3 மாதக் குழந்தையை பலி எடுத்த தேங்காய் - Sri Lanka Muslim
Contributors

அம்பாறை மாவட்டத்தின் நற்பிட்டிமுனைப் பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை (06) முற்பகல் வீட்டின் முன்னாலுள்ள தென்னை மரத்திலிருந்து தேங்காய் விழுந்ததில் 3 மாதக் குழந்தையொன்று பலியாகியுள்ளது.

காயமடைந்த நிலையில் கல்முனை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட குழந்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு வரும் வழியில் மரணமாகியுள்ளது.

இக்குழந்தையின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் முருகானந்தம் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team