21 வது அரசியலமைப்பு திருத்தம்; மொட்டுக் கட்சி எம்.பிக்கள் சிலர் அதிருப்தி! - Sri Lanka Muslim

21 வது அரசியலமைப்பு திருத்தம்; மொட்டுக் கட்சி எம்.பிக்கள் சிலர் அதிருப்தி!

Contributors

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணப்படாமல், அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வருவதற்கு முன்னுரிமையளிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர்பில் பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது அதிருப்தியை பிரதமரிடம் தெரிவித்துள்ளனர்.

அரசியலமைப்பு திருத்தத்திற்கு அன்றி நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு முன்னுரிமையளிக்குமாறு அவர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை கேட்டுக் கொண்டுள்ளனர்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் விசேட சந்திப்பொன்று பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. அதன்போதே அவர்கள் பிரதமரிடம் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள சூழ்நிலையில் நாட்டு மக்கள் அரசியலமைப்பையன்றி அத்தியாவசிய உணவுப்பொருட்கள், உரம், மருந்துப் பொருட்கள் போன்றவற்றையே அரசாங்கத்திடம் கேட்கின்றனர். அது தொடர்பில் அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Web Design by Srilanka Muslims Web Team