நாடு திரும்பியதும் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கைது செய்யப்படுவார்!

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ நாடு திரும்பியதும் கைது செய்யப்படுவார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவா இன்று (17) தெரிவித்துள்ளார். மத போதகர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பௌத்த மதம் தொடர்பில் அண்மையில் அவர் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பில் அவர் நாடு திரும்பியதும் கைது செய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிரான பயணத்தடையை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று கோட்டை நீதவான் நீதிமன்றில் பெற்றுக்கொண்டனர். இருப்பினும்…

Read More

‘பிராந்திய தேவைகளில் இணைந்து செயற்படும் நம்பிக்கை பிறந்துள்ளது’ – ஆளுநர்களுக்கு ரிஷாட் வாழ்த்து!

பிராந்திய நலன்களிலும், பிரதிநிதித்துவம் செய்யும் மக்களின் நோக்குகளிலும் இணைந்து செயற்படுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களின் புதிய ஆளுநர்களை வாழ்த்தி அவர் வெளியிட்டுள்ள  செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “வடக்கு, கிழக்கு மாகாணங்களின் புதிய ஆளுநர்களான திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் சிறுபான்மை சமூகங்களின் பூர்வீகத்திலுள்ளவர்கள். இதனால், எமது மக்களின் அபிலாஷைகள் பற்றி புதிதாக இவர்களுக்கு எதையும் சொல்ல வேண்டியதும் இல்லை….

Read More

குர்ஆனின் சிங்கள மொழிபெயர்ப்பு விநியோகம்!

இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்தியாவுக்கான சவூதி அரேபியாவின் தூதுவர் சலேஹ் ஈத் அல் ஹுசைனியிடம் நேற்று (16) புனித குர்ஆனின் சிங்கள மொழிபெயர்ப்பின் பிரதியை வழங்கினார்.  புதுடெல்லியில் உள்ள இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்களுடன் உரையாடலை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, நேற்று காலை உயர்ஸ்தானிகர் மொரகொட, புதுடெல்லியில் உள்ள சவூதி அரேபியாவின் தூதரகத்தில் தூதுவர் அல் ஹுசைனியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, இலங்கை உயர்ஸ்தானிகர் மற்றும் சவுதி தூதுவர் ஆகியோர் இந்தியாவின்…

Read More

மஹிந்தவின் பயணத்தடை நீக்கம்!

கடந்த வருடம் மே 09 சம்பவத்தையடுத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் காஞ்சன ஜெயரத்ன ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் நீக்கப்பட்டுள்ளது.

Read More

வடபுலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சமூகங்களை மீளக்குடியேற ஜிஹான் ஹமீட் அழைப்பு!

வட மாகாணத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீளவும் தங்களது சொந்த தாயகத்தில் மீளக்குடியமரத் தயாராகுமாறு தேசியவாத முன்னணியின் முக்கியஸ்தர் ஜிஹான் ஹமீட் கோரிக்கை விடுத்துள்ளார். “பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின்னர், நாட்டில் நிலவும் சுமுக சூழலில், இலங்கையர் ஒவ்வொருவரதும் பூர்வீக வாழிடங்களில் வாழும் உரித்தை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது. தேசியவாத முன்னணி இவ்விடயத்தில் உறுதியுடனுள்ளது. பயங்கரவாதத்தின் இனச் சுத்திகரிப்பை ஜனநாயக அரசாங்கம் ஏற்கப்போவதில்லை. எனவே, வட மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்களை பூர்வீக வாழிடங்களில் மீளக் குடியமர்த்தும் செயற்பாடுகளில்…

Read More