முஸ்லிம் சமூக சவால்களை கலந்தாலோசிக்க நஸீர் அஹமட் அவசர அழைப்பு!

முஸ்லிம் சமூகத்தின் சமகால சவால்களை தீர்த்துவைக்கும் பொதுவான வரைபை தயாரிக்கும் தருணம் வந்துள்ளது.இனியும், தனித்தனியாகச் செயற்பட்டு சமூக உரிமைகளை வெல்ல முடியாதென்பதே நிதர்சனமாகியுள்ளதாக அமைச்சர் நஸீர்அஹமட் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதி முனைப்புடன் செயற்படுவதை நான் அறிவேன்.எனவே, இழக்கப்பட்ட முஸ்லிம்களின் காணிகளை மீளப்பெறவும்,இதனுடன் தொடர்புடைய ஏனைய பிரச்சினைகள் குறித்தும் பொதுவான வரைபை தயாரிக்க வேண்டியுள்ளது.வடக்கில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் பறிபோன காணிகள் மற்றும் கிழக்கில்…

Read More

மன்னார் பாடசாலைகளுக்கு இராணுவப் பாதுகாப்பு!

மன்னாரில் கடந்த சில நாட்களாக சிறுவர்களை இலக்கு வைத்து கடத்தல் முயற்சிகள் இடம்பெறுவதாகவும் கடந்த சனிக்கிழமை மற்றும் நேற்றைய தினம் (08) மக்கள் நடமாட்டம் குறைந்த பாதை வழியாக பயணித்த தங்களுக்கு, உணவு பொருட்களை வழங்கி கடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக பாதிக்கப்பட்ட இரண்டு சிறுவர்கள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் குறித்த விடயம் மாவட்ட அரசாங்க அதிபர், வலயக்கல்வி பணிப்பாளர், மன்னார் பொலிஸார், இரானுவத்தினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில், இன்று (09) செவ்வாய்க்கிழமை மன்னாரில் உள்ள பாடசாலைகளுக்கு விசேட…

Read More

‘அரகல’ மக்கள் போராட்டத்தை தடுக்க புதிய ஆணைக்குழு?

இலங்கையில் ‘அரகலய’ மக்கள் இயக்கத்திற்கு நிகரான போராட்டங்களை எதிர்காலத்தில் தடுக்கும் வகையில், பூரண அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை அமைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது, அமைச்சரவையினால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக, அமைச்சரவை இணைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காகவே அமைச்சரவை இவ்வாறான கோரிக்கையை முன்வைத்துள்ளதாக…

Read More

மரண தனடனையிலிருந்து தப்பித்த இளைஞன் – சவுதி இளவரசரின் முன்மாதிரி!

கொலை வழக்கில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு சவுதி இளவரசர் ஒரு இளைஞனின் உயிரைக் காப்பாற்றியதாக சமூக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மறைந்த மன்னர் ஃபஹத்தின் மகன் இளவரசர் அப்துல் அஜீஸ் பின் ஃபஹ்த், குற்றவாளியின் மரணதண்டனையை கைவிடுவதற்கு தேவையான இரத்தப் பணத்தை முடிக்க கிட்டத்தட்ட SR2 மில்லியன் செலுத்தினார். வெசம் அல் தர்ஹூனி என்ற அந்த இளைஞன், ஐந்து வருடங்களாக சிறையில் இருந்து வருகிறார் மரணதண்டனையிலிருந்து தப்பிக்க அவரது தாய் SR5…

Read More

4 சிறுவர்கள் தாக்கல்செய்த அடிப்படை உரிமை மனுக்கள்!

14 வயதுக்குட்பட்ட நான்கு சிறுவர்கள் தாக்கல் செய்த 4 அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலிப்பதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதாக சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான பொய்யான  வாக்குமூலத்தில் கையொப்பமிட குற்றப் புலனாய்வு பிரிவினர்  வற்புறுத்தியதாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர். தாங்கள் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் மனுதாரர்களான சிறுவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படவில்லை!

கோதுமை மாவின் விலை அதிகரித்துள்ளதாக சில ஊடகங்கள் கூறிய போதிலும் மாவின் விலை அதிகரிக்கப்படவில்லை என இலங்கையின் இரண்டு பிரதான கோதுமை மா நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Read More

பௌசியின் கட்சி உறுப்பினர் பதவியை இடைநிறுத்த தீர்மானம்!

கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்பட்டதன் காரணமாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம்.பௌசியின் கட்சி உறுப்பினர் பதவியை இடைநிறுத்த கட்சி தீர்மானித்துள்ளது.   சர்வதேச நாணய நிதியத்தின் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்ததன் அடிப்படையில் திங்கட்கிழமை (08) பிற்பகல் கூடிய கட்சியின் செயற்குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநகரசபை வேட்பாளர் பதவிக்கு போட்டியிடுவதற்காக முஜுபர் ரஹ்மான் தனது எம்.பி பதவியில் இருந்து விலகியதை அடுத்து, வெற்றிடமான பதவிக்கு  பௌசி தெரிவு…

Read More