பயங்கரவாத தடை சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டமூலம் – வெளியானது வர்த்தமானி!

பயங்கரவாத தடைச் சட்டத்திற்குப் பதிலாக, புதிய சட்டமூல வரைவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரின் அறிவுறுத்தலுக்கு அமைய, புதிய சட்டமூலம் வெளியிடப்பட்டுள்ளது. ‘பயங்கரவாதத்திற்கு எதிரானது’ எனப் பெயரிப்பட்டுள்ள இந்த சட்டமூலம், ஆங்கிலத்தில் எண்டி – டெரரிசம் (anti-terrorism) எனக் குறிப்பிட்பட்டுள்ளது. 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் தற்காலிக ஏற்பாடுகளை நீக்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது இந்த சட்டமூலத்தை தயாரிப்பதன் நோக்கமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

கொழும்பு – புறநகர் பகுதிகளில் 10 மணிநேர நீர்வெட்டு!

கொழும்பு மற்றும் அதன் புறநகரின் சில பகுதிகளுக்கு நாளைமறுதினம் சனிக்கிழமை (25) பத்து மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. குறித்த தினத்தில் காலை 11 மணிமுதல் இரவு 9 மணிவரை இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதன்படி, கொழும்பு, தெஹிவளை – கல்கிசை, கோட்டே, கடுவெல மாநகர சபைகளுக்கு உட்பட்ட பிரதேசங்களிலும், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகர சபைகள் மற்றும் கொட்டிகாவத்தை – முல்லேரியா, இரத்மலானை மற்றும் கட்டுபெத்த ஆகிய…

Read More

3000 ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் – தொலைத்தொடர்பு தொழிற்சங்கங்கள் எச்சரிப்பு!

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனம் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விற்கப்பட்டால், சுமார் மூவாயிரம் ஊழியர்களுக்கு வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக தொலைத்தொடர்பு தொழிற்சங்கங்கள் எச்சரிக்கின்றன. ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பெரும்பாலான சேவைகளை இணையத்தளத்தில் மேற்கொள்ள முடியும் எனவும், இவற்றில் சில சேவைகளை தற்போது தமது நிறுவன ஊழியர்களே செய்து வருவதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் ஹேமந்த நெத்திகுமார தெரிவித்துள்ளார். எனினும், தொலைத்தொடர்பு நிறுவனம் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர், குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களை வேலைக்கு அமர்த்தி, ஒன்லைன் முறையின்…

Read More

மாவடிப்பள்ளி ஆற்றில் பொன்னாங்காணி பறித்தவர் முதலை தாக்குதலில் பலி!

மாவடிப்பள்ளி ஆற்றின் ஓரத்தில் பொன்னாங்காணி கீரையை பறித்துக் கொண்டிருந்த ஒருவர், முதலை தாக்குதலுக்கு இலக்காகி நேற்று (23)  உயிரிழந்துள்ளார். சம்மாந்துறை கோரக் கோயில் பிரதேசத்தை சேர்ந்த 61 வயதையுடைய 04 பிள்ளைகளின் தந்தையாகிய இராசாப்பு சௌந்தராஜன் என்பரை முதலைத் தாக்குதலில் உயிர் இழந்துள்ளதாக உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த மரணம் குறித்து கல்முனை பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எச்.ஜவாஹிர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார். சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதனிடையே சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் அதிகாரிகள்…

Read More

ஜூன் முதல் குறிப்பிட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை!

பிளாஸ்டிக் பயன்பாடு சர்வதேசத்திலும் இலங்கையிலும் பாரிய பிரச்சினையாக காணப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு சுற்றாடல் அமைச்சு ஐந்து ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களையும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட சில பிளாஸ்டிக் உற்பத்திகளையும் தடை செய்யவிருப்பதாக சுற்றாடல் அமைச்சு செயலாளர் அனில் ஜெயசிங்க தெரிவித்துள்ளார். நீர்கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே, சுற்றாடலுக்குப் பிளாஸ்டிக்கால் ஏற்படும் பாதக விளைவுகளைக் குறைக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றாடலில் கடுமையான…

Read More

இலங்கை தேசம் கண்ட மிகப்பெரும் கொடை வள்ளல் அப்துல் கபூர் ஹாஜியார் (கபூரியா அரபுக் கல்லூரியை ஆரம்பித்தவர்)

படத்திலுள்ளவர்  இலங்கை தேசம் கண்ட மிகப்பெரும் கொடை வள்ளலான NDH அப்துல் கபூர் ஹாஜியார் அவர்கள். இலங்கையின் புகழ்பெற்ற இரத்தினக்கல் வியாபாரி. மாபெரும் பரோபகாரி. 1931ல் கபூரிய்யா அரபுக் கல்லூரியை ஆரம்பித்தவர். அதற்காக மஹரகமயில் சுமார் 17 ஏக்கர் பிரமாண்ட காணியை வக்பு செய்த பெருந்தகை. மட்டுமல்லாது அதன் வளர்ச்சிக்காக இந்தியா போன்ற நாடுகளில் இருந்து உலமாக்களை வரவழைத்த முன்னோடி. அத்துடன் நின்றுவிடாது கல்லூரியின் எதிர்கால நலனுக்காகவும் வருமானத்திற்காகவும் கொழும்பு கிரேன்ட்பாஸ் சுலைமான் வைத்தியசாலை அமைந்திருந்த 2…

Read More

நோன்பிருக்கும் நாட்களில் உடற்பயிற்சிகள் செய்வது எப்படி..?

இஸ்லாமியர்கள் ரமலான் பண்டிகைக்காக நோன்பிருக்கும் புனித மாதம், வரும் மார்ச் 22ஆம் தேதி அன்று மாலை துவங்கியது. நோன்பிருக்கும் நாட்களில் உடற்பயிற்சிகள் மேற்கொள்வதிலும் உடல் ஆரோக்கியத்தை கையாள்வதிலும் குழப்பங்கள் இருந்தால், இந்த கட்டுரை உங்களுக்கு உதவலாம். நோன்பு இருக்கும் சமயங்களில், உங்களது உடலின் ஆற்றல்களில் மாற்றங்கள் ஏற்படும். எனவே அதற்கு ஏற்றாற் போல் நீங்கள் மேற்கொள்ளும் உடற்பயிற்சிகளில் மாற்றங்கள் செய்ய வேண்டும். இதுபோன்ற உடற்பயிற்சிகளில் நிபுணத்துவம் பெற்றிருக்கிறார் பெலால் ஹஃபீஸ். அவரது மனைவி நசிமா குரோஷி ஊட்டச்சத்து…

Read More

‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தின் கீழ் 864 வீடுகளை நிர்மாணிக்க நடவடிக்கை!

‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தின் கீழ் 648 மில்லியன் ரூபா செலவில் இவ்வருடம் 864 வீட்டுத் தொகுதிகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இந்திய உதவி வீட்டுத்திட்டத்தின் கீழ் சுமார் 760 வீடுகள் ரூ.578 மில்லியன் செலவில் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், இந்திய உயர்ஸ்தானிகராலயத்திடம் இருந்து உரிய நிதி கிடைக்கப் பெற்றதன் பின்னர் இந்தாண்டு வேலைத்திட்டம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வீடுகளில் வசிப்பவர்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக திறைசேரியின் ஊடாக ரூ.76 மில்லியன்…

Read More

முஸ்லிம் மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி – பரீட்சை திணைக்களத்திடம் அவசர கோரிக்கை!

கடந்த 2022 (2023) ஆண்டு க.பொ.த.உயர் தர மனைப்பொருளியல் பாட எழுத்துப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான செயன்முறைப் பரீட்சை எதிர்வரும் 28.03.2023 முதல் 06.04.2023 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் அனைத்து விண்ணப்பதாரிகளுக்கும், அனுமதி அட்டைகள்  அனுப்பிவைக்கப்பட்டுள்ளது எனவும் பரீட்சை திணைக்களம்  மேலும் அறிவித்துள்ளது. எனினும் மேற்படி மனைப்பொருளியல் பாட செயன்முறைப் பரீட்சை இடம்பெறவுள்ள  காலப்பகுதியில் முஸ்லிம்கள் அனைவரும் புனித நோண்பு நோற்றிருப்பதால் செயன்முறைப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள  மாணவர்கள்…

Read More

“முஸ்லிம்கள் குறித்து நான் தவறாக பேசவில்லை; இரு தரப்பினரை குழப்புவதுடன் பிரச்சினைகளையும் ஏற்படுத்த திட்டமிடப்படுகின்றது” – கலையரசன்!

முஸ்லீம்கள் தொடர்பில் மன்னாரில் தான் பேசியதை தேவையற்ற முறையில்  வர்ணித்து ஒரு தரப்பு  அவதூறு பரப்பி வருவதாக   தவராசா கலையரசன் தெரிவித்தார்.அம்பாறை மாவட்டம் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக உள்ள தவராசா கலையரசன் இவ்விடயம்  தொடர்பில் இன்று (23) செய்தியாளரிடம்  மேற்கண்டவாறு கூறினார். மேலும் தனது கருத்தில் குறிப்பிட்டதாவது மன்னாரில் இடம்பெற்ற எமது கட்சி கூட்டத்தில் நான் முஸ்லீம்கள் குறித்து பேசியுள்ளதாக வர்ணித்து சில செய்திகள் பரப்பப்பட்டுள்ளன.சில தரப்பினர் இவ்விடயத்தை முன்னெடுப்பதை நான் அறிகின்றேன்.இதில் எனக்கு…

Read More

பால்மா விலை குறைப்பு!

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால் பொதியின் விலை   குறைக்கப்படுகின்றது. ஒரு கிலோகிராம் பால்மா விலை 200 ரூபாவினாலும், 400 கிராம் பால்மாவின் விலை 80 ரூபாவினாலும் குறைக்கப்பட உள்ளது. இந்த விலை குறைப்பு மார்ச் 27 திங்கட்கிழமை முதல் அமுலில் இருக்கும் என பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்தனர்.

Read More

“எங்களுடைய அதானுடைய நேரத்தை காட்டும் ஒரு கடிகாரத்தை இழந்து விட்டோம்”

எங்களுக்கு ஏற்பட்ட கைசேதம்…. நாங்கள் எங்களுடைய அதானுடைய நேரத்தை காட்டும் ஒரு கடிகாரத்தை இழந்து விட்டோம். இந்த நண்பன் இவருடைய வீட்டிலிருந்து பலாஹ் பள்ளியை நோக்கி நடந்து செல்வதை காணும் போதெல்லாம் நாங்கள் இதோ அதானுடைய நேரம் ஆகிவிட்டது. என்று நினைப்போம் அந்நேரம் எங்களுடைய காதுகளை அதானுடைய சத்தங்கள் வந்து முத்தமிடும். அவருடைய வயது வெறும் இருபத்து ஒன்று இருக்கும் என நினைக்கிறேன். ஆனால் ஐம்பது அறுபது வயது தொழுத மூத்தவர்களுடைய நெற்றியைப் போல் அவருடைய நெற்றியில்…

Read More

பாகிஸ்தான் தேசிய தின நிகழ்வு கொழும்பில்!

கொழும்பிலுள்ள பாகிஸ்தான்  உயர்ஸ்தானிகராலயம், பாகிஸ்தான் தேசிய தின வரவேற்பு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. இதில் இலங்கை அரசியல் தலைமைகள், இராஜதந்திர அதிகாரிகள், மூத்த பாதுகாப்பு அதிகாரிகள், அரசாங்கப் பிரதிநிதிகள், பிரபல வர்த்தகப் பிரமுகர்கள், மற்றும் பாகிஸ்தானிய ஆதரவாளர்கள் என பெருமளவிலான பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர். இதன் போது கருத்துதெரிவித்த பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகர்  மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) உமர் பரூக் பர்கி அவர்கள், பாகிஸ்தானும் இலங்கையும் பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் நெருங்கிய உறவுகளை தொடர்ந்து…

Read More