் விநியோகிக்கப்படவுள்ளன. ஏப்ரல் விடுமுறைக்கு முன்னர் இந்த விநியோக நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. முதல் கட்டத்தில் சீன அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சீருடைகள் 70 வீதமான மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டிருந்தன. இதனிடையே, பாடசாலை பாடப்புத்தக விநியோகம் நாளை(23) முதல் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Read More

சர்வதேச தமிழ் பெண் ஆளுமைக்கான விருது பெற்றார் நூர் சஹிரியா பஹார்தீன்!

“கனடா விழித்தெழு பெண்ணே”  அமைப்பினர் செய்த  சர்வதேச சர்வதேச தமிழ் பெண் ஆளுமைகளுக்கான விருது வழங்கும்  விழா கொழும்பில் உள்ள கிங்ஸ்பெரி ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை (21) மாலை நடைபெற்றது. அதில், சர்வதேச பெண் ஆளுமைக்கான விருதை கனடா பிரதி தூதுவரிடம் நூர் சஹிரியா பஹார்தீன் பெற்றுக்கொண்டார்.

Read More

இலங்கை பிரதிநிதியாக ஐ.நா மாநாட்டில் பங்கேற்ற முஹம்மட் ஜெம்ஷித்!

இலங்கை மற்றும் தெற்காசிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஐக்கிய நாடுகள் சபையின் ஆஸ்திரியா- வியன்னா சர்வதேச இளைஞர் மாநாட்டில் ஹஸன் குத்தூஸ் முஹம்மட் ஜெம்ஷித் ஹஸன் பங்கேற்றார். நிந்தவூர் 13ம் பிரிவு, பிரதான வீதியைச் சேர்ந்தவரும், இலங்கை சமுத்திரவியல் பல்கலைக்கழகத்தின், கடற்கரை மற்றும் கடல்வள முகாமைத்துவ பீடத்தின் மாணவராக பயிலும், ஹஸன் குத்தூஸ் முஹம்மட் ஜெம்ஷித் ஹஸன் 2023ம் வருடத்திற்கான ஐக்கியநாடுகள் சபையின் போதைப் பொருள் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பிலான அமைப்பின் ( United Nation Office on…

Read More

மஹிந்த மற்றும் பெசிலுக்கு வெளிநாட்டுப் பயணத்தடை நீக்கம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகிய இருவருக்கும் விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை நீக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் தொடர்பில் விசாரணை நடத்த உத்தரவிடுமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக விதிக்கப்பட்ட பயணத்தடையை நீக்கி உயர் நீதிமன்றம் இன்று (22) தீர்ப்பளித்துள்ளது. குறித்த மனு…

Read More

‘இனியாவது எதிரணியினர் ரணிலுடன் கைகோர்க்க வேண்டும்’ – நஸீர் அஹமட்!

சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் நாட்டுக்கு கிடைத்துள்ளதால், இனியாவது எதிரணியினர் பொருளாதார முன்னேற்றத்துக்கு ஜனாதிபதியுடன் கைகோர்க்க வேண்டுமென, சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் வேண்டுகோள் விடுத்துள்ளார். சர்வதேச உதவிகள் நாட்டுக்கு கிடைத்துள்ளதையிட்டு அவர் வௌியிட்டுள்ள செய்தியிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தெரிவித்துள்ளதாவது, நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் ஆர்ப்பாட்டங்கள், வேலை நிறுத்தங்கள் மற்றும் விமர்சனங்கக்கு மத்தியிலும் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு உதவியுள்ளது. இவ்வுதவியைத் தொடர்ந்து ஆசிய அபிவிருத்தி வங்கி,உலக வங்கி என்பனவும் உதவ உள்ளன.அரசியல் நோக்கில்,…

Read More

ஹஜ் விசாக்கள் பல இலட்சங்களுக்கு விற்பனை – ஹஜ் விடயங்களுக்கான தனியான அலுவலகம் திறப்பு!

கொழும்பு 10 இல் உள்ள  முஸ்லிம் சமய விவகாரத்  திணைக்களத்தின்  முதலாம் மாடியில் முதன்முறையாக ஹஜ் விடயங்களை கவணிப்பதற்காக  தனியானதொரு ஹஜ் விவகார அலுவலகமொன்று   செவ்வாய்க்கிழமை 21ஆம் திகதி பௌத்த விவகார மதவிவகாரங்கள் மற்றும் கலாச்சார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவினால் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வினை முஸ்லிம் சமய பண்பாட்டுத் திணைக்களமும் ஹஜ் கமிட்டி மற்றும் ஹஜ்முகவர்கள் சங்கத்தின் தலைவர்களும்   இணைந்து  ஏற்பாடு செய்திருந்தனர். இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பிணர்களான பைசால் காசீம், முசாரப், மர்ஜான் பழீல்…

Read More

ஈரானுக்கு சவூதி அரேபியா அழைப்பு!

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியை உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றுக்கு சவூதி அரேபியா அழைப்பு விடுத்திருப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. இரு நாடுகளும் இராஜதந்திர உறவுகளை மீள ஆரம்பிக்க இணங்கி ஒரு வாரம் கடந்த நிலையிலேயே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சவூதி மன்னர் சல்மானிடம் இருந்து வந்த கடிதத்திலேயே இந்த அழைப்பு வந்திருப்பதாக கூறப்பட்டபோதும், இது தொடர்பில் சவூதி இன்னும் உறுதி செய்யவில்லை. இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் போக்கே அண்மைய வரலாற்றில் மத்திய கிழக்கில் ஆதிக்கம் செலுத்தி…

Read More

ரமழான் தலைப்பிறை மாநாடு இன்று – பிறை கண்டால் அறிவிக்கவும்!

இன்று (ஷஃபான் -பிறை 29) புதன் கிழமை மாலை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளி வாசல் ஹமீதிய்யா மண்டபத்தில் புனித ரமழான் தலைப்பிறை தீர்மானிக்கும் மாநாடு இடம்பெறவுள்ளது. இதன்­போது, புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே, இன்றைய தினம் மாலை பிறை பார்க்குமாறு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. பிறை கண்டவர்கள் தகுந்த ஆதாரங்க­ளுடன் 0112432110, 0112451245, 0777316415 எனும் இலக்கங்களுக்கு தொடர்புகொண்டு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Read More

எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல் போன ஏனைய மூவரின் ஜனாசாக்கள் மீட்பு!

வெல்லவாய, எல்லாவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்று காணாமல் போன மூன்று இளைஞர்களின் சடலங்கள் இன்று புதன்கிழமை (22) காலை மீட்கப்பட்டுள்ளன. நேற்று ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் மேலும் மூவர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தனர். அவர்களை தேடும் பணிகளில் பொலிஸார் மற்றும் மீட்புபணியிர் ஈடுபட்டிருந்தனர். இதையடுத்து இன்று காலை மேலும் மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More