
ரமழானில் இன ஐக்கியத்திற்கு குந்தகம் விளைவிக்கும் செயற்பாடுகளை தவிர்ந்துகொள்ளுங்கள்!
ரமழான் நோன்பு காலத்தில் முஸ்லிம்கள் பிறருக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தாதவாறு கட்டுக்கோப்புடன் நடந்துகொள்ள வேண்டுமென கிழக்கிலங்கை முஸ்லிம் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து மேற்படி பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது; “ரமழான் நோன்பு என்பது ஓர் உன்னதமான வணக்கமாகும். இது இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றுகின்ற மக்களை புடம்போட்டு, புனிதப்படுத்துகின்ற ஒரு வணக்க வழிபாடாகும். சகிப்புத்தன்மையையும் பிறருக்கு தீங்கிழைக்காமல், உதவும் மனப்பாங்கையும் வளர்த்துக் கொண்டு, இறையச்சத்தை திடப்படுத்துகின்ற ஒரு வணக்கமாகும். இவற்றை உணர்ந்து செயற்படுகின்றபோதே எமது நோன்பு…