அக்கரைப்பற்றில் களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் காத்தான்குடியில் மீட்பு!

அக்கறைப்பற்றில் களவாடப்பட்ட 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிள் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூநொச்சிமுனையில் கைப்பற்றட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தார். பொலிஸ்மா அதிபரின் விசேட பணிப்பின் பேரில் நாடு முழுவதிலும் ஒரே நேரத்தில் நடத்தபட்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது காத்தான்குடி பொலிஸார் பூநொச்சிமுனை உள்வீதியில் நடத்திய திடீர் சோதனையில் குறித்த மோட்டார் சைக்கிள் ஆவணங்கள் எதுவுமின்றி காணப்பட்டதால் இதனை மீட்டதுடன் சந்தேக நபரையும் கைது செய்தனர். குறித்த  மோட்டார்…

Read More

மருந்துகளின் விலைகள் விரைவில் குறைப்பு!

மருந்து வகைகளின் விலைகள் விரைவில் 10 தொடக்கம் 15 சதவீதம் வரை குறைவடையும் எனவும் எதிர்வரும் வாரமளவில் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கை வெளியிடப்படும் எனவும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். இந்த விலைகுறைப்பின் இறுதி முடிவுகள் தொடர்பில் திறைசேறி அலுவலர்களுடன் கலந்துரையாடி உள்ளோம். அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பதால் விலைகள் குறைக்கப்படும் என அவர் தெரிவித்தார். டொலரின் பெறுமதி உயர்ந்த போது மருந்துகளின் விலைகளிலும் குறிப்பிடத்தக்க அளவு உயர்வு ஏற்பட்டது….

Read More

முஜிபுர் ரஹ்மானுக்கு புதிய பதவி!

ஐக்கிய மக்கள் சக்தி செயற்குழுவின் அனுமதியுடன், அக் கட்சியின் இரண்டு பதவிகளுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் (16) நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், ஐக்கிய மக்கள் பிரதி செயலாளராக முன்னாள் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதங்கள், கட்சித்தலைவர்…

Read More

கிழக்கு புதிய ஆளுநருக்கு முபாற‌க் மௌல‌வி வாழ்த்து!

கிழ‌க்கு மாகாண‌ ஆளுன‌ராக‌ ஜ‌னாதிப‌தி ர‌ணில் விக்ர‌ம‌சஇங்க‌ அவ‌ர்க‌ளால்  நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ள‌ இல‌ங்கை தொழிலாள‌ர் காங்கிர‌சின் த‌லைவ‌ர் செந்தில் தொண்ட‌மான் அவ‌ர்க‌ளுக்கு ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி த‌ன‌து வாழ்த்துக்க‌ளையும் வ‌ர‌வேற்பையும் தெரிவித்துள்ள‌து. இது ப‌ற்றி கட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் மௌல‌வி தெரிவித்த‌தாவ‌து,  கிழ‌க்கு மாகாண‌த்தின் இர‌ண்டாவ‌து த‌மிழ் பேசும் ஆளுன‌ராக‌ செந்தில் தொண்ட‌மான் நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ளார். அவ‌ர் கிழ‌க்கு மாகாண‌த்தை சேராத‌வ‌ராக‌ இருந்தாலும் அவ‌ரும் இந்த‌ நாட்டு குடிம‌க‌ன் என்ற‌ வ‌கையிலும் த‌மிழ் பேசுப‌வ‌ர் என்ற‌ வ‌கையிலும் அவ‌ரின் நிய‌ம‌ன‌த்தை…

Read More

மீண்டும் கொரோனா அலை?

கடந்த 20 நாட்களில் 16 கொவிட் நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. ஏப்ரல் 23 ஆம் திகதி கொவிட் நோயால் ஒரு மரணமும், அந்த மாதம் 27 ஆம் திகதி ஒரு மரணமும் பதிவாகியது , தொடர்ந்து மே 01 ஆம் திகதி ஒரு இறப்பு மற்றும் மே 5 ஆம் திகதி மேலும் மூன்று கொவிட் இறப்புகலும் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் துறை மேலும் கூறுகிறது. இதேவேளை, கடந்த 8ஆம் மற்றும் 9ஆம்…

Read More