3 எழுத்து வாகனங்களால் ரூ.250 மில்லியன் வருமானம் - Sri Lanka Muslim

3 எழுத்து வாகனங்களால் ரூ.250 மில்லியன் வருமானம்

Contributors

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அண்மையில் அறிமுகப்படுத்திய ஆங்கில எழுத்துக்கள் மூன்று அடங்கிய விசேட வாகனங்களால் இதுவரையில் 250 மில்லியன் ரூபா வருமானம் பெறப்பட்டுள்ளது என்று அத்திணைக்களம் தெரிவித்தது.

‘முந்தைய வாகனப்பதிவுகளின் போது இரண்டு ஆங்கில எழுத்துக்களே உள்ளடக்கப்பட்டிருந்தன. இருப்பினும், புதிய நடைமுறைக்கமைய இந்த மூன்றெழுத்து அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த புதிய நடைமுறைக்கமைய முதல் 3000 இலக்கங்களும் வாடகை வாகனங்களுக்காக பதிவு செய்யப்பட்டு விட்டன’ என்று திணைக்கத்தில் ஆணையாளர் நாயகம் எஸ்.எச்.ஹரிஸ்சந்திர தெரிவித்தார்.

‘ஒரு நாளைக்கு 15 முதல் 20 வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. ஒரு வாகனத்துக்கான 70 ஆயிரம் ரூபா பதிவுக் கட்டணமாக அறவிடப்படுகின்றது’ என அவர் குறிப்பிட்டார்.

மாதமொன்றுக்கு 30 ஆயிரம் வாகனங்கள் பதிவு செய்யப்படுவதாகவும் அவற்றில் 5 ஆயிரம் மோட்டார் சைக்கிள்கள் அடங்குவதாகவும் அவர் மேலும் கூறினார். tm

Web Design by Srilanka Muslims Web Team