35 சதவீதத்தால் பேருந்து கட்டணங்களும் அதிகரிப்பு! - Sri Lanka Muslim

35 சதவீதத்தால் பேருந்து கட்டணங்களும் அதிகரிப்பு!

Contributors

தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (19) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து பிரயாண கட்டணங்களை 35 சதவீதத்தினால் அதிகரிக்க  தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக, இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

பேருந்து கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் போக்குவரத்து அமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து மேற்படி தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்  தெரிவித்துள்ளது.

அதற்கமைய, 20 ரூபாவாக காணப்பட்ட குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 27 ரூபாவாக அதிகரிப்படுமென இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி என்பன எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளன.

இந்த நிலையில், பேருந்து கட்டணங்கள் 40 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்ட வேண்டுமென குறித்த சங்கம் கோரிக்கை முன்வைத்திருந்தது.

Web Design by Srilanka Muslims Web Team