24-மணித்தியாலங்களிற்குள் 4-மில்லியன்களிற்கும் மேலான புதிய iPhone 6 விற்பனை - Sri Lanka Muslim

24-மணித்தியாலங்களிற்குள் 4-மில்லியன்களிற்கும் மேலான புதிய iPhone 6 விற்பனை

Contributors
author image

World News Editorial Team

திங்கள்கிழமை அப்பிள் நிறுவனம் 4-மில்லியன்களிற்கும் மேலான புதிய iPhone 6.களை 24-மணித்தியாலங்களிற்குள் விற்றுள்ளதாக அறிவித்துள்ளது. இவற்றிற்கான முன்-பதிவு விநியோக ஆடர்களும் அதிகரித்து சாதனை படைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

வாடிக்கையாளர்களிற்கான விநியோகம் வெள்ளிக்கிழமை தொடக்கம் செப்ரம்பர் மாதம் பூராகவும் செய்யப்படுமெனவும் ஆனால் அதிகமானவர்களிற்கு ஒக்டோபர் மாதம் வரையில் விநியோகம் செய்யப்பட மாட்டாதெனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

 

முன்னறிவிப்பு அற்ற வாடிக்கையாளர்கள் வெள்ளிக்கிழமை தொடக்கம் அப்பிள் சில்லறை விற்பனை நிலையங்களிலிருந்து இந்த போன்களை பெறக்கூடியதாக இருக்கும். AT&T, Sprint, T-Mobile, Verizon Wireless ஆகிய இடங்களில் இருந்தும் அங்கீகரிக்கப்பட்ட அப்பிள் மறுவிற்பனையாளர்களிடம் இருந்தும் பெறக்கூடியதாக இருக்கும்.

 

கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட இப்புதிய போன்கள் பெரிய திரைகள் ,விரைவான செயல் திறன் கொண்டவைகளாகவும் ஒரு தொடர்பற்ற கட்டண சேவை உடையதாகவும் உள்ளது. 199டொலர்கள் விலையில் இருந்து ஆரம்பமாகின்றது.

Web Design by Srilanka Muslims Web Team