‘தேசிய எல்லை நிர்ணய குழுவின் இறுதி அறிக்கை மே மாத இறுதியில் சமர்ப்பிக்கப்படும்’ – தேசப்பிரிய!

உள்ளூராட்சி நிறுவனங்களின் எல்லை நிர்ணய தேசிய குழுவின் இறுதி அறிக்கை இம்மாதம் இறுதி வாரத்தில் கையளிக்கப்படும் என அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இடைக்கால அறிக்கைக்காக இதுவரை பல்வேறு தரப்பினரிடம் இருந்து கிட்டத்தட்ட 400 முன்மொழிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், தனது அவதானிப்புகளை உரிய தரப்பினருக்கு விரைவில் அனுப்ப எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உள்ளூராட்சி நிறுவனங்களை எல்லை நிர்ணயம் செய்வதற்கான தேசிய குழுவின் இடைக்கால அறிக்கை ஏப்ரல் 11ஆம் திகதி பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான கருத்துக்களையும்…

Read More

கீரி சம்பாவின் அதிகபட்ச சில்லறை விலையில் மாற்றம் இல்லை!

கீரி சம்பாவிற்கு அரசாங்கம் அறிவித்துள்ள அதிகபட்ச சில்லறை விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. 2022 மே 2 ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட ர்த்தமானியின்படி, ஒரு கிலோகிராம் கீரி சம்பாவின் அதிகபட்ச சில்லறை விலை ரூ.260 ஆக இருக்கும் என நுகர்வோர் விவகார அதிகார சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கீரி சம்பா மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலை மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்ற அனைத்து கூற்றுகளையும் நுகர்வோர் விவகார அதிகார…

Read More

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்!

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் வேலைத் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை (08) நடைபெற்றது. காத்தான்குடி பிரதேச செயலாளர் உதய சிறீதர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், நிர்வாக கிராம உத்தியோகத்தர் எம்.எம.ஜரூப், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி பத்மா ஜெயராஜ், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர். இதன்போது  உணவுப் பாதுகாப்புத் தொடர்பான ஆய்வு நடவடிக்கை முன்னேற்றம் தொடர்பாக…

Read More

‘வடக்கிலுள்ள விகாரைகள் சட்டவிரோதம் என்றால், தெற்கிலுள்ள இந்து ஆலயங்களும் சட்டவிரோதமானவையே’ – சரத் வீரசேகர!

வடக்கில் அமைக்கப்பட்டுள்ள விகாரைகள் சட்டவிரோதம் என்றால் தெற்கில் அமைக்கப்பட்டுள்ள இந்து ஆலயங்களும் சட்டவிரோதமானவையே என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். தையிட்டியில் தமிழ் மக்களின் காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரி முன்னெடுக்கப்பட்ட தொடர் போராட்டம் தொடர்பில்  ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், இலங்கையிலுள்ள 25 மாவட்டங்களிலும் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ்கின்றார்கள். அவர்கள் தங்கள் குல…

Read More

’பௌத்த மயமாக்கலின் உச்ச கட்டம்’

பயங்கரவாத யுத்தத்தினாலும் பொருளாதார அனர்த்தத்தினாலும் பாதிக்கப்பட்ட வட, கிழக்கு வாழ் மக்கள் மீது பௌத்த மேலாதிக்கமும் தலை விரித்தாடுகின்றது என கிண்ணியா நகர சபையின் முன்னாள் உறுப்பினரும் திருகோணமலை மாவட்ட பள்ளி வாசல்கள் சம்மேளன செயலாளருமான எம்.எம்.மஹ்தி குற்றஞ்சாட்டினார். திருகோணமலை மீடியா போர ஊடக மையத்தில் இன்று (08) காலை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “வட, கிழக்கு வாழ் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் காணிகள் பல்வேறு…

Read More

அமெரிக்கா சென்றுள்ள பசில் நாடு திரும்பப் போவதில்லை?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவி புஷ்பா ராஜபக்ஷ இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர். அவர்கள் எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாய் சென்றுள்ளனர். அங்கிருந்து அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் செல்கின்றனர். பசில் ராஜபக்ஷவின் திடீர் அமெரிக்க விஜயத்திற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், அண்மையில் பொதுஜன பெரமுனவின் மே பேரணியின் பின்னர், கட்சியின் தலைவர் மற்றும் வருங்கால வேட்பாளராக கட்சியின் சில பிரதிநிதிகள்…

Read More

ஜனாஸா எரிப்பு; பாதிக்­கப்­பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமா?

கொவிட் 19 வைரஸ் தொற்று தொடர்பில் துறைசார் நிபுணர் குழு பிழை­யான தீர்­மானம் மேற்­கொண்­டதால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நஷ்டஈடு வழங்­கப்­பட வேண்டும் எனவும், பிழை­யான தீர்­மானம் மேற்­கொண்ட துறைசார் நிபு­ணர்கள் மற்றும் அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்டு உரிய தண்­டனை வழங்­கப்­பட வேண்டும் என்றும் இவ்­வி­வ­காரம் தொடர்பில் ஆணைக்­கு­ழு­வொன்று நிய­மித்து இதன் பின்­னணி கண்­ட­றி­யப்­பட வேண்டும் எனவும் முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் கோரிக்கை விடுத்­துள்­ளனர். ஓட்­ட­மாவடி விஷேட மைய­வா­டியில் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­ட­வர்­களின் குடும்­பங்­க­ளுக்கும், தகனம் செய்­யப்­பட்ட…

Read More

‘ஐக்கிய மக்கள் சக்தியால் மட்டுமே நாட்டை திறமையாக ஆட்சி செய்ய முடியும்’ – கபிர் ஹாசிம்!

ஐக்கிய மக்கள் சக்தியால் மட்டுமே நாட்டை திறமையாக ஆட்சி செய்ய முடியுமென பாராளுமன்ற உறுப்பினர் கபிர் ஹாசிம் மொனராகலையில் நிகழ்வொன்றில் பேசிய போது தெரிவித்தார். பல்வேறு சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி பதவியை அடைவதற்கான சாத்தியங்கள் இருந்தபோதும், அவர் தனது கொள்கையில் உறுதியாக இருந்தமையே சஜித் பிரேமதாசவுடன் நான் இணைந்து கொள்ள முக்கிய காரணம் என அவர் மேலும் தெரிவித்தார். ஆட்சியமைக்க ஒரு கட்டளை அவசியமானது. அது சட்டபூர்வமான தேர்தலின் மூலமே சாத்தியமாகும் என அவர் தெரிவித்தார்.

Read More

கெலிஓய அஸ்ஸிராஜ் கல்லூரி வரலாற்றில் இடம்பிடித்த அன்புக்குரிய A.M.S.Nazeema அதிபர்!

நூற்றாண்டு கடந்து மூன்று தசாப்தங்களாகும் (1892) கெலிஓய அஸ்ஸிராஜ் ஆண்கள் கல்லூரியின் வரலாற்றில் இடம்பிடித்த முதலாவது பெண் அதிபரான அன்புக்குரிய திருமதி A.M.S. Nazeema Madam அவர்கள், கடந்த ஆண்டு டிசம்பருடன் சேவையிலிருந்து ஓய்வுபெற்றார். வரலாற்றில் எல்லோருக்குமான ஒரு பக்கம் இருந்தாலும் அவரவரது பக்கத்தை சமூகமே படிக்கும் படி அமைத்துக் கொள்வது அவரவர் கைகளிலேயே உள்ளது.  அகுரனை 6ம் மைல் கல்லைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், பேராதனைப் பல்கலையில் தனது B.A. பட்டத்தை தொடரும் காலமே மௌலவியா…

Read More

பெரியமுல்லையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவரின் ஜனாஸா மீட்பு!

நீர்கொழும்பு, பெரியமுல்லையைச் சேர்ந்த 60 வயது நபர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு இரண்டு நாட்களுக்குப் பின் சடலமாக மீட்கப்பட்டார். 4ம் திகதி வியாழக்கிழமை இரவு பெய்த கடும் மழையினால் நீர்கொழும்பு கட்டான தொகுதிகளின் எல்லையை ஊடருத்துச் செல்லும் “தெபாஎல” பெருக்கெடுத்ததில் வெள்ளம் ஏற்பட்டு ஓடையில் நீர் வேகமாக பாய்ந்தோடுகின்றது. பெரியமுல்லை, செல்லகந்த வீதியில் அமைந்துள்ள தனது வீட்டிற்கு வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணியளவில் செல்லும் போது இவர் செல்லும் வழியில் பாலத்தை கடக்கும் போது வேகமாசெல்லும் வெள்ள நீருக்கு…

Read More

கோதுமை மா, சீனி விலை அதிகரிப்பு!

கோதுமை மா மற்றும் சீனி ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளதாக அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, கோதுமை மா கிலோவொன்றின் விலை 10 ரூபாவினாலும், சீனி கிலோவொன்றின் விலை 25 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது. கோதுமை மாவுக்கான இறக்குமதி வரி விலக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் திரும்பப் பெறப்பட்டதையடுத்து, அதன் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More