சவுதியில் 30,000 போலி பொறியியலாளர்கள் கண்டுபிடிப்பு - சவுதி அரேபிய பொறியியல் துறை - Sri Lanka Muslim

சவுதியில் 30,000 போலி பொறியியலாளர்கள் கண்டுபிடிப்பு – சவுதி அரேபிய பொறியியல் துறை

Contributors

 

-ஏம் எம் அல்பீஸ்-

(ARAB NEWS)

போலிப் பட்டங்களுடன் பொது மற்றும் தனியார் நிறுவனங்களுடன் மட்டுமே பதியப்பட்டுள்ள 30.000 அதிகமான வெளிநாட்டு போலி பொறியியலாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக சவுதி பொறியியலாளர் சபை தகவல் வெளியிட்டுள்ளது.
இச்சபை இது வரை 30,000 ற்கு அதிகமான போலி பொறியியல் பட்டங்களை பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
சவுதி அரேபிய பொறியியல் துறையை மேம்படுத்தும் குழுவானது பொறியியலாளர் என்று தயாரித்துள்ள அல்லது பொறியியல் அங்கிகாரம் பெறாதவர்களை வேலைக்கமர்த்த அனுமதிக்கக் கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக பொறியியல் துறையை மேம்படுத்தும் குழு உத்தரவிட்டுள்ளது.

 

கட்டிட நிறுவனங்களானது பொறியியலாளர்களை வேலைக்கு அமர்த்தும் போது போலிப்பட்டங்கள் மற்றும் பொறியியல் வேலைக்கு தகுதியற்றவர்கள் தொடர்பில் ஆராயுமாறு இக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.
தற்போது (SCE) எனும் அமைப்பானது சவுதி , வெளிநாட்டு மற்றும் பொறியியல் நிபுனர்களின் பட்டங்களை சரிபார்த்து சாண்றளிக்கும் கடமையை செய்து வருவாதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
இவ்வமைப்பானது உண்மையான மற்றும் போலிசாண்றிதழ்களை அடையாளம் காணும் சர்வதேச நிறுவனங்களுடன் கலந்து ஆலோசித்து தமது கடமையை மேற்கொள்வதாகவும்
போலிப்பட்ட பொறியியலாளரை கண்டறிவோமானால் உள்துறை அமைச்சுக்கும் குறிப்பிட்ட கட்டிட நிறுவனத்திற்கும் தெரிவித்து வருவதாக சவுதி பொறியியல் அமைப்பு தெரிவித்துள்ளது.

 

30,000 fake engineers netted

http://www.arabnews.com/news/510011

Web Design by Srilanka Muslims Web Team