3 வருடங்களுக்குள் மீண்டும் உம்ரா செல்ல மேலதிக கட்டணம் - Sri Lanka Muslim

3 வருடங்களுக்குள் மீண்டும் உம்ரா செல்ல மேலதிக கட்டணம்

Contributors
author image

Editorial Team

மூன்று வரு­டங்­க­ளுக்குள் மீண்டும் உம்ரா கட­மையை மேற்­கொள்ளும் யாத்­தி­ரி­கர்கள் சவூதி அரே­பிய ஹஜ் உம்ரா அமைச்­சுக்கு மேல­திக கட்­டணம் ஒன்றைச் செலுத்­து­மாறு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் திக­திக்குப் பிறகு உம்ரா கட­மையை நிறை­வேற்­றி­ய­வர்கள் 3 ஆண்டுகளுக்குள் மீண்டும் உம்ரா கட­மையை நிறை­வேற்­று­வ­தா­யி­ருந்தால் விசா கொடுப்­ப­ன­வுக்கு மேல­தி­க­மாக 2000 சவூதி ரியால்கள் செலுத்த வேண்டும். அவ்­வாறு செலுத்­தி­னாலே உம்ரா விசா வழங்­கப்­படும்.

இதன் அடிப்­ப­டையில் ஒருவர் மூன்று வரு­டங்­க­ளுக்கு ஒரு தட­வையே மேல­திக 2000 சவூதி ரியால்கள் செலுத்­தாமல் உம்ரா கட­மையை நிறை­வேற்­று­வ­தற்குப் பய­ணிக்க முடியும்.

வரு­டாந்தம் அதி­க­ரித்­து­வரும் உம்ரா பய­ணி­களின் எண்­ணிக்­கையை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே இப்­பு­திய கட்­டணம் அற­வி­டப்­ப­டு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இலங்­கையில் ஹஜ் முக­வர்கள் சங்­கத்தின் தலைவர் எம்.எம். மொஹமட் நிஜார் இது தொடர்பில் கருத்து தெரி­விக்­கையில்;
இந்தப் புதிய கட்­ட­ண­முறை சிறந்­த­தென்றும் இலங்­கை­யி­லி­ருந்து அநேகர் வியா­பார நோக்­க­மா­கவே அடிக்­கடி உம்ரா கட­மைக்குச் செல்­வ­தா­கவும் தெரி­வித்தார்.

இந்தப் புதிய நடைமுறையின் மூலம் வர்த்தக நோக்கமாக உம்ராவுக்குச் செல்வதில் தடையேற்படுவதாகவும் அவர் கூறினார். (vi)

Web Design by Srilanka Muslims Web Team