ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி ரூ. 315.84 முதல் ரூ. 315.70 ஆகவும், விற்பனை பெறுமதி ரூ. 332.87 முதல் ரூ. 333.49 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பும் சற்று குறைந்துள்ளதுடன், சுவிஸ் பிராங்குக்கு எதிராக சற்று உயர்ந்துள்ளது.

Read More

கல்முனையில் சட்டத்தரணிகளின் பாவனைக்காக சட்ட நூலகம் திறப்பு!

கல்முனை நீதிமன்ற கட்டடத் தொகுதியின் சிவில் மேல்முறையீட்டு நீதிமன்ற கட்டடத்தில் புதிய  சட்ட நூலகம், சட்டத்தரணிகளின் பாவனைக்காக  இன்று (29) திறந்து வைக்கப்பட்டது. கல்முனை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் எம். ஐ.றைசுல் ஹாதி தலைமையில்,  சட்டத்தரணிகளின் பாவனைக்காக சட்ட நூலகம் திறப்பு வைபவம் நடைபெற்றதுடன், பிரதம அதிதியாக கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸி கௌரவ அதிதிகளாக கல்முனை மாவட்ட நீதிபதி ஏ.எம் முஹம்மட் றியால், கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் ஆகியோர் கலந்துசிறப்பித்தனர்….

Read More

கட்டாய விடுமுறை வழங்கப்பட்ட பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்களின் விபரம்!

இன்று (29) கடமைக்கு சமுகமளிக்காத 20இற்கும் மேற்பட்ட இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள், கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று காலை கொழும்பில் உள்ள அமைச்சில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், இன்று பணிக்கு சமுகமளிக்காத 20 இற்கும் மேற்பட்ட பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாகவும், கூட்டுத்தாபன வளாகத்திற்குள் நுழைய அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின்…

Read More

காலி சிறைச்சாலையின் கைதி தப்பியோட்டம்!

பத்தேகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட காலி சிறைச்சாலையின் கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளார். குறித்த கைதி நேற்று (28) நீதிமன்ற அறையின் யன்னல் வழியாக தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் மற்றும் திருட்டு குற்றச்சாட்டில் சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிரு்நத பத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு தப்பிச்சென்றுள்ளார். இவர் மீது போதைப்பொருள் தொடர்பான சுமார் 30 வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தப்பியோடிய…

Read More

ஆட்டோ கட்டணமும் குறைகிறது!

எரிபொருள் விலை திருத்தத்தை தொடர்ந்து, முச்சக்கர வண்டி கட்டணத்தை இன்று முதல் குறைக்க அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் (AITWDU) தீர்மானித்துள்ளது. முதல் மற்றும் இரண்டாவது கிலோமீற்றருக்கான கட்டணத்தை குறைக்கவுள்ளதாக அறிவித்துள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார். அதன்படி இன்று முதல் முதல் கிலோமீற்றருக்கான கட்டணம் ரூ.100 ஆகவும், இரண்டாவது கிலோமீற்றருக்கான கட்டணம் ரூ.80 ஆகவும் வசூலிக்கப்படும். குறித்த அறிவிப்பின் பிரகாரம் கட்டணத்தை குறைக்குமாறு மீற்றர்…

Read More

பேருந்து கட்டணம் குறைப்பு!

எரிபொருள் விலை திருத்தத்தையடுத்து, பேருந்து கட்டணத்தையும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை நாளை (30) முதல் 30 ரூபாவாக குறைக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு, போக்குவரத்து அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார். மேலும் குறைக்கப்படவுள்ள ஏனைய பேருந்து கட்டணங்கள் குறித்து நாளை அறிவிக்கப்படுமென போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, இந்த பேருந்து கட்டண திருத்தத்துக்கு தாம் இணக்கம் தெரிவித்துள்ளதாக அகில இலங்கை பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

Read More

தலைமன்னார் பியரை சேர்ந்த முகம்மது நஃபில்கான் கடலில் மூழ்கி வபாத்!

கட்டுமரத்தில் கரையோரமாக மீன் பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் கடலில் மூழ்கியமையால் மரணத்தை தழுவிக் கொண்டார். அவரை காப்பாற்ற கடற்படையினர் எடுத்த முயற்சி பயனளிக்கவில்லை என தெரிவிப்பு. இச்சம்பவம் நேற்று முன்தினம் (26) பிற்பகல் தலைமன்னார் பியரில்  இடம்பெற்றுள்ளது.. இம்மரணம் தொடர்பாக மரண விசாரனையின் மூலம் தெரியவருவதாவது, தலைமன்னார் பியரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட மூன்று பிள்ளைகளின் தந்தையான முகம்மது நஃபில்கான் (வயது 36 ) ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் தனது சக மீனவ நண்பர் ஒருவருடன்…

Read More

ஏப்ரல் 2 ஆம் திகதி மாபெரும் இப்தார் – மாற்றுமத உறவுகளுக்கு பகிரங்க அழைப்பு!

ஏப்ரல் 2, 2023 அன்று மாலை 5.30 மணிக்கு சுதந்திர சதுக்கத்தில், ரமழானின் பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளில் சுதந்திரமாக இணைய எவருக்கும் இலங்கை முஸ்லிம் சமூகத்தால் திறந்த அழைப்பு விடுக்கப்படுகிறது. “கொழும்பிலும் அதைச் சூழவுள்ள எமது சகோதர சகோதரிகளுக்கு இது ஒரு திறந்த அழைப்பு. உண்மையில், ஏனைய சமூகங்கள்/ நம்பிக்கைகள் மற்றும் அவர்களுக்கு விருந்தளிப்பதற்கான வாய்ப்பை நாங்கள் அதிகம் பெற விரும்புகிறோம்” என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் சிவில் சமூகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. பொது நிர்வாக அமைச்சு…

Read More

17 வயது மாணவன் முஹம்மட் அன்பாஸ் விபத்தில் வபாத்!

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடா பிரதான வீதியில்  (27) 9.30 மணிக்கு இடம்பெற்ற வாகன  விபத்தில், தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் ஸ்தலத்திலேயே பலியானதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். காத்தான்குடியில் உறவினர் வீட்டில் தங்கி இருந்து படித்து வந்த, சுங்காவில் பிரதேசத்தைச் சேர்ந்த முஹம்மட் அன்பாஸ் (17 வயது) என்ற மாணவனே இவ்வாறு பலியாகியுள்ளார் மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கி வந்துகொண்டிருந்த வான், சைக்கிளில் வந்த மாணவன் மீது மோதி விட்டுத் தப்பிச்சென்றுள்ளது. இதன்போது, வானின் இலக்கத்தகடு…

Read More

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் குறைப்பு!

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் 92 ஒக்டேன் பெற்றோலின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 340 ரூபாவாகும். அத்துடன் 95 ஒக்டேன் பெற்றோலின் விலை 135 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 375 ரூபாவாகும். மேலும் சுப்பர் டீசலின் விலை 45 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 465 ரூபாவாகும். ஒட்டோ டீசலின் விலை 80 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன்…

Read More